ஐந்தாவது முறையாக எஃப்.ஏ கோப்பையை வென்றது மாண்செஸ்டர் சிட்டி

Chandru
கோல் அடித்த மகிழ்ச்சியில் சிட்டி வீரர்கள்
கோல் அடித்த மகிழ்ச்சியில் சிட்டி வீரர்கள்

எமிரேட்ஸ் எஃப்.ஏ கோப்பையின் இறுதியாட்டம் லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் 18.05.2019 அன்று நடந்து முடிந்தது. இதில் மாண்செஸ்டர் சிட்டி அணியும் வாட்போர்ட் அணியும் மோதிக் கொண்டனர்.

கோம்பேனி தலைமையில் மாண்செஸ்டர் அணியும் டீனி தலைமையில் வாட்போர்ட் அணியும் களம் இறங்கியது. போட்டி ஆரம்பித்த முதல் பத்தாவது நிமிடத்திலேயே வாட்போர்ட் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது, ஆனால் வாட்போர்டின் பெரேய்ரா கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார் , கோல் கீப்பரின் சமார்தியத்தால் கோல் தவிர்க்கப் பட்டது.

இடைவேளை முடிந்து இரண்டு அணிகளும் மைதானத்திற்குள் நுழைந்தது. வார்ட்போர்ட் அணி நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து முழு வீச்சில் விளையாட தொடங்கியது. ஆனால் வார்ட்போர்டின் வீரர்களால் கோல் கணக்கை பதிவு செய்ய முடியவில்லை. மான்செஸ்டர் சிட்டி அணியோ கோல்களை குவிக்க தொடங்கியது. தொடர்ந்து 60-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணி தனது 3-வது கோலை அடித்து அதன் வெற்றியை தட்டி பறிக்காதவாறு உறுதி செய்தது. இந்த முறை கோல் அடித்தவர் ப்ரூனே. இதன்மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனால் மான்செஸ்டர் சிட்டி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் தென்பட்டது.இதையடுத்து இருபத்தி ஐந்தாவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் டீ சில்வா அசத்தலான கோல் அடித்து தன் அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 38-வது நிமிடத்தில் சிட்டி அணியின் கேப்ரியல் ஜீசஸ் இரண்டாவது கோலை அடித்தார். 45-வது நிமிட இடைவேளை முடிவில் மான்செஸ்டர் சிட்டி முன்னிலை வகித்தது. இதன்மூலம் வார்ட்போர்ட் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

கோப்பை வென்ற மான்செஸ்டர் அணி
கோப்பை வென்ற மான்செஸ்டர் அணி

அதை தொடர்ந்து 68 ஆவது நிமிடத்தில் மாண்செஸ்டர் சிட்டி அணியின் கேப்ரியல் ஜிஸஸ் தனது இரண்டாவது கோல்லை அடித்து கலக்கினார். இவர் அடித்த கோல்லின் மூலம் 4-0 என்று முன்னிலை பெற்றது மாண்செஸ்டர் சிட்டி. வாட்போர்ட் அணியின் வெற்றி பெரும் நம்பிக்கை சுக்கு நூறாக நெருங்கியது.ரசிகர்கள் கவலை வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.மாண்செஸ்டர் சிட்டியின் ஆர்.ஸ்டெர்லிங் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து மேலும் இரண்டு கோல்களை அணிக்காக சேர்த்தார்.81 மற்றும் 87 ஆவது நிமிடங்களில் இவர் அடித்த் இரண்டு கோல்களின் மூலம் மாண்செஸ்டர் சிட்டி அணி 6-0 என்ற கணக்கில் வாட்போர்ட் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதையடுத்து மாண்செஸ்டர் சிட்டி அணியின் மேனேஜர் பெப் கௌர்டியோலா பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தனர. 2018/ 19 ஆண்டுகளில் மாண்செஸ்டர் சிட்டி அணி வாங்கும் நான்காவது கோப்பையாகும் இது. இதற்கு முன் கம்யுனிட்டி லிஸ்ட், கார்படோ கப், பிரீமியர் லீக் இப்போது எஃப்.ஏ கப் என தொடர்ந்து வெற்றிக் கணியை ருசித்துக் கொண்டிருக்கிறது மாண்செஸ்டர் சிட்டி. இதன் மூலம் 5 ஆவது முறையாக எஃப்.ஏ கோப்பையை வென்றுள்ளது மாண்செஸ்டர் சிட்டி.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now