பிரீமியர் லீக் : புத்தாண்டு தின போட்டி முடிவுகள் 

வார்டி
வார்டி

2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 21க்கு ஆன ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெற்றன.

புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை மூன்று ஆட்டங்கள் நடைபெற்றான.லெய்செஸ்டர் சிட்டி அணி எவர்டன் அணியை 0-1 என்ற கணக்கில் வென்றது. லெய்செஸ்டர் சிட்டி அணியின் ஜேமி வார்டி இந்த ஆண்டின் முதல் பிரீமியர் லீக் கோலை அடித்தார்.

அபமேயங்
அபமேயங்

சனிக்கிழமை அணியிடம் தோற்ற ஆர்சனல் அணி லண்டன் டெர்பி ஆட்டத்தில் புல்ஹாம் அணியை 4-1 என்ற கணக்கில் வென்றது. ஆர்சனல் அணியின் ஜாகா , அபமேயங் , லாகாஸிட் , ராம்சே தலா ஒரு கோல் அடித்தனர். புல்ஹாம் அணி சார்பில் காமரா ஒரு கோல் அடித்தார்.

சான்
சான்

டோட்டன்ஹாம் அணி 0-3 என்ற கணக்கில் கார்டிஃப் சிட்டிஅணியை வென்றது. எரிக்சன், சான்,கேன் தலா ஒரு கோல் அடித்தனர்

புதன்கிழமை இரவு ஆறு ஆட்டங்கள் நடைபெற்றன. செல்சி - சவுத்ஹாம்டன் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

டீனி
டீனி

வாட்போர்ட் - போர்ன்மௌத் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. வாட்போர்ட் அணி சார்பில் கேப்டன் டீனி இரு கோல் அடித்தார் சேம ஒரு கோல் அடித்தார். போர்ன்மௌத் அணி தரப்பில் அக்கே , வில்சன் ,பிரேசர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த போட்டியில் அடித்த அனைத்து கோல்களும் ஆட்டத்தின் முதல் பாதியில் அடிக்கப்பட்டன

பர்ன்லி அணி 1-2 என்ற கணக்கில் ஹட்டர்ஸ்பீல்ட் அணியை வென்றது. ஹட்டர்ஸ்பீல்ட் அணி சார்பில் முனியே ஒரு கோல் அடித்தார். பர்ன்லி அணி தரப்பில் பார்ன்ஸ், வுட் தலா ஒரு கோல் அடித்தனர்.

அர்னாடோவிச்
அர்னாடோவிச்

வெஸ்ட்ஹாம் - பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன்அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் அணி தரப்பில் டப்பி, ஸ்டீபன்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர். வெஸ்ட்ஹாம் அணி சார்பில் அர்னாடோவிச் இரு கோல் அடித்தார்

கிரிஸ்டல் பேலஸ் அணி வோல்வெர்ஹாம்டன் அணியை 0-2 என்ற கணக்கில் வென்றது. கிரிஸ்டல் பேலஸ் அணியின் மிலிவோகேவிக், அயூ தலா ஒரு கோல் அடித்தனர்.

ராஷ்போர்ட்
ராஷ்போர்ட்

மான்செஸ்டர் யுனைடெட் அணி நியூகேஸ்டெல் யுனைடெட் அணியை 0-2 என்ற கணக்கில் வென்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லுகாகு ,ராஷ்போர்ட் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்றுள்ளது.

செர்ஜியோ ஆக்வேரோ
செர்ஜியோ ஆக்வேரோ

வியாழக்கிழமை இரவு இந்த வாரத்தின் 'கேம் ஆப் தி வீக்' என்று கருதப்பட்ட போட்டியில் லிவர்பூல் அணி மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவில் அணியின் செர்ஜியோ ஆக்வேரோ கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டி அணியை முன்னிலை படுத்தினார். இரண்டாம் பாதி துவக்கத்தில் லிவர்பூல் அணியின் பிர்மின்ஹோ ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் மான்செஸ்டர் சிட்டி அணியின் சானே வெற்றிக்கான கோலை அடித்தார். இதன் மூலம் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்த சீசன் பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி தனது முதல் தோல்வியை தழுவியது.

பிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:

https://www.sportskeeda.com/go/epl/standings

ஆட்டங்களின் முடிவு சுருக்கமாக:

எவர்டன் 0-1 லெய்செஸ்டர் சிட்டி

ஆர்சனல் 4-1 புல்ஹாம்

கார்டிஃப் சிட்டி 0-3 டோட்டன்ஹாம்

செல்சி 0-0 சவுத்ஹாம்டன்

வாட்போர்ட் 3-3 போர்ன்மௌத்

ஹட்டர்ஸ்பீல்ட் 1-2 பர்ன்லி

வெஸ்ட்ஹாம் 2-2பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன்

வோல்வெர்ஹாம்டன் 0-2 கிரிஸ்டல் பேலஸ்

நியூகேஸ்டெல் யுனைடெட் 0-2 மான்செஸ்டர் யுனைடெட்

மான்செஸ்டர் சிட்டி 2-1 லிவர்பூல்

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now