தொடர்ந்து மூன்றாவது முறையாக கிளப் உலககோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி 

ரியல் மாட்ரிட்
ரியல் மாட்ரிட்

2018 ஆம் ஆண்டுக்கான கிளப் உலககோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்.

சர்வதேச கால்பந்து சம்மேளத்தால் ஆண்டு தோறும் இறுதியில் கிளப் உலக கோப்பை நடத்தப்பட்டுவருகிறது .2000 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் முதல் கிளப் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது.

2018 ஆம் ஆண்டுக்கான கிளப் உலககோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடந்தது, இதில் 6 கண்டங்களை சேர்ந்த 7 அணிகள் பங்கேற்றன.

இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆன ரியல் மாட்ரிட் , அர்ஜென்டினாவை சேர்ந்த ரிவர் பிலேட் , ஜப்பானின் கஷிமா அண்ட்லெர்ஸ் , துனிசியாவின் எஸ்பிரெண்டே தே டுனீஸ் , நியூஸிலாந்து நாட்டின் வெலிங்டன் , மெக்ஸிகோ நாட்டின் குவாடலாஜாரா மற்றும் போட்டியை நடத்தும் நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் அல்- அய்ன் அணிகள் பங்குபெற்றன

போட்டிகள் அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்திலும் , அல்- அய்ன் இல் உள்ள ஜரா பின் சயீத் மைதானத்திலும் நடைபெற்றன

ரிவர் பிலேட்
ரிவர் பிலேட்

முதல் சுற்று ஆட்டத்தில் அல் -அய்ன் அணி வெலிங்டன்' அணியை 4-3 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் இல் வென்றது, ஆட்டம் 3-3 என்று டிராவில் , முடிந்ததால் பெனால்டி முறை பயன்படுத்தப்பட்டது

இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கஷிமா அண்ட்லெர்ஸ் அணி குவாடலாஜாரா அணியை 3-2 என்ற கணக்கில் வென்றது மற்றும் ஒரு ஆட்டத்தில் அல் -அய்ன் அணி எஸ்பிரெண்டே தே டுனீஸ் அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது இதன் மூலம் கஷிமா அண்ட்லெர்ஸ், அல் -அய்ன் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றான

ஐந்தாம் இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்பிரெண்டே தே டுனீஸ் அணி குவாடலாஜாரா அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது

காரெத் பேல்
காரெத் பேல்

அரை இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி கஷிமா அண்ட்லெர்ஸ் அணியை 3-1 என்ற கணக்கில் வென்றது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர முன்கள வீரர் காரெத் பேல் ஹாட்ரிக் கோல் அடித்தார். இரண்டாம் அரை இறுதி ஆட்டத்தில் அல் -அய்ன் அணி ரிவர் பிலேட் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது.

சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் ரிவர் பிலேட் அணி கஷிமா அண்ட்லெர்ஸ் அணியை 4-0 என்ற கணக்கில் வென்றது

ராமோஸ்
ராமோஸ்

பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கணக்கில் அல் -அய்ன் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக கிளப் உலக கோப்பையை வென்றது. அந்த அணியின் மோட்ரிச் ராமோஸ் , லாரெண்டே தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்

கடந்த 5 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் 4 முறை கிளப் கோப்பையை வென்றுள்ளது

இதன் மூலம் அதிக முறை கிளப் உலக கோப்பை போட்டியை வென்ற அணி என்ற பெருமையை ரியல் மாட்ரிட் அணி பெற்றது. ஏற்கனவே சாம்பியன்ஸ் லீக் போட்டியை வென்று ஐரோப்பாவின் சிறந்த அணி என்ற பெருமையை பெற்று இருந்தது. கிளப் உலக கோப்பையை வென்றதன் மூலம் உலகின் சிறந்த கிளப் அணி என்ற பெருமையை பெற்றது ரியல் மாட்ரிட் அணி .

டோனி க்ரூஸ்
டோனி க்ரூஸ்

ரியல் மாட்ரிட் அணியின் வீரர் டோனி க்ரூஸ் அதிகபட்சமாக 5 முறை கிளப் உலக கோப்பையை வென்றுள்ளார் .

போட்டியின் முடிவுகள் சுருக்கமாக :

முதல் சுற்று

அல் -அய்ன் 3(4)-3(3) வெலிங்டன் (பெனால்டி ஷூட் அவுட்)

இரண்டாம் சுற்று

கஷிமா அண்ட்லெர்ஸ் 3-2 குவாடலாஜாரா

அல் -அய்ன் 3-0 எஸ்பிரெண்டே தே டுனீஸ்

ஐந்தாம் இடத்துக்கான போட்டி

எஸ்பிரெண்டே தே டுனீஸ் 1(6)-1(5) குவாடலாஜாரா (பெனால்டி ஷூட் அவுட்)

அரை இறுதி போட்டி

ரியல் மாட்ரிட் 3-1 கஷிமா அண்ட்லெர்ஸ்

அல் -அய்ன் 2(5)-2(4) ரிவர் பிலேட் (பெனால்டி ஷூட் அவுட்)

மூன்றாம் இடத்துக்கான போட்டி

ரிவர் பிலேட் 4-0 கஷிமா அண்ட்லெர்ஸ்

இறுதி போட்டி

ரியல் மாட்ரிட் 4-1 அல் -அய்ன்

App download animated image Get the free App now