கிரிக்கெட், கால்பந்து மற்றும் ஹாக்கி என அனைத்து குழு விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெறும் வீரர்கள் தங்களுக்கென தனி எண்ணை தங்களது ஜெர்ஸியில் அணிந்திருப்பர். ரொனால்டோ 7 மற்றும் மெஸ்ஸி 10 என்ற எண்களை கெண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சில வீரர்கள் நாம் எங்கும் கண்டிறாத அளவிற்கு வித்தியாசமான எண்களை கொண்டுள்ளனர். அப்படி வித்தியாசமான ஜெர்ஸி எண்களைக் கொண்ட சில கால்பந்து வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) ஹிச்சம் ஜிரோலி
இதுவரை நாம் 0 என்ற ஜெர்ஸி எண்ணை கொண்டிருக்கும் வீரரை பார்த்தே கிடையாது. ஆனால் ஸ்காட்லாந்து அணியைச் சேர்ந்த ஜிரோலி முதல் முறையாக 0 என்ற எண்ணை கொண்டு கால்பந்து விளையாடி வருகிறார். அவரது பெயரில் உள்ள சில காரணங்களில் காரணமாக இந்த எண்ணை உபயோகிக்கிறார். ஸ்காட்லாந்து அணிக்காக 0 எண்ணை பயன்படுத்தும் முதல் வீரரும் இவரே.
#2) மேத்யூ ப்ளமினி
அர்சினல் அணியின் மிட் பீல்டரான ப்ளமினி 2008 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏசி மிலன் அணிக்கு ப்ரீ ட்ரான்ஸ்பர் முறையின் மூலம் சென்றார். அதனால் அவர் ஜெர்ஸி எண்ணை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அவர் தான் பிறந்த ஆண்டான 1984- லிருந்து 84 என்ற எண்ணை தேர்வு செய்து கொடார். இதே போல் இத்தாலி அணியினை சேர்ந்த வீரர்களும் தங்களது பிறந்த ஆண்டான 76 மற்றும் 80 போன்ற எண்களை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
#3) இவான் ஜமோரனோ
இதுலரை நாம் பார்த்தவர்கள் அனைவரும் தங்களது ஜெர்ஸியில் வித்தியாசமான எண்களை தான் கொண்டிருந்தனர். ஆனால் ஜமோரனோ அதையும் தாண்டி கூட்டல் குறியீடு ஒன்றினை தனது ஜெர்ஸி எண்ணில் இணைத்துள்ளார். இவர் இன்டர் மிலன் அணிக்காக அறகமுகமாகும் போது 9 என்ற எண்ணுடன் களம் கண்டார். ஆனால் ரொனால்டோ அந்த அணியில் இணைந்த பின் இவருக்கு 18 என்ற எண் வழங்கப்பட்டது. ஆனால் ஜமோரனோக்கு 9 என்ற எண்ணை ராசியான எண் என கருதி 18-ஐ 9 ஆக வித்தியாசமாக மாற்றியுள்ளார். அதாவது 18-ல் இரு எண்களுக்குமிடையே "+" என்ற குறியினை சேர்த்துக் கொண்டார். ஆனால் அந்த குறி அவரது ஜெர்ஸியில் சிறிய அளவிளேயே காணப்படும்.
#4) விக்டர் பெராலஸ்
மெக்ஸிகன் அணியினைச் சேர்ந்த வீரரான பெராலஸ் மூன்றிலக்க எண்ணை தனது ஜெர்ஸி எண்ணாக தேர்வு செய்துள்ளார். க்ளப் அணிக்காக விளையாடும் போது 143 என்ற வித்தியாசமான எண்ணைக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பும் போது 15 ஆக தனது எண்ணை மாற்றி விட்டார் அவர்.
#5) பிக்ஸின்டி லிஸாரசு
உலககோப்பையை வென்ற வீரரான லிஸாரசு 69 என்ற வித்தியாசமான எண்ணையே கொண்டுள்ளார். ஆதற்கு பின்னால் சில காரணஙாகளும் உள்ளன. அவர் பிறந்த ஆண்டு 16969, அவரது எடை 69 கிலோ மற்றும் அவரது உயரம் 1.69 மீட்டர் என 69 என்ற எண் இவரது வாழ்க்கையில் பல இடங்களில் ஒத்து போவதால் இந்த எண்ணை தனது ஜெர்ஸி எண்ணாக தேர்வு செய்துள்ளார் அவர்.