UEFA சாம்பியன்ஸ் லீக் ரவுண்டு 16ன் கடைசி கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பலம் வாய்ந்த ஜுவென்டஸ் மற்றும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணிகள் மோதின. ஏற்கனவே நடந்த முதல் லெக் போட்டியில் 0-2 என பின் தங்கிய ஜுவென்டஸ், இதில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற நிலையில் இன்று களமிறங்கியது. இதில் வெற்றி பெரும் அணி மட்டுமே காலிறுதிக்கு தகுதி பெரும்.
இப்படி ஒரு சூழலில் ஜுவென்டஸ் அணி தனது சொந்த மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் களம் கண்டது. அத்லெடிகோ 2-0 என முன்னிலையில் உள்ளதால், இந்த போட்டியில் தடுப்பாட்டம் ஆடி ஜுவென்டஸ் அணியை கோல் போடாமல் நிறுத்தினாலே போதும் என்ற எண்ணத்தில் களம்கண்டது.
ஜுவென்டஸ் அணியின் வியூகம்: 4-3-3
அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியின் வியூகம் : 4-4-2
ஆட்டம் தொடங்கிய முதலே ஜுவென்ட்ஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தது. எனவே ஜுவென்டஸின் தாக்குதல் அட்டமா? அத்லெட்டிக்கோவின் தடுப்பாட்டமா? என்ற பரப்பாக நகர்ந்தது.
ஆட்டத்தின் 27' நிமிடத்தில் ரொனால்டோ தனது வித்தையை காட்டினார். பெடெரிக்கோ பெர்னார்ட்ஸ்ச்சி அத்லெட்டிக்கோ டிபென்டெர்களை கடந்து ஒரு கிராஸ் பால் அடித்தார். இடையில் நின்று கொண்டிருந்த ரொனால்டோ, ஜுவான்பிரான்க்கு (அத்லெட்டிக்கோ) மேலே எகிறி ஒரு அற்புதமான ஹெட்டர் அடித்தார். இதை ஓப்ளாக் தடுக்க முடியாததால் கோலாக மாறியது.
பின்பு பதறிய அத்லெட்டிக்கோ கோல் போட முயற்சித்தது. ஆனால் ஜுவென்டஸின் தாக்குதல் ஆட்டம் அத்லெடிகோ ஏரியா பக்கம் பந்து செல்லவே விடவில்லை. இதற்கிடையே பெர்னார்ட்ஸ்ச்சின் ஒரு பிரீ கிக் கிராஸ்பாரை தாண்டி சென்றது. தொடர்ந்து சான்சலஸ் ஒரு கிராஸ் அடிக்க அதையும் அற்ப்புதமான ஹெட்டர் மூலம் கோலாக மாற்றினார் ரொனால்டோ. ஓப்ளாக் அந்த பந்தை ஒரு பெரிய முயற்சியுடன் தடுக்க முயற்சித்தார்.
இந்த கோலானது சர்ச்சைக்கு உள்ளானது. உடனே ரெபிரீ இதனை உறுதி செய்ய விளைந்தார். வீடியோ ரீபிளேவில் பந்து கோல் போஸ்டை கடந்து சில சென்டிமீட்டர் அளவு சென்றதால் கோல் என அறிவித்தனர்.
ஆட்டத்தின் 49' நிமிடத்தில் 2-2 என சமனில் வந்து நின்றது. அத்லெட்டிக்கோ எப்படியாவது ஒரு கோல் போட வேண்டும் என்று இரு முயற்சிகள் செய்தது. மொரட்டா ஜுவென்டஸின் டிபென்டெர்களை தாண்டி கோக்கே உதவியுடன் ஒரு பந்தை அடித்தார். ஆனால் அது கோல் போஸ்டிலிருந்து விலகி சென்றது.
இடையே விட்டாலோ மற்றும் ஏன்ஜெல் கொறீயா களம் இறக்கப்பட்டனர். இவர்கள் அணியின் வெற்றிக்காக சிறிது போராடினர் ஆனால் அதற்க்கு எந்த பயனும் கிட்டவில்லை.
ஆட்டத்தின் 86' நிமிடத்தில் பெர்னார்ட்ஸ்ச்சி டிபென்டெர்களை தாண்டி செல்ல முயற்சித்தார். இடையே புகுந்த கொறீயா பவுல் செய்தார். இதனால் ஒரு பெனால்டி வாய்ப்பு ஜூவென்டஸ்க்கு கிட்டியது. வழக்கம்போல ரொனால்டோ இந்த வாய்ப்பை ஏற்றார். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி ஒரு அசத்தல் கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தின் அவரது ஹாட்ரிக் கோலானது. இதன் மூலம் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் சாதனையை சமன் செய்தார்.
பிறகு ஆட்டம் வெகு சீக்கிரமாக ஜுவென்டஸ் பக்கம் சாய்ந்தது. கோல் வறட்சியில் இருந்த ரொனால்டோ ஹாட்ரிக் அடித்து தனது அணியை காலிறுதிக்கு அழைத்து சென்றார்.