UEFA சாம்பியன்ஸ் லீக் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிளப் அணிகள் இதில் பங்குப்பெற்று விளையாடி வருகிறது. இந்த தொடர்னது தற்போது ரவுண்டு 16 எனப்படும் சுற்றை எட்டியுள்ளது. இதில் வெற்றி பெரும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். இன்று நடைப்பெற்ற ஒரு ஆட்டத்தில் BVB டார்ட்மண்ட் அணியும், டோட்டேன்ஹம் ஸ்பர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே 3-0 முன்னிலையில் இருந்த டோட்டன்ஹம் அணி எப்படியும் காலிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் களம் கண்டது. மறுமுனையில் BVB எதாவது மாயாஜாலம் நடக்கலாம் என களம் கண்டது.
BVB டார்ட்மண்ட்ன் வியூகம் : 4-1-4-1
டோட்டன்ஹம் ஸ்பர்ஸ்ன் வியூகம் : 3-4-1-2
BVB டார்ட்மண்ட் அணி சார்பில் ரூவெஸ்-ம், டோட்டேன்ஹம் அணி சார்பில் ஹரி கேனும் களமிறங்கினர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது.
முதல் பாதி:
டோட்டேன்ஹம் அணியை பொறுத்தவரை ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது எனலாம். தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி BVB டார்ட்மண்ட் அணிக்கு அதிக அழுத்தத்தை அளிப்பது என்பது தான். காரணம் 3-0 என முன்னிலையில் இருப்பது. இதனால் BVB அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த அடிக்கடி அணி வீரர்களை மாற்றி மாற்றி களமிறங்கியது. ஆனால் இந்த முடிவு சிறிதும் பலன் கொடுக்கவில்லை. இப்படி ஸ்பர்ஸ் அணியின் தடுப்பு களம் அருப்புதமாக இருந்ததால் BVB அணி வீரர்களால் அதனை உடைத்து கோலாக மாற்ற முடியவில்லை.
பின்பு ஒரு சமயத்தில், அதாவது 21' நிமிடத்தில் ரூவஸ் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் அடித்த அந்த பந்தை லாவகமாக தடுத்தார் லாரிஸ். இதனால் BVB அணிக்கு கோல் வாய்ப்பு பறிபோனது. இதே போன்று 30' நிமிடத்தில் ஸ்பர்ஸ் அணிக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிட்டியது, அதை கொரியன் வீரரான ஹுங் மின் சரியாக அடிக்காத காரணத்தால் கோல் போஸ்ட்டிற்கு இடது புறமாக விலகி சென்றது.
அடுத்த சில கணங்களில் ஜூலியன் வீல் (BVB) ஒரு ஹெட்டர் அடித்தார். இதனை லாரிஸ் தடுக்க கூடவே அந்த அணியின் பென் டேவிஸ் அந்த பந்தை வெளியில் அடித்து அற்புதமாக சேவ் செய்தார்.
இதனால் முதல் பாதி முழுவதும் கோல் இன்றி சமனில் முடிந்தது.
இரண்டாம் பாதி:
இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ஸ்பர்ஸ் வீரர்கள் அதிரடியாய் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் (48') ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹரி கேன் அமர்க்களமாக ஒரு கோல் அடித்தார். இதனை BVB அணியின் கோல்கீப்பர் புர்கியால் தடுக்க முடியவில்லை.
அடுத்த சில நிமிடங்களிலேயே கேன் மற்றுமொரு ஷாட் அடித்தார் ஆனால் அது கோல் போஸ்ட்டிலிருந்து சற்று விலகி சென்றது. ஏற்கனவே ஏறக்குறைய வெற்றியை உறுதிபடுத்திய ஸ்பர்ஸ் அணியினர் மிகவும் ரிலாக்ஸாக விளையாடினர். அதே போன்று BVB அணியினரும் நம்பிக்கையை இழந்து ஒரு சாதாரண ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
இறுதியாக அல்ஸாஸ்ர்(BVB) முயற்சித்த ஒரு வாய்ப்பையும் லோரிஸ் அற்புதமாக தடுக்க இந்த போட்டியானது ஸ்பர்ஸ் அணி பக்கம் முடிந்தது. இதன் காரணமாக 4-0 என்ற கணக்கில் ஸ்பர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.