கடந்த சில வாரங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ரியல் மாட்ரிட் அணி. ஐரோப்பாவின் கடுமையான தடுப்பாட்டத்தில் முதன்மையான அணியாக கருதப்படும் அட்லெடிகோ மாட்ரிட் அணியே வீழ்த்தியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளது ரியல் மாட்ரிட் அணி. இந்த வெற்றியை மூன்று கோல்களால் ரியல்மாட்ரிட் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரியல் மாட்ரிட் அணியின் மேனேஜரான சோலாரி பல வியக்கத்தக்க மாற்றங்களை அணிக்குள் கொண்டு வருபவர். கடந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் ஜிடானே-யின் தலைமையில் விளையாடிய முக்கிய வீரர்களை பெஞ்சில் உட்கார வைத்தது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் நட்சத்திர அந்தஸ்து அல்லாத வீரர்களையும் அடையாளம் காண வைப்பதில் கைதேர்ந்தவர் சோலாரி.
தற்போதுள்ள அணியில் பல இளம் வீரர்கள் முக்கியமான ஆட்டங்களில் தங்களது பங்கினை நிலைநாட்டுகின்றனர். இதற்கு முழு முதற் காரணம் சோலாரியே.
தற்போது முக்கிய வீரர்களாக வலம் வரும், குறைத்து மதிப்பிடப்பட்ட 3 ரியல்மாட்ரிட் அணி வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1. வினிசியஸ் ஜூனியர்
வினிசியஸ் சாதாரண வீரராக கருதப்பட்டாலும் தற்போது ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய தொடக்ககாரராக வலம் வருகிறார்.
வினிசியஸ் ரியல் மாட்ரிட் அணியின் இளம் அணியான காஸ்டில்லா அணிக்காக விளையாடி உள்ளார். ஜலன் லோபெட்டிகுய் மேனேஜராக இருந்த போது களம் கண்ட ஆட்டங்களில் 15 நிமிடம் மட்டுமே இவரது பங்கு இருக்கும்.
இவரது ஆட்டத்திறன் சோலாரிஸின் தலைமையில் தலைகீழாக மாறியது. பிரேசில் நாட்டை சேர்ந்த இந்த இளம் வீரர் ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய வீரராக வளர்ந்துள்ளார்.
முன்னணி ஆட்டக்காரராக இருக்கும் கேரத் பெலே-வை விட முக்கியமான நபராக வளர்ந்துவிட்டார். ரியல் மாட்ரிட் அணியின் கடந்த 10 போட்டிகளிலும் இவரது பங்கு இருந்தது.
#2. லூகாஸ் வாஸ்க்வெஸ்
ஜலன் பொறுப்பில் அதிக ஆட்டங்களை லூகாஸ் பெறவில்லை. ஜிடானேயின் கீழ் சொல்லிக்கொள்ளும் வகையில் இவரது ஆட்டம் அமையவில்லை. லோபெட்டிகுய் தலைமையில் அணியை விட்டு வெளியேறும் கட்டத்தில் இருந்தார் லூகாஸ்.
சோலாரி பொறுப்பேற்றவுடன் லூகாஸை தொடக்க காரராக நியமித்தார். சோலாரியின் இந்த முடிவானது பலன் தந்தது. தற்போது ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரராக விளங்கி வருகிறார் லூகாஸ் வாஸ்க்வெஸ்.
#3. செர்ஜியோ ரெகுவிலன்
சில மாதங்களுக்கு முன்பு, மார்சிலோ-வை விட சிறந்த ஆட்டக்காரராக ரெகுவிலன் விளங்குவார் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பிருக்க மாட்டார்கள். லோபெட்டிகுய் மற்றும் ஜிடானே தலைமையில் இருந்த போது இவர் பெரிதாக தென்படவில்லை.
பயிற்சியின் பொது, செர்ஜியோ ராமோஸ் செர்ஜியோ ரெகுவிலனை கிண்டல் செய்ததன் மூலம் இவரது பெயர் முதன்முதலில் தலைப்புச் செய்தியாக வெளியே வந்தது.
சோலாரி படிப்படியாக கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட செர்ஜியோ ரெகுவிலன், செர்ஜியோ ராமோஸுடன் இணைந்து ரியல் மாட்ரிட் அணியின் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த நான்கு லா லீகா போட்டிகளில், முழு நேரத்தில் (அதாவது 90 நிமிடங்கள்) தொய்வில்லாமல் இவரது பங்கினை தந்தார்.