மான்செஸ்டர் சிட்டி சால்கேக்கு எதிரான 7-0 என இரண்டாவது லெக்கில் வென்று சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் காலிறுதி போட்டிக்கு முன்னேறியது, மொத்தமாக இரண்டு லெக்கிலும் 10-2 கோல்கள் என அபாரமாக வென்று முன்னேறியது.
துக்கம் முதலே ஆதிக்கம்
போட்டியின் முதல் 20 நிம்டங்கள் மட்டுமே பந்தை சாலகே அணியால் தொட்டு பார்க்க முடிந்தது. அதன் பின் அவர்கள்கண் மூடி திறப்பதற்குள் கோல் மழை பொழிய துவங்கியது என்று தான் கூற வேண்டும்.
ஆம், ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சால்கே அணியின் பனேகா செய்த தவறால் பெனால்டி வழங்கப்பட்டு, அதை 35வது நிமிடத்தில் லாவகமாக நெட்டில் தள்ளிவிட்டார் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுரோ. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அகுரோ 38வது நொடியில் ஒரு கோல் அடிக்க 2-0 (5-2) என ஆனது.
அதனை தொடர்ந்து ஜின்செங்கோ கொடுத்த அற்புதமான பாஸ்ஸை லெரோய் சனே அபாரமாக கோல் அடிக்க, அரங்கமே கரகோஷத்தால் அதிந்தது.
சால்கே அணிக்கு இரண்டாவது பாதியில் தொடர்ந்த சோதனை
இரண்டாவது லெக்கின் முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாதியை தொடர்ந்தன இரு அணிகள். 53வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, அது ஆப்-சைடு என அறிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து பொழியும் கோல் மழை
ஆனாலும் விடாமல், 56வது நிமிடத்தில் ஸ்டெர்லிங் கோல் அடித்து இரண்டாவது பாதின் கணக்கை தொடர்ந்தார். 4-0 (7-2) என்ற மீளவே கட்டடத்திற்குள் தள்ளப்பட்டது சால்கே அணி. பட்டாக்காலிலே படும் என்பதற்கேற்ப, அடித்தது போதும் என்று விடாமல் அடுத்தடுத்த கோல் மழைகளை பொழிந்துகொண்டே போனது மான்செஸ்டர் சிட்டி அணி.
சனே அபாரம்
மீண்டும் 71வது நிமிடத்தில் சிட்டி அணியின் நடுகள வீரர் பெர்னாண்டோ சில்வா, சனே அஸ்சிஸ்ட் செய்ய கோல் ஆக்கினார். இது இந்த ஆட்டத்தின் 5வது கோல் ஆகும்.
அத்துடன் விட்டுவிடவில்லை, 78வது நிமிடத்தில் மீண்டும் சனே கொடுத்த அற்புதமான பாஸ்ஸை கோலாக்கினார் இளம் வீரர் பில் போடேன். இது சாம்பியன்ஸ் லீக் தொடரில் அவர் அடித்த முதல் கோல் ஆகும்.
இத்துடன் முடிந்துவிட்டதா?? இல்லை, 84வது நிமிடத்திலும் முன்கள வீரர் ஒரு கோல் அடிக்க 7-0 (10-2) என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது ஜெர்மனி நாட்டின் கிளப் அணியான சால்கே.
காலிறுதி சுற்று
இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்கு எளிதாக நுழைந்தது மான்செஸ்டர் சிட்டி அணி. இதற்க்கு முன்னதாக, மான்செஸ்டர் யுனைடெட், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர், அஜாக்ஸ், போர்டோ போன்ற அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தன.
நாயகன் சனே..
இப்போட்டியில் சிறப்பாக ஆடி ஒரு கோல் மற்றும் 3 அஸ்சிஸ்ட் செய்த சனே பேசுகையில், "இது எங்களுக்கு ஒரு நல்ல விளையாட்டாக அமைந்தது. அவர்கள் சாற்று கடினமானவர்கள் தான். ஆனால், அவர்களின் தவறுகளை நான் எளிதாக கண்டறிந்து , எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டோம். அவர்கள் இறுதிவரை தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை. அதுதான் இந்த படுதோல்விக்கு காரணம்" என தெரிவித்தார்.