கொச்சியில் நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் போட்டியில் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றிவாகை சூடியுள்ளது, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி. சென்னை அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக 14 தோல்விகளை கண்ட மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, இந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி.
கேரளா அணி வீரர் மடேஜ் பாப்டல்னிக் ஆட்டத்தின் 23-வது மற்றும் 55-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து தனது அணி வெற்றி பெற அச்சாரம் போட்டார். பிறகு, இளம் நடுக்கள பீல்டரான சாஹல் அப்துல் சமாத் அடித்த 71வது நிமிட கோலானது அணியின் வெற்றியை உறுதி செய்தது.
இந்த ஐ.எஸ்.எல் சீசனில் தடுமாறி கொண்டிருக்கும் சென்னையின் எப்சி அணிக்கு தொடர்ச்சியான 12வது தோல்வியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் பதினாறு போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளோடு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 8-வது இடத்திற்கு முன்னேறியது.
இருப்பினும் சென்னையின் எப்சி அணியினர் தங்களது போராட்டத்தை இறுதிவரை தொடர்ந்தனர். குறிப்பாக சென்னை கோல் கீப்பர் கரண்ஜித் சிங் இருமுறை எதிரணியினர் கோல்களை அடிக்கும்போது அவர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்.
மேலும், ஸ்லாவிசா டோஜனாய்க்ஸ் அடித்த கோல் முயற்சியை சிறப்பாக தடுத்தார். அதனைத் தொடர்ந்து பாப்லேட்னிக் கோல் முயற்சியும் இவரால் தடுக்கப்பட்டது.
ஆனால் போட்டியின் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருந்த கேரளா அணி ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. சென்னை கோல்கீப்பர் கரண்ஜித் சிங்கின் கடும் நெருக்கடியும் பொருட்படுத்தாது தொடர்ந்து மூன்று கோல்களை அடித்தனர், கேரள அணியினர்.
மற்றொரு முனையில் போராடிக்கொண்டிருந்த ஜான் கிரேக்கரின் முயற்சியினால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.பெகுசன் மற்றும் செமின்லன் தங்கெல் ஆகியோரின் கோல் முயற்சியை ரஞ்சித் தடுத்திருக்காவிட்டால் கேரளா அணி இன்னும் இரு கோல்களை அடித்து இருக்கும்.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் போட்டியின் இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது. தங்கெலின் வெகுவிரைவான அட்டாக் மற்றும் சாஹலின் ரைட் விங் பலம் ஆகியவற்றை சென்னை வீரர்களால் தடுக்க இயலவில்லை.
தொடர்ந்து கோல்களை அடித்த கேரள வீரர்களை சென்னை அணியினரால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியவில்லை.மேலும், கேரளா கோலடிக்கும் சமயத்தில் சென்னை அணி வீரர் கிறிஸ்டோபர் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கினார்.
மேலும், தங்களது சொந்த மண்ணில் விளையாடும் கேரள அணியினர் ஆட்டத்தின் மூன்றாவது கோலை 71-வது நிமிடத்தில் அடித்தனர். மீண்டும், சமாத் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். எதிரணி வீரர்கள் அவரை கோல் அடிக்காவண்ணம் சூழ்ந்தனர். ஒன்றிரண்டு முயற்சி செய்தும் அவருக்கு பக்கபலமாக தங்கெல் உதவ முன்வரவில்லை. ஆனாலும், தனது முயற்சியை கைவிடாது கரண்ஜித்தை தாண்டி பந்து கோல் போஸ்டை தாண்ட செய்தார், சமாத்.
இறுதியில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் சென்னையின் எப்சி அணியை அபாரமாக வீழ்த்தியது.