இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டீமேக் 

Chandru
புதிதாக பதவியேற்ற இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர், இகோர் ஸ்டீமேக்
புதிதாக பதவியேற்ற இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர், இகோர் ஸ்டீமேக்

இகோர் ஸ்டீமேக் இந்திய கால்பந்து அணிக்கு பதவியேற்றிருக்கும் புதிய தலைமை பயிற்சியாளர். ஸ்டீமேக்கின் பயிற்சியில் தாய்லாந்தில் நடக்க உள்ள கிங்க்ஸ் கோப்பைக்கு செல்லும் இந்திய அணி, புது தில்லியில் நடக்கவிருக்கும் பயிற்சி முகாமில் அணியின் அனைத்து வீரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஸ்டீமேக் கூறியுள்ளார். இந்தியாவின் முதன்மை நட்சத்திர வீரர் சுனில் சேத்திரியும் இதற்கு விதிவிலக்கல்ல.புது தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ஸ்டீமேக் கூறியது, தான் தினமும் பத்திக்கையாளர்களிடம் பேச உள்ளதாகவும் , தான் தினமும் வீரர்களுடனும் பேச உள்ளதாகவும் கூறி இதுவே தன் அனுகுமுறை என்றும் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுனில் சேத்திரியை பற்றி ஸ்டீமேக் கூறுகையில், "சுனில் மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஒரு வீரர். அது மட்டுமின்றி அதிக கோல்களை அடித்த வீரரும் கூட. .இவர் பல போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால், அவர் தன் இடத்திற்காக கடுமையாக போட்டியிட வேண்டி இருக்கும்" என கூறியுள்ளார். நாம் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், கால்பந்து அப்பிடியொரு விளையாட்டுதான் எனவும் ஸ்டீமேக் கூறினார். முன்னர் விளையாடிய விளையாட்டை கொண்டு தற்போதைய நிலையை எடைபோட முடியாது என்று இவர் கூறினார்.

தான் குருபிரித் மற்றும் ஜிங்கான் ஆகிய வீரர்களிடமிருந்தும் நல்ல விளையாட்டை எதிர்பார்த்து உள்ளதாகவும் இளம் வீரர்கள் சேத்திரி மற்றும் ஜிங்கானின் வழியில் செல்வதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் ஸ்டீமேக்.

தான் சேகரித்த தகவலின் மூலம் இந்திய அணியை "ஸ்லீப்பிங் ஜெயன்ட்" (sleeping gaint) எனக் குறிப்பிட்டுள்ளார். தான் இந்திய கலாச்சாரத்தை பற்றியும், இந்திய கால்பந்தை பற்றியும் , லீக் போட்டிகளை பற்றியும் மற்றும் வீரர்களுக்கு மக்கள் இடையே உள்ள பெயரை பற்றியும் கேள்விப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தான் கிட்டதட்ட அனைத்து ஐ.எஸ்.எல். போட்டிகளையும் பார்த்துள்ளதாக கூறினார். இதில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் 2017 ல் 17 வயதுக்கு உட்பட்ட உலகக்கோப்பையில் விளையாடினார்கள் என தெரிவித்து உள்ளார். அதிக போட்டிகளில் பங்கேற்காத சில வீரர்கள் நல்ல ஆற்றல் கொண்டுள்ளவர்கள் எனவும் கூறியுள்ளார் ஸ்டீமேக்.

இகோர் ஸ்டீமேக் பற்றிய சில தகவல்கள்:

குரோஷிய நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஸ்டீமேக். இவர் 6 செப்டம்பர் 1967 அன்று பிறந்துள்ளார். இவர் சிறு வயதிலிருந்தே கால்பந்து மீது ஆர்வம் கொண்டுவராக திகழ்ந்து உள்ளார். இவர் குரோஷிய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 1998 உலகக்கோப்பையில் விளையாடினார். அந்த வருடம் குரோஷிய அணி 3 வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் குரோஷிய அணியில் கிட்டதட்ட 30 வருடங்கள் விளையாடி ஓய்வு பெற்றவர். பின்னர் தனது நாட்டின் அணிக்கே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2012 முதல் 2014 வரை குரோஷிய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

15 மே 2019 இவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுள்ளார். தாய்லாந்தில் நடக்கும் கிங்க்ஸ் கோப்பையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என பெரிதும் நம்பப்படுகிறது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now