பிரீமியர் லீக் : பாக்ஸிங் டே தின முடிவுகள் 

சான்
சான்

2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 19இன் ஆட்டங்கள் பாக்ஸிங் டேவின் ஒரு பகுதியாக நடைபெற்றது

பாக்ஸிங் டே நாளான புதன்கிழமை 9 ஆட்டங்கள் நடைபெற்றான. முதல் ஆட்டத்தில் புல்ஹாம் அணியை வோல்வெர்ஹாம்டன் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் போட்டதால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

கார்டிஃப் சிட்டி கிரிஸ்டல் பேலஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடாததால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது

நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி லெய்செஸ்டர் சிட்டி அணியிடம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு மான்செஸ்டர் சிட்டி அணி தள்ளப்பட்டுள்ளது

டோட்டன்ஹாம் அணி 5-0 என்ற கணக்கில் போர்ன்மௌத் அணியை பந்தாடியது. இந்த வெற்றியை அடுத்து டோட்டன்ஹாம் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணியின் சான் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

சலா
சலா

புள்ளிகளை பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணி நியூகேஸ்டெல் யுனைடெட் அணியை 4-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சலா இந்த வாரமும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்

ஞாயிற்றுகிழமை டோட்டன்ஹாம் அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோற்ற எவர்டன் அணி இந்த வாரம் பர்ன்லி அணியை 1-5 என்ற கணக்கில் வென்றது.அந்த அணியின் டிஃனே இரு கோல் அடித்தார்

பால் போக்பா
பால் போக்பா

மான்செஸ்டர் யுனைடெட் அணி ஹட்டர்ஸ்பீல்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. அணியின் வீரர் பால் போக்பா இரு கோல் அடித்தார்

ஆபமயங்
ஆபமயங்

பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் ஆர்சனல் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. ஆர்சனல் அணியின் ஆபமயங் ஒரு கோல் அடித்ததன் மூலம் இந்த ஆண்டு பிரீமியர் லீக் போட்டியில் டாப் ஸ்கோரராக உள்ளார்

ஈடன் ஹசார்ட்
ஈடன் ஹசார்ட்

வாட்போர்ட் செல்சி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது அந்த அணியின் ஈடன் ஹசார்ட் இரண்டு கோல் அடித்து செல்சி அணி வெற்றிபெற செய்தார் இதன் மூலம் செல்சி அணிக்காக 100 கோல் அடித்தவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ஹசார்ட்

பிலிப் ஆண்டர்சன்
பிலிப் ஆண்டர்சன்

வியாழக்கிழமை நடைபெற்ற ஒரே ஆட்டத்தில் சவுத்ஹாம்டன் அணி வெஸ்ட்ஹாம் அணியை எதிர்கொண்டது. இதில் வெஸ்ட்ஹாம் அணி 1-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.வெஸ்ட்ஹாம் வீரர் பிலிப் ஆண்டர்சன் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்

பிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:

https://www.sportskeeda.com/go/epl/standings

ஆட்டங்களின் முடிவு சுருக்கமாக:

புல்ஹாம் 1-1 வோல்வெர்ஹாம்டன்

பர்ன்லி 1-5 எவர்டன்

கார்டிஃப் சிட்டி 0-0 கிரிஸ்டல் பேலஸ்

டோட்டன்ஹாம் 5-0 போர்ன்மௌத்

லெய்செஸ்டர் சிட்டி 2-1 மான்செஸ்டர் சிட்டி

லிவர்பூல் 4-0 நியூகேஸ்டெல் யுனைடெட்

மான்செஸ்டர் யுனைடெட் 3-1 ஹட்டர்ஸ்பீல்ட்

பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-1 ஆர்சனல்

வாட்போர்ட் 1-2 செல்சி

சவுத்ஹாம்டன் 1-2 வெஸ்ட்ஹாம்

அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல்

App download animated image Get the free App now