சிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது

Chandru
இரு அணிகளும் தங்கள் தேசிய கீதங்களை பாடிக் கொண்டிருக்கின்றனர்
இரு அணிகளும் தங்கள் தேசிய கீதங்களை பாடிக் கொண்டிருக்கின்றனர்

கோப்பா அமேரிக்கா அரைஇறுதிப் போட்டியில் சிலி மற்றம் பெரு அணி மோதிக் கொண்டது , கால் இறுதியில் சிலி அணி கொலம்பியா அணியை 5-4 என்ற கணக்கில் வென்றது இதேப்போல பெரு அணியும் உருகுவே அணியை கால் இறுதியில் வென்று அறைஇறுதிக்கு முன்னேறியது.

மிகவும் எதிர்பார்புடன் ஆரம்பித்தது இந்த போட்டி, ஆரம்பித்த 17 ஆவது நிமடத்திலேயே சிலி அணியின் வீரர் அரங்குயிஸ் சுலபமாக கோல் அடிக்க கூடிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார். சிலி ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதை தொடர்ந்து பெரு அணியின் ஃபோளரஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி 20 ஆவது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோல்லை அடித்தார். மறுபடியும் சிலி அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அலக்ஸிஸ் தவற விட்டார் , இந்தமுறை பெரு அணியின் கோல்கீப்பர் பெட்ரோ கலீஸ்ஸின் சாமர்த்தியத்தால் கோல் தவிர்க்கபட்டது.

பெட்ரோ கலீஸ் பாய்ந்து கோல்லை தடுக்கிறார்
பெட்ரோ கலீஸ் பாய்ந்து கோல்லை தடுக்கிறார்

பிறகு 30 ஆவது நிமிடத்தில் பெரு வீரர் யோட்டுன் மிகச் சுலபமாக கோல் அடித்து அசத்தினார், பெரு 2 கோல்கள் அடித்து முன்னிலை வகுத்தது, இதனால் சிலி ரசிகர்களின் ஆரவாரம் குறைந்தது. இருப்பினும் சிலி விட்டுக்கொடுக்காமல் வேகமாக விளையாட தொடங்கியது 40 மற்றும் 43 நிமிடங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை கோல் ஆக்க முடியவில்லை, இதனால் 45 நிமிட இடைவேளையில் பெரு 2- சிலி 0 என்று முடிந்தது. இடைவேளை முடிந்து இரு அணிகளும் களம் இறங்கியது , மைதானத்தில் சிலி அணியின் ஆதிக்கம் காணப்பட்டது, 50 ஆவது நிமிடத்தில் சிலி அணிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு அமைந்து , துரதிர்ஷ்டவசமாக பந்து கம்பியில் பட்டு கோல் நழவியது, சிலி ரசிகர்கள் அழுகவே தொடங்கிவிட்டனர். பிறகு 72 ஆவது நிமிடத்தில் பெரு அணியின் அட்விங்குளா சிலி வீரரின் காலில் இடறியதற்க்கு ரெப்ரீ மஞ்சள் அட்டை காமித்து எச்சரித்தார்.1 நிமிடம் கழித்து அதேபோல சிலியின் புல்கர் மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கப்பட்டார். 75 ஆவது நிமிடத்தில் மீண்டும் சில்லிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது மீண்டும் அதை நழுவ விட்டனர், பெரு அணியின் கோல்கீப்பர் மிகவும் நன்றாக விளையாடினார், 90 நமிடத்திற்கு பின் சிறிது நேரம் வழங்கப்பட்டது இதில் பெரு வீரர் குவெரிரோ அணியின் 3 ஆவது கோல்லை அடித்ததில் பெரு சிலியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சந்தோஷத்தில் வீரர்கள்
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சந்தோஷத்தில் வீரர்கள்

இந்த போட்டியில் பெரு அணி வெற்றி பெற்றதற்க்கு பெரும் பங்காற்றியது கோல்க்கீப்பரே , பல இடங்களில் வேகம் மற்றும் விவேகத்தால் எதிர் அணி கோல் போடுவதை தடுத்து தன் அணியின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார். இதேப்போல் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

கோல் கீப்பரின் கண்ணத்தில் சக வீரர் முத்தமிடும் காட்சி
கோல் கீப்பரின் கண்ணத்தில் சக வீரர் முத்தமிடும் காட்சி

இறுதிப்போட்டி வரும் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணி அளவில் துவங்கும் இதில் பெரு பலம்வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்கிறது.

App download animated image Get the free App now