அல் ஐனாப்- படகு வடிவில் கட்டப்பட்ட கால்பந்து மைதானம் 

Chandru
அல் ஜனாப் விளையாட்டு அரங்கம், கத்தார்
அல் ஜனாப் விளையாட்டு அரங்கம், கத்தார்

2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட அல் ஐனாப் எனப் பெயர் கொண்ட அரங்கம் 17.05.2019 வியாழக்கிழமை அன்று திறக்கப்பட்டது. இந்த அரங்கத்தில் தான் 2019 ஆண்டுக்கான அமீர் கப் இறுதியாட்டம் நடைபெற உள்ளது. துருக்கியில் உள்ள அல் வக்ரா நகரில் அமைந்துள்ளது இந்த அரங்கம்.

இந்த அரங்கத்தை வடிவமைத்தவர் சாஹா ஹாதித் ஆவார். இவர் தான் பிரிட்ச்கர் ஆர்கிடெக்சர் பரிசு வாங்கிய முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கத்தின் மேல்கூரை கத்தாரின் பாரம்பரிய படகு வடிவில் கட்டப்பட்டுள்ளது. இது அங்கு பாரம்பரியமாக மீன் பிடிக்கும் மற்றும் முத்துக்குளிக்கும் தொழில்களை கெளரவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது .

இந்த அரங்கம் சுமார் 2.1 பில்லியன் ரியாலில் (₹4050 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமரும் இடங்களில் குளிரூட்டும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் 18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அமரும் இடம் இருக்கும் என கூறப்படுகிறது. வீரர்கள் விளையாடும் மைதானத்தில் 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும் இந்த அரங்கம்.

40,000 ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2022 உலகக்கோப்பை முடிந்த பிறகு அல் ஐனாப் அரங்கம் கத்தார் ஸ்போட்ஸ் லீக் அணியான அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் களப் இன் சொந்த அரங்கமாக எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மேல்கூரை சுமார் 230 மீட்டர்கள் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிகள் நடந்து 2019 ஆம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் ஸ்போட்ஸ் காம்ப்ளக்ஸ், நீச்சல் குளங்கள் மற்றும் பல்கடை அங்காடிகள் நிறுவப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 உலகக்கோப்பையில் சில முதல் கட்ட போட்டிகளும் பிறகு கால் இறுதி சுற்றுகளூம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அல் ஐனாப் அரங்கத்தை கட்டுவதற்கு 50 சதவீதத்திற்கும் மேல் நிதி அந்த நாட்டிலுள்ள நிறுவனங்களான மிட்மாக், பிக்யுர்ர் கத்தார் மற்றும் சிக்ஸ்கோ வழங்கியவை ஆகும். உலகக்கோப்பைக்காக தயாராகும் 8 அரங்கங்களில் இதுவும் ஒன்று, இதுவே முதலில் கட்டிமுடிக்கப்பட்ட அரங்கமாகும். அதுமட்டுமின்றி இந்த அரங்கத்தில் ஒரு உலக சாதனை நிகழ்ந்திருக்கிறது. அதாவது வீரர்கள் விளையாடும் மைதானத்தை 9 மனி நேரம் 15 நிமிடங்களில் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த அரங்கத்தின் மேல்கூரையை வடிவமைத்தவர் ஸ்சலைச் பெர்கர்மன் ஆவார். இந்த அரங்கத்தின் குளிரூட்டும் அமைப்பு துருக்கியின் வெயில் காலங்களில் ரசிகர்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

அல் ஐனாப் கால்பந்து அரங்கம், கத்தார்
அல் ஐனாப் கால்பந்து அரங்கம், கத்தார்

"2022 உலககோப்பைக்கான முக்கிய அம்சம் அல் ஐனாப் அரங்கம்" என்று அல் சர்ரா அவர்கள் கூறியுள்ளார். இது புதுமையும் மற்றும் எதிர்கால வடிவமைப்பையும் கொண்டுள்ளது. அரபு நாடுகளில் நடக்கப்போகும் முதல் உலகக்கோப்பை ஆதலால் இது அரபுநாடுகளின் கால்பந்து ஆனணயங்களுக்கு முக்கியப் புள்ளியாக அமையும் என்று நம்பப்படுகிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now