கொரிய வீரரின் உதவியால் காலிறுதியின் முதல் லெக் போட்டியில் வெற்றிகண்டது ஸ்பர்ஸ் அணி

வெற்றிக்கு உதவிய ஸ்பர்ஸ் வீரர் சன்
வெற்றிக்கு உதவிய ஸ்பர்ஸ் வீரர் சன்

ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது, இதன் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக அரங்கேறவுள்ளது. இதில் இன்று நள்ளிரவு நடந்த போட்டியில் ஸ்பர்ஸ் அணி தனது பிரீமியர் லீக் எதிரியான மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியானது ஸ்பர்ஸ் அணிக்கு சொந்தமான லண்டன் கிளப் மெஜஸ்டிக் ஆடுகளத்தில் அரங்கேறியது.

இதற்க்கு முன் இந்த இரு அணிகள் கடைசியாக சந்தித்த ஐந்து போட்டிகளில் ஒரு முறை கூட ஸ்பர்ஸ் அணி வெற்றி பெறவில்லை. இதனால் தெற்கு ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரசிகர்கள் 17,500 பேர், கையில் " கடினமான செயலை செய்து முடி ( To Dare is to Do)" என்ற ஸ்பர்ஸ் அணியின் குறிக்கோள் வாக்கியத்தை உச்சரித்தபடி இருந்தனர். 62,000 ரசிகர்கள் குழுமியிருந்த அந்த ஆடுகளத்தில், மான்செஸ்டர் சிட்டி வீரர்களும், ஸ்பர்ஸ் அணி வீரர்களும் களம் கண்டனர். ஆம், ஏகோபித்த ஆதரவுடன் தன்னம்பிக்கையோடு களம் கண்டது ஸ்பர்ஸ் அணி.

ஸ்பர்ஸ் அணியின் வியூகம்: 4-2-3-1

மான்செஸ்டர் சிட்டி அணியின் வியூகம்: 4-2-3-1

முதல் பாதி:

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அனல் பறக்க ஆரமித்தது. ஸ்பர்ஸ் அணிக்கு முதல் வாய்ப்பாக டெலி அலி அற்புதமாக ஒரு வாலி அடித்தார் ஆனால் துருதிர்ஷ்டவசமாக அது கிராஸ்பாரை தாண்டி சென்றது, இதில் சிசோக்கோ கிராஸ் செய்து தடுக்க முயன்றார், முடியாத பட்சத்திலும், அதற்கு பெரிய ஆபத்து ஏற்படவில்லை.

இந்த நிகழ்வு நடந்த சிறிது நேரத்திற்குள்ளாக ஸ்பர்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ரஹீம் ஸ்டெர்லிங் பந்தை லாவகமாக ஸ்பர்ஸ் எல்லைக்குள் செல்லமுயன்றார். பிறகு ஒரு சிறிய இடைவேளையில் பந்தை கோளாக மாற்ற ஓங்கி அடித்தார், அந்த சமயத்தில் டேனி ரோஸ், குறுக்கே விழ பந்து அவர்மீது பட்டு வெளியில் சென்றது.

பெனால்டி வர காரணமான ஷாட்
பெனால்டி வர காரணமான ஷாட்

இதை கவனித்த ரெபிரீ VAR முறையை பயன்படுத்தி பெனால்டி வாய்ப்பா என ஆராய முற்பட்டார், முடிவில் பந்து ரோஸ்-இன் கையில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. இதனால் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. இதில் நகைப்பான விஷயம் என்னவென்றால் சிட்டி அணியை சேர்ந்த ஒருவர் கூட அப்பீல் செய்யவில்லை.

பெனால்டி வாய்ப்பை இழந்த விரக்தியில் செர்ஜியோ அகுரோ
பெனால்டி வாய்ப்பை இழந்த விரக்தியில் செர்ஜியோ அகுரோ

பிறகு, பெனால்டி வாய்ப்பை செர்ஜியோ அகுரோ பெற்றார், ஸ்பர்ஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்க செர்ஜியோ பந்தை அடிக்க விளைந்தார். ஆனால் முடிவு ஸ்பர்ஸ் அணிக்கு சாதகமானது, அதனை சாத்தியபடித்தியவர் கோல்கீப்பர் லோரிஸ். பெனால்டி வாய்ப்பை இழந்தது சிட்டி அணி. இந்த தவறானது அவர்களின் ஆட்டத்தையே வேறுபக்கம் இட்டுச்சென்றது.

இதனிடையே கேன் இந்தப்பக்கம் கோல் போடா தாக்குதலை தொடுக்க எட்டர்சன் அதை தவிடுபொடியாக்கி கொண்டே இருந்தார். மறுபுறம் செர்ஜியோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் இரு ஷாட்கள் அடிக்க அதில் அனைத்தும் வெளியேயே சென்று கொண்டிருந்தது.

இரண்டாம் பாதி:

இதன் தொடக்கத்தில் சிட்டி அணியின் செர்ஜியோ அகுரோ பெனால்டி ஏரியாவில் ஸ்டெர்லிங் இருப்பதை கண்டு அடிக்க முற்பட்டார். ஆனால் லோரிஸ் அந்த வாய்ப்பிருக்கு முட்டுக்கட்டை போட்டார்.

இதையடுத்து கொரிய வீரர் சன் ஸ்பர்ஸ் அணிக்காக இரண்டு ஷாட்கள் அடித்தார். ஆனால் சிட்டி அணிக்கு பக்கபலமாக இருந்தார் எட்டர்சன். இப்படி ஆட்டம் எந்த பக்கமும் சாயாமல் செல்வதை பார்த்து ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்தனர், ஆட்டம் முடிவை நெருங்க நெருங்க பதற்றம் சூழ தொடங்கியது.

ஹரி கேன் காயம்
ஹரி கேன் காயம்

அதனை காண நேரத்தில் இடியாக விழுந்தது ஹரி கேனின் காயம். டச்லைன் அருகே பாபிங் டெல்ப் உடன் நடந்த ஒரு போராட்டத்தில் ஹரி கேன் காயம் ஆனார். உடனே மாற்று வீரராக லூகாஸ் மோரா களம் கண்டார்.

இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட சிட்டி அணிக்கு ஸ்பர்ஸ் அணியினர் தக்க பதிலை வைத்திருந்தனர். அவர் தான் கொரிய வீரர் சன். ஆட்டம் முடிய 12' நிமிடங்களே உள்ள நிலையில் சிட்டி அணியின் கோல் போஸ்ட்டை சுற்றி பந்து வளம் வந்து கொண்டிருந்தது. அந்த வேலையில் எட்டர்சன் செய்வதறியாது திகைத்தார். ஒரு கட்டத்தில் பந்து எல்லையை தாண்டி செல்லவிருந்த நிலையில் சன் அதை லாவகமாக உள்ளே தட்டி ஒரு சிறிய இடைவெளியில் அடித்தார். ஆனால் இந்த முறை எட்டர்சனால் பந்தை தடுக்க முடியவில்லை.

கோல் போட்ட மகிழ்ச்சியை கொண்டாடும் ஸ்பர்ஸ் வீரர்கள்
கோல் போட்ட மகிழ்ச்சியை கொண்டாடும் ஸ்பர்ஸ் வீரர்கள்

இதிலிருந்து மான்செஸ்டர் சிட்டி அணியால் கடைசி வரை மீளமுடியவில்லை. தொடர்தோல்விக்கு பதிலடி தரும் வகையில் இந்த போட்டியை 1-0 என்ற கணக்கில் ஸ்பர்ஸ் அணி சிட்டி அணியை வீழ்த்தியது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லெக் போட்டி வருகிற ஏப்ரல் 17 தேதி மான்செஸ்டர் சிட்டிக்கு சொந்தமான ஆடுகளத்தில் நடக்கவிருக்கிறது. இதில் சாதித்து முதல் முறையாக அரையிறுதிக்கு செல்லும் முனைப்போடு உள்ளது ஸ்பர்ஸ் அணி. ஸ்பர்ஸ் அணியின் இந்த தாக்குதலை சமாளிக்குமா மான்செஸ்டர் சிட்டி அணி பொறுத்திருந்து பாப்போம்.