UEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19: BVB டார்ட்மண்ட் vs டோட்டேன்ஹம் ஹாட்ஸ்பர் மற்றும் ரியல் மாட்ரிட் vs அஜாக்ஸ் போட்டிகள் ஒரு பார்வை 

BVB டார்ட்மண்ட் vs டோட்டேன்ஹம் ஹாட்ஸ்பர்
BVB டார்ட்மண்ட் vs டோட்டேன்ஹம் ஹாட்ஸ்பர்

ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் ரவுண்டு 16 போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு போட்டியாக பிரித்து விளையாடப்படும் ரவுண்டு 16 போட்டிகள், முதல் சுற்று முடிந்து தற்போது இரண்டாவது லெக் போட்டிகள் தொடங்கவுள்ளது. ஒரு சிறிய இடைவேளைக்கு பின்பு இந்த போட்டிகள் தொடங்குவதால் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர். எனவே இந்தியா நேரப்படி நாளை நடக்கும் போட்டிகள் பற்றிய ஒரு காணல்.

#1 BVB டார்ட்மண்ட் vs டோட்டேன்ஹம் ஹாட்ஸ்பர்

டார்ட்மெண்ட் அணியை பொருத்தவரை இந்த காலம் போறாத காலம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அந்த அணி பல சறுக்கல்களை சந்தித்து வந்துள்ளது. கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதற்க்கு அந்த அணியின் முன்னணி வீரர்களே காரணம். மேலும் முதல் லெக் போட்டியில் 0-3 என டோட்டேன்ஹமிடம் தோற்றதால், ஏறக்குறைய அந்த அணியின் கோப்பை கனவு தகர்ந்துபோயுள்ளது. இதை மாற்றவேண்டும் என்று நினைத்தால் எதாவது மாயாஜாலம் தான் நிகழ்த்த வேண்டும்.

டோட்டேன்ஹம் அணியை பொருத்தவரை, அந்த அணி சமீபகாலமாக வெற்றி தோல்வி என தனது பார்ம் என்னவென்று தெரியாமல் தவித்து வருகிறது. திடீரென்று ஒரு போட்டியில் அசுர வெற்றி பெறுவது, மற்றோரு போட்டியில் தோல்வி அடைவது என வாடிக்கையாகி விட்டது. அந்த அணியின் நட்சத்திர இளம் வீரர் ஹரி கேன் அணிக்கு திரும்பி உள்ளதால் சிறிது நம்பிக்கை பிறந்துள்ளது.

டோட்டன்ஹம் எதிர்பார்க்கப்படும் XI:(3-4-1-2)

லோரிஸ்; வேர்ட்டோகேன், ஆல்டெர்விட், சஞ்செஸ்; ஆரியர், வன்யமா, சிசுக்கொ, டேவிஸ்; எரிக்சன்; சன், கேன்.

BVB டார்ட்மண்ட் எதிர்பார்க்கப்படும் XI:(4-2-3-1)

புர்கி; குயிற்ரிரோ, டையலோ, அக்காஞ்சி, ஹாகிமி; விட்செல், டெலனி; பிஸிஸ்க், ரூவெஸ், சாங்கோ; அல்சஸ்ர், .

முதல் லெக் நிலவரம்:

BVB டார்ட்மண்ட் - 0 கோல்கள்

டோட்டன்ஹம் - 3 கோல்கள்

#2 ரியல் மாட்ரிட் vs அஜாக்ஸ்

நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் ரியல் மாட்ரிட் அணி அஜாக்ஸ் அணியை சந்திக்கிறது. பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணி அதன் சொந்த மண்ணில் களமிறங்குவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. முதல் லெக் போட்டியில் அஜாக்ஸ் அணியை சொற்பமாக எண்ணியதால் அந்த அணி தோல்வியிலிருந்து தப்பிப்பிழைத்தது எனலாம். ஆனால், ரியல் மாட்ரிட் அணி படு மோசமாக சொதப்பி வருகிறது. அதன் விளைவாக ஏற்கனவே கோப டீ ரே மற்றும் லா லிகா தொடரை இழந்து தவிக்கிறது அந்த அணி. இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மாட்ரிட் அணி இந்த முறையும் வெல்லுமா என பொறுத்திருந்து பார்போம்.

ரியல் மாட்ரிட் vs அஜாக்ஸ்
ரியல் மாட்ரிட் vs அஜாக்ஸ்

அஜாக்ஸ் அணியை பொருத்தவரை சாம்பியன்ஸ் லீக் ரவுண்டு 16க்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறை . அப்படி இருக்கையில் மாட்ரிட் அணியுடனான போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் சிறிய தவறுகளால் அந்த போட்டியை வெல்ல முடியாமல் போய்விட்டது. இந்த ஆட்டத்தில் அதே போன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.

முதல் லெக் நிலவரம்:

ரியல் மாட்ரிட் - 2 கோல்கள்

அஜாக்ஸ் - 1 கோல்கள்

அஜாக்ஸ் எதிர்பார்க்கப்படும் XI : (4-2-3-1)

ஓனானா; மஸ்ராஉய், பிளைண்ட், டீ லிக்ட், தக்லீஅபிகோ; ஸ்கூனே, டீ லாங்; வான் டீ பீக், நேரிஸ்,சையிச்; டாடிக்.

ரியல் மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI : (4-3-3)

கோர்டியோஸ்; கார்வஜால், வரேன், நாச்சோ, ரெகிலோன்; காஸ்மிரோ, மோட்ரிக், க்ரூஸ்; லூகாஸ், பென்சீமா, வினிசியஸ்.

Edited by Fambeat Tamil