பிரிமியர் லீக்கில் குறைவாக மதிப்பிடப்பட்ட 4 வீரர்கள் 

Chandru
பெர்னாடோ சில்வா
பெர்னாடோ சில்வா

1) பெர்னாடோ சில்வா

போர்ட்சுகல் நாட்டை பூூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரிமியர் லீக்கில் மாண்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடுகிறார். 24 வயதான பெர்னாடோ சில்வா 2018-19 இல் மாண்செஸ்டர் சிட்டி அணிக்காக 200 க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த போட்டிகளில் கிட்டதட்ட 50 கோல்களும், 40 க்கும் அதிகமான கோல்களை அசிஸ்ட் செய்தும் உள்ளார். இவர் ரைட் விங்க் மற்றும் மத்தியில் விளையாட கூடியவர், மைதானத்தில் வேகமாக செயல் படக்கூடிய இவர் துல்லியமாக பந்தை பாஸ் செய்வதில் வல்லவர் என்றே கூறலாம் இப்படி எல்லா விதத்திலும் நன்றாக விளையாட கூடிய பெர்னாடோ சில்வாவின் திறமை அங்கிகறிக்கபடவில்லை என்று தான் கூறு முடியும்.

2) வில்ஃப்ரெட் திடி:

வில்ஃப்ரெட் திடி
வில்ஃப்ரெட் திடி

வில்ஃப்ரெட் நிடி நைஜீரியா நாட்டை சேர்ந்தவர். இவர் பிரிமியர் லீக்கில் லைசெஸ்டர் அணிக்காக விளையாடுகிறார், 22 வயதான நிடி மிட்பீல்ட் மற்றும் டிபென்ஸ் இடங்களில் விளையாட கூடியவர். 80 போட்டிகளுக்கு மேல் லைசெஸ்டேர் அணிக்காக விளையாடி உள்ளார், இதில் 10 கோல்கள் மற்றும் 7 கோல்களுக்கு அசிஸ்ட் செய்துள்ளார், எதிர் அணியிடம் இருந்து பந்தை தட்டி சென்று டாக்கில் செய்வதில் இவர் கில்லாடி, இப்படி பல முறை எதிர் அணி கோல் போட விடாமல் தடுத்து தனது அணி வெற்றி பெற காரணமாக இருந்திருக்கிறார். இவரும் இவரது திறமையும் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை.

3) ஜேம்ஸ் மேடிசன்:

ஜேம்ஸ் மேடிசன்
ஜேம்ஸ் மேடிசன்

22 வயதான மேடிசன் இங்கிலாந்தை சேர்ந்தவர், இவர் ப்ரிமியர் லீக்கில் லைசெஸ்டேர் அணியில் விளையாடுகிறார், இதுவரை லைசெஸ்டேர் அணிக்காக கிட்டதட்ட 150 போட்டிகள் விளையாடி உள்ளார், இதில் 29 கோல்கள் மற்றும் 33 கோல்களை அஸ்சிஸ்ட் செய்துள்ளார். மீட்பில்டேர் மற்றும் அட்டாக்கிங் மிட்பீல்ட் பகுதிகளில் விளையாட கூடியவர், எதிர் அணி வீரர்களிடம் பந்தை ஏமாற்றி புயல் வேகத்தில் அதை கோலுக்கு எடுத்து செல்வதில் திறமை பெற்றவர். இவர் பல போட்டிகளில் தன் வேகத்தை வெளிப் படுத்தி அணிக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார், இருப்பினும் இவர் எங்கும் பெரிதாக பேசப்படவில்லை. மேடிசன் குறைவாக மதிப்பிடபட்ட ஒரு வைரம் என்று சொல்லலாம்.

4) வில்ஃப்ரெட் சாஹா:

வில்ஃப்ரெட் சாஹா
வில்ஃப்ரெட் சாஹா

கோட் டி இவொயிரி என்னும் நாட்டின் குடிமகன் வில்ஃப்ரெட் சாஹா. இவர் ப்ரிமியர் லீக்கில் கிரிஸ்டல் பாலஸ் அணிக்காக விளையாடுகிறார். 26 வயதான சாஹா ரைட் விங்கர் இடத்தில் முக்கியமாக விளையாடுபவர். இது வரை 300 போட்டிகளில் விளையாடியுள்ளார் 50 க்கும் அதிகமான கோல்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட கோல்களை அசிஸ்ட் செய்துள்ளார் இவர். 1.8 மீட்டர் உயரமுள்ள சாஹா பல போட்டிகளில் கோல்களை 50 மீட்டர் தொலைவில் இருந்தே அடிக்க கூடியவர். இவரின் இந்த திறமையான விளையாட்டு மிக குறைவாகவே மதிப்பிடபட்டுள்ள்து.

மேலே சொல்லப்படாத இது போல் இன்னும் நிறைய திறமையாளர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால் கால்பந்து ரசிகர்கள் வேதனையடைகின்றனர்.

Edited by Fambeat Tamil