அசத்தியது அத்லெட்டிக்கோ மாட்ரிட், சுருண்டது ஜுவென்ட்ஸ்!

ஜிம்னெஸ் கோல் போட்ட மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்
ஜிம்னெஸ் கோல் போட்ட மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்

இன்றிரவு நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் ரவுண்டு 16 போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி ஜுவென்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அதே போன்று நடந்த மற்றோரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்சால்க் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. அதுபற்றிய ஒரு அலசலை இங்கு காண்போம்.

# அத்லெட்டிகோ vs ஜுவென்ட்ஸ்: (2-0)

வியூகம்:

அத்லெடிகோ மாட்ரிட் : 4-4-2

ஜுவென்ட்ஸ் : 4-3-3

பல அட்டாக்கிங், அதாவது பல முன்கள வீரர்களை கொண்ட இந்த இரு அணிகளும் புதிய யுக்தியுடன் ஆட்டம் தொடங்கிய முதலே தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் சமனில் முடியும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்டத்தின் இறுதி பகுதியில் ஜுவென்ட்ஸ் அணி செய்த தவறுகளும், அத்லெடிகோ அணியின் சாதூர்யமும் இந்த அணிக்கு வெற்றி வாய்ப்பை தந்தது.

முதல் பாதி:

முதல் பாதியில் குறிப்பிடும் வகையில் சொல்லப்போனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு கோல் போடும் வாய்ப்பு கிட்டியது.

ஒரு கட்டத்தில் கோல் போஸ்டிலிருந்து 30 மீட்டர் தூரத்தில் ஜுவென்ட்ஸ் அணிக்கு பிரீ-கிக் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை வழக்கம்போல ரொனால்டோ ஏற்றார். அடித்த பந்தை அத்லெட்டிக்கோ அணியின் கோல் கீப்பர் ஓப்ளாக் அற்புதமாக தடுத்தார்.

அதே போன்று அத்லெட்டிக்கோ பெனால்டி வாய்ப்பு ஒன்றை வினாவியது. அதற்க்கு ரெபிரீயும் செவிசாய்த்தார். பிறகு VAR தொழில்நுட்பத்தில் அது பெனால்டி கிடையாது, வெறும் பிரீ-கிக் மட்டுமே என்று மாற்றி அமைக்கபட்டது. ஆனால் இந்த பிரீ-கிக் வாய்ப்பையும் தவறவிட்டது வேறு கதை.

இரண்டாம் பாதி:

ஆட்டத்தின் 49' நிமிடத்தில் கோஸ்டா அத்லெட்டிக்கோ அணிக்கான கோல் கணக்கை தொடங்க வேண்டியது. ஆனால் அவர் அடித்த பந்து கோல் போஸ்ட்டை விட்டு விலகி சென்றது. பிறகு இவருக்கு பதிலாக முன்னாள் ஜுவென்ட்ஸ் வீரர் மொரட்டா களமிறங்கினார்.

அந்த தருணத்தில் மொரட்டா, (71') ஹெட்டெர் மூலம் கோல் அடித்தது மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. பின்பு VAR உதவியுடன் அந்த நிகழ்வை களைய செய்தார் ரெபிரீ.

இதன் பின்பு சுதாரித்துக்கொண்ட அத்லெட்டிக்கோ 5 நிமிட இடைவேளையில் இரண்டு கோல்களை போட்டு ஜுவென்ட்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணிக்காக ஜிம்னெஸ் 78' ஒரு கோலும், கோடின் 83' ஒரு கோலும் அடித்தனர்.

இந்த போட்டியில் புதிதாக அறிமுக படுத்தப்பட்ட VAR பலமுறை பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டத்தின் பல இடங்களில் பரபரப்புக்கு குறைவில்லாமல் போட்டி நகர்ந்தது. இறுதியில் அத்லெடிகோ அணி ஜுவென்ட்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.

#2 ஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி: (2-3)

வியூகம்:

ஸ்சால்க்: 5-4-1

மான்செஸ்டர் சிட்டி: 3-2-4-1

இந்த போட்டியில் மான்செஸ்டர் அணி எளிதில் ஸ்சால்க் அணியை ஊதி தள்ளிவிடும் அனைவரும் எதிர்பார்த்தனர். அதுபோன்றே பந்து முழுவதும் மான்செஸ்டர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

பந்து கட்டுப்பாடு: மான்செஸ்டர் 66% , ஸ்சால்க் 34%

ஆட்டத்தின் 18' நிமிடத்தில் அகுரோ மான்செஸ்டர் அணிக்காக கோல் அடித்தார். இப்படி ஆட்டம் மான்செஸ்டர் சிட்டி பக்கம் இருக்கையில், அந்த அணியின் சில அலட்சிய போக்கால் ஸ்சால்க் அணிக்கு இரு பொன்னான வாய்ப்புகள் கிட்டியது. மான்செஸ்டர் தடுப்பு வீரர்கள் செய்த தவறால் ஸ்சால்க் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது.

VAR முறையை பயன்படுத்தியும் மான்செஸ்டர் அணிக்கு பலன் கிட்டவில்லை. முறையே 7 நிமிட இடைவெளியில், அதாவது ஆட்டத்தின் 38' மற்றும் 45' நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன் படுத்தி ஸ்சால்க் அணியின் பேண்டலேப் இரண்டு கோல் அடித்தார். எனவே முதல் பாதி முடிவில் ஸ்சால்க் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

வெற்றியை கொண்டாடிய மான்செஸ்டர் சிட்டி அணியினர்
வெற்றியை கொண்டாடிய மான்செஸ்டர் சிட்டி அணியினர்

பிறகு மான்செஸ்டர் அணிக்கு இது பெரிய தலைவலியாக மாறியது. ஆட்டத்தின் 68' நிமிடத்தில் ஓட்டமெண்டியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் அவருக்கு சிகப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், சேன் ஒரு கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டி அணியினருக்கு ஆறுதல் அளித்தார். இதை தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த மான்செஸ்டர் அணி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸ்டெர்லிங் மூலம் ஒரு கோல் போட்டது.

இதனால் மான்செஸ்டர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்சால்க் அணியிடம் த்ரில் வெற்றி பெற்றது.