விளையாட்டு வீரர்களுக்கும், அணிகளுக்கும், அதன் ரசிகர்களுக்கும் மைதானம் என்பது ஏதோ போட்டி நடக்கும் இடம் மட்டுமல்ல. அது அவர்களின் கோயில் போன்றது. பல ரசிகர்களுக்ககு தங்களது விருப்பமான அணி விளையாடும் போட்டியை மைதானத்தில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் உண்டு. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள கால்பந்தும் இதில் விதிவிலக்கல்ல. எந்த ஒரு கால்பந்து மைதானமும் அதன் பரப்பளவிற்காகவோ அல்லது கட்டுமானத்திற்காகவோ மட்டும் போற்றப்படுவதில்லை. அங்கு பெற்ற வெற்றிகளுக்காகவும் அதன் நினைவுகளுக்காகவும் தான் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.
எல்லா வெற்றிகரமான அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது தனது சொந்த ஊரில், சொந்த மைதானத்தில், சொந்த ரசிகர்கள் முன்னால் தொடர்ந்து வெற்றி பெறுவது. கால்பந்தில் "ஹோம் அட்வாண்டேஜ்" என்று கூறுவது இதைத்தான். தோல்வி அடையும் நிலையில் இருக்கும் அணி கூட தங்களின் சொந்த மைதானத்தில் விளையாடும் போது ரசிகர்களின் ஆதரவால் கூடுதல் பலத்தோடு இருக்கும். கால்பந்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அணியின் மைதானத்தை இரண்டாவது வீடாகவே கருதுகிறார்கள்.
நீங்கள் கால்பந்து ரசிகராக இல்லாவிட்டாலும், இந்த மைதானங்களின் கட்டிட வடிவமைப்பிற்காகவும் இதனோடு தொடர்புடைய சந்தோஷமான நினைவுகளுக்காகவும் இதை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். கால்பந்தில் வெற்றிகரமான பல அணிகள் தங்கள் மைதானங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலா ஏற்பாடு செய்கிறது. உங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 சிறந்த மைதனங்களின் பட்டியலை நாங்கள் தருகிறோம்.
இந்த ஐந்து மைதானங்களிலும் அப்படியென்ன விஷேசம் இருக்கிறது. வாருங்கள் பார்ப்போம்....
5. சான் சிரோ:
இடம்: சான் சிரோ மாவட்டம், மிலன், இத்தாலி
நிறுவன ஆண்டு: 1926
எத்தனை பேர் அமர்ந்து பார்க்கலாம்: 80,018
வரலாற்றில் பல வெற்றிகளை குவித்த இரண்டு பிரபலமான அணிகளான ஏசி மிலன் மற்றும் இண்டர் மிலன் அணியின் சொந்த மைதானம் இதுவாகும். இத்தாலியின் மிகப்பெரிய மைதானம் மட்டுமல்லாமல் உலகத்தின் மிகப்பெரிய மைதனங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. 1934 உலக கோப்பையில் மூன்று முறையும், 1990 உலக கோப்பையில் நான்கு முறையும், 1980 யூரோ கோப்பையில் மூன்று முறையும், நான்கு முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோபைக்கான இறுதிப் போட்டியும் இந்த மைதானத்தில் நடந்துள்ளது. கால்பந்து போட்டிகள் மட்டுமல்லாமல் மைக்கேல் ஜாக்சன், மடோனா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்றுள்ளது.
4. அன்பீல்ட்:
இடம்: அன்பீல்ட், லிவர்பூல், இங்கிலாந்து
நிறுவிய ஆண்டு: 1882
எத்தனை பேர் அமர்ந்து பார்க்கலாம்: 54,074
1884-ம் ஆண்டு முதல் 1892-ம் ஆண்டு வரை எவர்டன் கால்பந்து அணிக்கான சொந்த மைதானமாக இது திகழ்ந்தாலும், 1882-ம் ஆண்டிலிருந்தே லிவர்பூல் அணியின் சொந்த மைதானமாக இருந்து வருகிறது. இங்கிலாந்தின் ஆறாவது பெரிய மைதானமாக கருதப்படும் இது கடந்த காலங்களில் பல சிறப்பான வெற்றிகளை லிவர்பூல் அணி இந்த மைதனத்தில் குவித்துள்ளதால், உலகின் பிரபலமான மைதானங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தேசிய அணியின் பல சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த காலங்களில் ரக்பி மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் கூட இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன.
3. கேம்ப் நௌ:
இடம்: பார்சிலோனா, ஸ்பெயின்
நிறுவிய ஆண்டு: 1857
எத்தனை பேர் அமர்ந்து பார்க்கலாம்: 99,354
ஆங்கிலத்தில் 'நியூ கேம்ப்' (புதிய முகாம்) என அழைக்கப்படும் இந்த பிரபலமான மைதானம், பார்சிலோனா அணியின் சொந்த மைதானமாகும். இது ஐரோப்பாவில் மிகப்பெரிய மைதனமாகவும் உலகத்தில் இரண்டாவது பெரிய மைதானமாகவும் திகழ்கிறது. எப்படி பர்சிலோனா அணியை சாதாரண கிளப்பாக கருதமாட்டோமோ, அது போலத்தான் கேம்ப் நௌ மைதானமும் சாதாரனமானது அல்ல. 1982-ம் ஆண்டு உலக கோப்பையின் தொடக்க போட்டி உள்பட ஐந்து போட்டிகள் மற்றும் 1992-ம் ஆண்டின் ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியும் இங்கு நடைபெற்றுள்ளது.
2. ஓல்ட் ட்ரஃபோர்ட்:
இடம்: ஓல்ட் ட்ரஃபோர்ட், மான்செஸ்டர் யூனைடெட், இங்கிலாந்து
நிறுவிய ஆண்டு: 1910
எத்தனை பேர் அமர்ந்து பர்க்கலாம்: 76,994
மான்செஸ்டர் யூனைடெட் அணியின் சொந்த மைதானம் இது. "கனவுகளின் அரங்கம்" என பாபி சார்ல்டனால் கூறப்பட்ட இந்த மைதானத்தின் அருகில் தான் ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் மைதானமும் உள்ளது. 1986 உலக கோப்பை, 1996 யூரோ கோப்பை, 2003 சாம்பியன்ஸ் லீக் என பல போட்டிகளை நடத்தியுள்ள இந்த மைதானம், இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மைதானமாக திகழ்கிறது. கால்பந்து மட்டுமல்லாமல் ரக்பி போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளது.
1. சாண்டியகோ பெர்னாபூ:
இடம்: சமார்டின் மாவட்டம், மாட்ரிட், ஸ்பெயின்
நிறுவிய ஆண்டு: 1947
எத்தனை பேர் அமர்ந்து பார்க்கலாம்: 81,044
உலகின் மிகவும் புகழ்பெற்ற, பிரபலம் வாய்ந்த இந்த மைதானம் ரியல் மாட்ரிட் அணியின் சொந்த மைதானமாகும். ரியல் மாட்ரிட் அணியின் பிரசித்தி பெற்ற தலைவரின் பெயரைப் கொண்டுள்ள இந்த மைதானத்தில் இவ்வுளவு பிரபலம் வாய்ந்த மைதானமாக திகழும் சாண்டியாகோ பெர்னாபூ, பல முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளை நடத்தியுள்ளது. முக்கியமாக, 1982 உலக கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 1964 ஐரோப்பிய நாட்டு கோப்பையின் இறுதிப் போட்டியையும் நடத்திய ஒரே மைதானம் இதுவே. மேலும் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியையும் நடத்தியுள்ளது.