பிரீமியர் லீக் கேம் வீக் 18 முடிவுகள்

சாலா
சாலா

2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 18க்கு ஆன ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெற்றன.

ஜோஸே மௌரின்ஹோ
ஜோஸே மௌரின்ஹோ

சென்ற வாரம் லிவர்பூல் அணியிடம் தோல்வி அடைந்ததான் எதிரொலியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேனேஜர் பொறுப்பில் இருந்து ஜோஸ் மௌரின்ஹோ நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஓலே கன்னர் சொல்ஸ்ஜர் இந்த சீசன் இறுதி வரை தற்காலிக மானேஜராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வோல்வெர்ஹாம்டன் அணி இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத லிவர்பூல் அணியை எதிர்கொண்டது இதில் சாலா , வான் டைக் கோல் அடித்து லிவர்பூல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற உதவினர்.

ஆபமயாங்
ஆபமயாங்

சனிக்கிழமை 8 ஆட்டங்கள் நடைபெற்றன. ஆர்சனல் மற்றும் பர்ன்லி இடையே ஆனா ஆட்டத்தில் ஆர்சனல் அணி 3- 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது, ஆபமயாங்(2), இவோபி ஆர்சனல் அணிக்காக கோல் அடித்தனர்.பர்ன்லி அணி சார்பில் பார்ன்ஸ் ஒரு கோல் அடித்தார்

பலம் வாய்ந்த அணிகளான செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவின. செல்சி அணி லெய்செஸ்டர் சிட்டி அணியிடம் என்ற 0-1 கணக்கில் தோற்றது. மான்செஸ்டர் சிட்டி கிரிஸ்டல் பேலஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் போராடி தோற்றது. இதன் மூலம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன் புள்ளி பட்டியலில் லிவர்பூல் அணி முதலிடம் பெற்றது

டேவிட் ப்ரூக்ஸ்
டேவிட் ப்ரூக்ஸ்

போர்ன்மௌத் அணி பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் அணியை 2-0 என்ற கணக்கில் வென்றது.போர்ன்மௌத் அணியின் டேவிட் ப்ரூக்ஸ் கோல் அடித்து அந்த அணி வெற்றிபெற உதவினார் .நியூகேஸ்டெல் யுனைடெட் மற்றும் புல்ஹாம் இடையே நடந்த ஆட்டதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

வெஸ்ட்ஹாம் மற்றும் வாட்போர்ட் இடையே நடந்த ஆட்டத்தில் டேஉலோபியூ டீனி அடித்த கோல்களின் காரணமாக 0-2 என்ற கணக்கில் வாட்போர்ட் அணி வென்றது

ஹட்டர்ஸ்பீல்ட் அணியை சவுத்ஹாம்டன் அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. சவுத்ஹாம்டன் அணியின் சார்பில் இங்ஸ், ரெட்மன்ட், ஒபபெமி தலா ஒரு கோல் அடித்தனர். ஹட்டர்ஸ்பீல்ட் அணி சார்பில் பில்லிங் ஒரு கோல் அடித்தார்.

பால் போக்பா
பால் போக்பா

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கார்டிஃப் சிட்டி அணி புதிதாக மேனேஜரை நியமித்த மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-1 என்ற கணக்கில் கார்டிஃப் சிட்டி அணியை பந்தாடியது அந்த அணி சார்பில் லிங்கார்ட்(2), ராஷ்போர்ட், ஹெரேரா, மார்டியால் கோல் அடித்தனர். நட்சத்திர வீரர் பால் போக்பா 3 அசிஸ்ட் செய்தார். கார்டிஃப் சிட்டி அணி சார்பில் காமராசா ஒரு கோல் அடித்தார் .இதன் மூலம் 5 வருடங்களுக்கு பிறகு பிரீமியர் லீக் போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 5 கோல் அடித்துள்ளது

கேன்
கேன்

ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கேம் வீக்கின் கடைசி ஆட்டத்தில் எவர்டன் அணி டோட்டன்ஹாம் அணியை எதிர்கொண்டது போட்டி துவங்கியதில் இருந்தே கோல் மழை பொழிந்தது. எவர்டன் வீரர் தியோ வால்காட் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார் பின்னர் டோட்டன்ஹாம் அணி சார்பில் கேன், சான், டெலி அல்லி கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் ஆட்டம் 1-3 என்ற கணக்கில் இருந்தது.இரண்டாம் பாதியில் டோட்டன்ஹாம் அணி மேலும் 3 கோல் அடித்தது எரிக்சன் ,கேன் ,சான் கோல் அடித்தனர். எவர்டன் அணி தரப்பில் ஸிகுர்ட்ஸ்ன் 1 கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தை டோட்டன்ஹாம் அணி 2-6 என்ற கணக்கில் வென்றது

பிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:

https://www.sportskeeda.com/go/epl/standings

ஆட்டங்களின் முடிவு சுருக்கமாக:

வோல்வெர்ஹாம்டன் 0-2 லிவர்பூல்

ஆர்சனல் 3-1 பர்ன்லி

போர்ன்மௌத் 2-0 பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன்

மான்செஸ்டர் சிட்டி 2-3 கிரிஸ்டல் பேலஸ்

செல்சி 0-1 லெய்செஸ்டர் சிட்டி

நியூகேஸ்டெல் யுனைடெட் 0-0 புல்ஹாம்

வெஸ்ட்ஹாம் 0-2 வாட்போர்ட்

ஹட்டர்ஸ்பீல்ட் 1-3 சவுத்ஹாம்டன்

கார்டிஃப் சிட்டி 1-5 மான்செஸ்டர் யுனைடெட்

எவர்டன் 2-6 டோட்டன்ஹாம்

Edited by Fambeat Tamil