இந்திய கால்பந்துஅணி கிங்ஸ் கப் என்றழைக்க படும் வருடாந்திர தொடரில் விளையாட தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் 23 பேர் கொண்ட வீரர்களை தேர்ந்தேடுத்துள்ளார். இதில் 6 புது முகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டீபன் கான்ஸ்டான்டின் பயிற்சியாளராக இரண்டாவது முறையாக ஐந்து வருடம் பணியாற்றினார். ஒவ்வொரு முறையும் அவர் அணியை தேர்ந்தெடுக்கும் பொழுது ரசிகர்களிடையே கோபம் கொந்தளிக்கும். திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவருகிறார் என்ற பேச்சுக்கள் பெருமளவில் எழும். உள்ளூர் விளையாட்டான ஐஎஸ்ல் மற்றும் ஐலீக் போட்டிகளில் திறம்பட செயலாற்றிய பல வீரர்களை அவர் அலட்சிய படுத்தியதாக பெருவாரியான ரசிகர்கள் பல தருணங்களில் குறை கூறியுள்ளனர். ஆனால் தற்போது குரோஷியா நாட்டை சேர்ந்தவரும் முன்னாள் வீரர் உலகை கோப்பை வீரருமான இகோர் ஸ்டிமாச்ன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவரின் இந்த தேர்வு பல ரசிகர்களையும் ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக உள்ளூர் கால்பந்து தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்கள் இந்த முறை தேர்வு செய்ய பட்டுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மைக்கேல் சூசைராஜும் அடங்குவர். இவர் 2017-18 ஆம் ஆண்டு சென்னை சிட்டி எப்சி அணிக்காக விளையாடினர் பின்பு 2018-2019 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூர் எப்சி இவரை தன்வச படுத்தியது. எதிர்பார்ப்புக்கு ஈற்றார் போல் இவர் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈற்றார்.
போட்டியை நடத்தும் தாய்லாந்து மற்றும் குரகோவ் வியட்னாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றனர். 47வது முறையாக இந்த தொடர் நடத்தப்படுகிறது. உலக கால்பந்து சம்மேளனம் பிபா வால் அங்கீகரிக்க பட்ட தொடரின் முடிவுகள் மாதாமாதம் வெளியிடப்படும் பிபா ரேங்கிங்கிற்கு இந்த போட்டிகளின் முடிவு எடுத்து கொள்ளப்படும்.
கிங்ஸ் கப் எனப்படும் தொடர் வருடாவருடம் தாய்லாந்து கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. இதில் ஸ்லோவேகியா அரபு அமீரகம் கபோன் மற்றும் தாய்லாந்து பங்கேற்றன. இதில் ஸ்லோவேகியா இறுதி போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற கோல் வெற்றிபெற்று வாகை சூடியது.
அணியின் விவரம் மற்றும் அவர்கள் உள்ளூர் அணியின் விவரம் வருமாறு:
டிபெண்டெர்ஸ்: ப்ரிட்டம் கோட்டல் (எடிகே), ராகுல் பிகே (பெங்களூரு எப்சி), சந்தேஷ் ஜின்கண் (கேரளா ப்ளாஸ்டர்ஸ்), அடில் கான் (எப்சி புனே சிட்டி), சுபாசிஸ் பொஸ் (மும்பை சிட்டி எப்சி).
மிட்பீல்டர்ஸ்: உடண்ட்டா சிங்க் (பெங்களூரு எப்சி), ஜாக்கிசாந்த் சிங்க் (எப்சி கோவா), பிராண்டன் பெர்னாண்டஸ் (எப்சி கோவா), அனிருத் தாபா (சென்னையின் எப்சி), ராய்னிர் பெர்னாண்டஸ் (மும்பை சிட்டி எப்சி), ப்ரொனாய் ஹால்டேர் (எடிகே), வினித் ராய் (டெல்லி டயனமோஸ்), சாகல் அப்துல் (கேரளா ப்ளாஸ்டர்ஸ்), அமர்ஜித் சிங்க் (இந்தியன் ஏரௌஸ்), லாலியஞ்சுவளா சங்கிட்டே (டெல்லி டயனமோஸ்), மைகேல் சூசைராஜ் (ஜாம்ஷெட்பூர் எப்சி).
போர்வேர்ட்ஸ்: பால்வான்ட் சிங்க் (எடிகே), சுனில் செட்ரி (பெங்களூரு எப்சி) (, பாறுக்ஹ் சவுதிரி (ஜாம்ஷெட்பூர் எப்சி), மண்விர் சிங்க் (எப்சி கோவா).
கோல்கீப்பர்: குருப்ரீட் சிங்க் சந்து (பெங்களூரு எப்சி), அம்ரிந்தர் சிங்க் (மும்பை சிட்டி எப்சி), கமல்ஜித் சிங்க் (எப்சி புனே சிட்டி).