கிங்ஸ் கோப்பை 2019: முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான 3 காரணங்கள்

சுனில் ஷேத்ரி
சுனில் ஷேத்ரி

இகோர் ஸ்டீமேக் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் குரகுவா அணியிடம் தோல்வி அடைந்தது. போட்டி ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களில் இந்திய அணி நன்றாக தான் ஆடியது. ஆனால் அடுத்தடுத்து குரகுவா அணியினர் தொடுத்த தாக்குதலில் நிலை குலைந்து போனது இந்தியா. 31-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சுனில் ஷேத்ரி கோல் அடித்தாலும், முதல் பாதி முடிவில் மூன்று கோல்களை அடித்திருந்தது குரகுவா.

அதன் பிறகி இரண்டாம் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணி தோற்றதற்கான 3 காரணங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

3. தடுப்பாட்டத்தில் கோட்டை விட்ட இந்தியா

தடுப்பாட்டத்தில் கோட்டை விட்ட இந்தியா
தடுப்பாட்டத்தில் கோட்டை விட்ட இந்தியா

ஸ்டீபன் கான்ஸ்டைண்டைன் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில், தடுப்பாட்டத்தில் இருக்கும் பலவீனத்தை எப்படி களைவது என்ற கவலைகள் இருந்தது. இதனை போக்க பல கலவையில் வீரர்களை மாற்றி முயற்சி செய்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்து. ஆனால் முக்கியமான நேரத்தில் இது தகர்ந்துள்ளது.

இதை ஸ்டீமேக் கவனத்தில் கொள்வார் என நினைத்திருந்த வேளையில், தாக்குதல் ஆட்டத்தையே அவர் கடைபிடிக்க விரும்புகிறார் என்பது அவர் அறிவித்த அணியின் மூலம் தெரிந்தது. 23 பேர் கொண்ட அணியில் வெறும் ஐந்து பேர் மட்டுமே தடுப்பாட்டகாரர்கள். பலம் வாய்ந்த குரகுவா அணிக்கு எதிரான போட்டியில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் பலவீனம் அழகாக வெளிப்பட்டது.

அணுபவமற்ற ராகுல் பெக்கே மத்திய தடுப்பாட்டகாரராக விளையாடினார். ஆனால் பல சமயங்களில் தனது இடத்தை விட்டு நகர்ந்து இடது பக்கத்திற்கே சென்று கொண்டிருந்தார். இதனால் அவருக்கும் ஜிந்தேஷ் ஜிங்கானுக்கும் இடையில் இடைவெளி அதிகமானது. இதை குரகுவா வீரர்கள் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டனர்.

2. குரகுவாவின் அற்புதமான முதல் பாதி ஆட்டம் முடிவை திர்மானித்தது

மிக சாதூர்யமாக விளையாண்ட குரகுவா வீரர்கள்
மிக சாதூர்யமாக விளையாண்ட குரகுவா வீரர்கள்

குரகுவா அணி டெக்கினிக்கல் விஷயத்தில் மட்டுமல்லாமல் அந்த அணியின் பல வீரர்கள் உடலியல் அம்சத்திலும் இந்தியாவை விட பலமிக்கவர்களாக இருந்தார்கள். ஆட்டத்தின் முதல் பதினைந்து நிமிடங்களில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது குரகுவா. இந்திய தடுப்பாட்டத்தை எப்போது உடைத்தார்களோ, அதன் பிறகு கோல் மழை பொழிய தொடங்கியது.

ஐரோப்பிய கிளப் அணிகளுக்காக விளையாடும் மூன்று வீரர்களே குரகுவா அணிக்காக அன்றைய போட்டியில் கோல் அடித்தனர். நீண்ட காலம் டச்சு காலனியாக இருந்த காரனத்தால், இவர்கள் விளையாட்டிலும் டச்சு பாணி தென்படுகிறது. டச்சு கால்பந்து வீரர் பேட்ரிக் க்லுவெர்ட் 2016-ம் ஆண்டு வரை குரகுவா அணிக்கு பயிற்சி அளித்தார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

1. இந்தியாவின் தாக்குதல் ஆட்டத்தில் வீரியம் இல்லை

இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடியது இந்திய அணி
இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடியது இந்திய அணி

தாக்குதல் பானியிலான ஆட்டத்தை இந்திய அணி விரும்புகிறது என்பதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட ஆசியன் கோப்பையில் தாய்லாந்திற்கு எதிரான முதல் போட்டியில் இதை வெளிப்படுத்தியது. எனினும் அப்போதைய பயிற்சியாளர் கான்ஸ்டைண்டைன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால், பல போட்டிகளில் இந்திய அணி கோல்கள் அடிப்பதை விட கோல் போகாமல் பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்தியது.

இந்த மனநிலையிய ஸ்டீமேக் மாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில், இந்த தோல்விக்குப் பிறகு பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய நிலையில் உள்ளார் பயிற்சியாளர்,. இரண்டாம் பாதியில் குரகுவா அணிக்கு ஈடு கொடுத்து விளையாடியது இந்தியா. இந்த சமயத்தில் குரகுவா அணியினர் சோர்வாக காணப்பட்டனர். ஆனால் இதை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கோல் அடிக்க முயற்சி செய்யவில்லை.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now