மவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி

Jose Mourinho
Jose Mourinho

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோஸ் மவுரினோ இந்த சீசனுக்கான சாம்பியன்ஸ் லீக் அணியை அறிவித்துள்ளார். இந்த அணியை பார்க்கும் போது ரொனல்டோவை விட மெஸ்ஸியே சிறந்தவர் என மவுரினோ நம்புவதாக தெரிகிறது.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற 2018-19 சாம்பியன்ஸ் லீக் கோப்பை இறுதிப் போட்டியில், டோட்டஹம் அணியை தோற்கடித்து லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல், இந்த கோப்பையை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளில் பார்சிலோனா மற்றும் பேயர்ன் முனிச் அணியை முந்தியுள்ளது லிவர்பூல். சம்பியன்ஸ் லீக் கோப்பையை அதிக முறை வென்ற் அணிகளின் பட்டியலில், 13 முறை வென்று முதல் இடத்தில் உள்ளது ரியல் மாட்ரிட்.

சாம்பியன்ஸ் லீக்கில் 12 கோல்களை அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் மெஸ்ஸி. 2011/12-க்குப் பிறகு முதல் முறையாக இந்த கௌரவத்தை ரொனால்டோ இழந்துள்ளார். இந்த வருடம் அவர் ஆறு கோல் மட்டுமே அடித்துள்ளார். மேலும், அவரது ஜூவெண்டஸ் அணி காலிறுதியில் அஜக்ஸ் அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. 2013/14-க்குப் பிறகு முதல் முறையாக மெஸ்ஸி அல்லது ரொனல்டோ பங்கேற்காத இறுதிப் போட்டியாகும் இது அமைந்துள்ளது.

இந்த ஆண்டு லா லீகா மற்றும் சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சிறப்பான சாதனையை படைத்துள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இதனால் மதிப்புமிக்க ஐரோப்பியன் தங்க காலனி விருதை வென்றுள்ளார். ஆச்சர்யம் அளிக்கும் வகையில், இந்த விருதை ரொனால்டோ இதற்கு முன்பு மூன்று முறை வாங்கியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்தே வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார் மவுரினோ. குறிப்பாக, கோப்பையை வென்ற லிவர்பூல் அணியிலிருந்து ஆறு வீரர்களை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விர்ஜில் வான் டிஜிக் ராஜா போன்றவர். மிகச் சிறந்த வீரரும் கூட. அதன் பிறகு அஜக்ஸ் அணியின் இளம் கேப்டன் டீ லிஜிட். இந்த சம்பியன்ஸ் லீக்கில் அற்புதமான கண்டெடுப்பு இவர் தான். பல வீரர்கள் அற்புதமாஅக் விளையாண்டுள்ளனர். ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளை மட்டும் தான் கனக்கில் எடுத்துக் கொண்டுள்ளேன். அரையிறுதியின் முதல் லெக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் மெஸ்ஸியின் பெயரை இதில் சேர்க்கிறேன்” என்றார்.

De ligt
De ligt

மவுரினோ தேர்வு செய்த வடிவம்: 4-3-3

அவர் தேர்வு செய்த அணி:

கோல்கீப்பர்: அலிஸன் பெக்கர் (லிவர்பூல்)

ரைட் பேக்: ட்ரெண்ட் அலெக்ஸண்டர் அர்னால்ட் (லிவர்பூல்)

லெஃப்ட் பேக்: அண்டீ ராபர்ட்ஸன் (லிவர்பூல்)

செண்டர் பேக்: விர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்) டீ லிஜிட் (அஜக்ஸ்)

மிட் ஃபீல்டர்கள்: ஃப்ரெங்கி டீ ஜோங் (அஜக்ஸ்), டானி வன் டீ பீக் (அஜக்ஸ்), கிறிஸ்டியன் எரிக்ஸன் (டோட்டஹம்)

ஃபார்வார்ட்: லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா), சடியோ மனே (லிவர்பூல்), முஹமது சாலா (லிவர்பூல்).

புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்து எந்த அணிக்கு மவுரினோ பயிற்சி அளிக்கப் போகிறார் என்ற விவரம் ரகசியமாக உள்ளது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now