தற்போதைய உலகில் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் போட்டியாக கருதப்படுவது கால்பந்து போட்டி தான். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளது கால்பந்து. இந்தியாவில் கிரிக்கெட் அளவுக்கு இதற்க்கு ரசிகர்கள் இருக்கா விட்டாலும் உலக அளவில் கால்பந்து போட்டிக்கே அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிகளை பொறுத்தவரையில் அணியில் 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் தனி சிறப்புடன் விளங்குபவர் அந்த அணியின் கோல் கீப்பர் தான். அணியிலுள்ள மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது அணிக்காக கோல்களை அடிக்க வேண்டும் என்றே விளையாடுவார்கள். ஆனால் எதிரணி கோல் அடிக்க கூடாது என விளையாடும் ஒரே வீரர் இவர் தான். எனவே அணியில் இவர் மட்டும் தனி தன்மையுடன் திகழ்கிறார். அணி வீரர்கள் எந்த அளவுக்கு கோல் அடித்தாலும் சிறந்த கோல் கீப்பர் தங்களது அணிக்கு கொண்டிருந்தால் மட்டுமே அவர்களால் அந்த போட்டியில் வெற்றி காண முடியும். இந்த வேளையில் உலகில் பல முன்னணி கோல் கீப்பர்கள் விளங்குகின்றனர். அவர்களில் சிறந்த டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#5) திபட் கொர்டோய்ஸ் ( ரியல் மேட்ரிட் )
பெல்கன் இந்த முறை தனது கனவு அணியான மாட்ரிட் அணிக்காக பெயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இவர் தடுமாறி வந்தாலும் அதன் பின் தனது திறமையை நிரூபித்தார் இவர். தற்போது மாட்ரிட் அணியில் சிறந்த வீரராக இவர் திகழ்கிறார். அதாவது இவரின் அசாத்திய திறமையால் இவரால் ஒரு போட்டியில் 2.5 கோல்கள் வரை சராசரியாக தடுக்க முடியும். வெறும் 26 வயதேயான இவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பது பலருக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆனால் இவரின் அசாத்திய திறமையே இவரை இந்த பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு உறுதியாக்குகிறது.
#4) அலிசன் பெக்கர் ( லிவர்பூல் )
பிரேசில் அணியினர் இம்முறை சிறந்த கோல்கீப்பரான அலிசனை தங்களது அணியில் இணைத்துள்ளனர். எல்டர்ன்ல் சிட்டி அணியில் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவரை லிவர்பூல் அணி தங்களது அணிக்காக தேர்வு செய்துள்ளது. இதுவரை லிவர்பூல் அணியானது தங்களதுஅணிக்காக சிறந்த கோல்கீப்பரை தேடி வந்தது அந்த இடத்திற்கு தற்போது சிறந்த வீரராக அலிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் கோல் கேப்பிங் தன்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் இவருக்கு இந்த பட்டியலில் நான்காம் இடம் கிடைக்கிறது.
#3) ஜான் ஒப்ளாக் ( அட்டிலீகோ மாட்ரிட் )
2014 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் லீக் தொடரில் சிறந்த கோல் கீப்பராக அதிக கோல்களை தடுத்து அனைவரின் கவனத்தினும் ஈர்த்தவர் ஒப்ளாக். அதாவது இவர் ஓவ்வொரு போட்டியிலும் சராசரியாக 2.4 கோல்களை தடுத்தார். அந்த தொடரில் மட்டும் இவர் 20 போட்டிகளில் கடினமான 10 கோல்களை தடுத்தார். 26 வயதான இவர் கடினமான கோல்களையும் எளியதாக தடுப்பதால் இவருக்கு இந்த பட்டியலில் மூன்றாம் இடம் கிடைக்கிறது. 2014-ல் மட்டும் இவர் 20 மில்லியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கோல்கீப்பர்களிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
#2) டேவிட் டீ ஜியா ( மான்செஸ்டர் யூனிடேட் )
கடந்த ஐந்தாண்டுகளாக உலகின் தலை சிறந்த கோல் கீப்பராக விளங்கி வருபவர் இவரே. இவர் மான்செஸ்டர் அணியின் சிறந்த வீரர் என்ற விருதினை பெற்றார். அதுமட்டுமல்லாமல் 2017-18 காலகட்டத்தின் கோல்டன் க்ளோவ் விருதினையும் பெற்றார். இவரும் ஆரம்ப காலங்களில் சற்று சொதப்பி வந்தாலும் அதன் பின் தனது ஸ்டைலை மாற்றி பல கோல்களை தடுத்துள்ளார். பல போட்டிகளை தனது அசாத்திய திறமையால் தனது அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார். பல ரசிகர்களால் இவரே உலகின் தலைசிறந்த கோல்கீப்பராகவும் வர்ணிக்கப்பட்டு வருகிறார். எனவே இந்த பட்டியலில் இவருக்கு கிடைப்பது இரண்டாம் இடம்.
#1) மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டெஜென் ( எப்சி பார்சிலோனா )
இந்த பட்டியலில் இவர் தான் முதலிடம் பிடிப்ர்பா என்பது கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. சிறந்த கோல்கீப்பர் என்ற பெயர் இவரைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. இவர் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். எப்பேர்ப்பட்ட வீரர்கள் பெனால்டி முறையில் கோல் அடிக்க முயற்சித்தாலும் இவர் இருக்கும் அணிக்கு எந்த வித கவலையும் இல்லை. அதனை எளிதாக தடுத்து விடும் தன்மை கொண்டவர் இவர். இந்த வகையில் டெர் ஸ்டேஜென் உலகின் தலைசிறந்த கோல் கீப்பர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு சொந்தக்காரராகிறார்.