ஃபிஃபா அமைப்பின் விதிமுறையை மீறி இருப்பதால் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் மயிரிழையில் வீரர்களின் டிரான்ஸ்பர் தடையில் இருந்து தப்பி இருக்கிறது. இதற்கான முழு காரணத்தை தற்போது விரிவாகக் காண்போம்.
செல்சி அணிக்கு நேர்ந்த சோகம்
கடந்த 2017-18 ஆம் ஆண்டு சீசனில் பிரீமியர் லீக் தொடரின் கிளப் அணியான செல்சி அணி விதிமுறையை மீறி 18 வயதிற்கு உட்பட்ட வீரர்களை ஒப்பந்தம் செய்தது கண்டறியப்பட்டதால், ஃபிஃபா அமைப்பின் கமிட்டி கடுமையாக அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 2019-20 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னர் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் தடை விதித்தது. ஒரு வருட தடையுடன், 6 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் கட்டவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டது செல்சி அணி தள்ளப்பட்டது.
தடை காரணமாக, செல்சி அணியால் வீரர்களை விற்க முடியுமே தவிர மற்ற அணியிலிருந்து வேண்டிய வீரர்களை வாங்குவதற்கு முற்றிலும் ஒரு ஆண்டு காலம் தடை ஆகும். விசாரணையில் செல்சி அணியின் மீது 29 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தப்பிப்பிழைத்த மான்செஸ்டர் சிட்டி
2018-19 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரத்தில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக செலவழித்து வீரர்களை பெற்றதாக குற்றங்கள் மான்செஸ்டர் சிட்டி அணி மீது எழுந்தன. இதுபோன்ற விதி மீறல்களை கண்டறிய, சிறப்பு கமிட்டி ஒன்றை நிர்ணயித்து கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக கண்காணித்து வருகின்றது ஃபிஃபா அமைப்பு.
மான்செஸ்டர் சிட்டி அணியின் குற்றமும் அந்த கமிட்டியால் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. விசாரணையில் மான்செஸ்டர் சிட்டி அணி 18 வயதுக்கு கீழே உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து விதிமுறையை மீறி இருப்பதாக குற்றம் நிரூபணம் ஆனது. அதேபோல் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிக அளவுவிலான டிரான்ஸ்பர் செய்த குற்றமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் சிட்டி அணியை விளக்கமளிக்க ஃபிஃபா அமைப்பின் கமிட்டி நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளித்தது மான்செஸ்டர் சிட்டி, சிட்டி அணியின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்ததால் அபராததோடு விடப்பட்டது. வீரர்களை ஒப்பந்தம் செய்ய தடை ஏதும் இல்லை என்றும் எச்சரிக்கை செய்து விலக்கு அளித்தது.
இனி இதேபோல் இன்னொரு முறை செய்யப்பட்டால் மான்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இயலாது என்ற நிபந்தனையையும் ஃபிஃபா அமைப்பு விதித்தது. மேலும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு அபராதமாக 3 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் விதிக்கப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி, மிகவும் கவனத்துடன் ஈடுபட்டதை நம்மால் காண முடிந்தது.
அட்லெடிகோ அணியில் இருந்து ரோட்ரி, ஜுவென்டஸ் அணியில் இருந்து கன்செலோ ஆகியோர் இந்த ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணியில் வாங்கப்பட்ட முக்கிய வீரர்கள் ஆவர்.