UEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை #ATLvsJUV, #SCHvsMAN

அத்லெட்டிக்கோ மாட்ரிட் vs ஜுவென்ட்ஸ்
அத்லெட்டிக்கோ மாட்ரிட் vs ஜுவென்ட்ஸ்

UEFA சாம்பியன்ஸ் லீக்கின் ரவுண்டு 16 போட்டிகள் விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது. இந்த தொடரானது கால்பந்து ரசிகர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஐரோப்பிய கண்டத்தில் நடத்தப்படுகிறது. இதில் பலம்வாய்ந்த பல அணிகள் பங்குகொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதன் நாளைய போட்டியில் ஜுவென்ட்ஸ் அணி அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியையும், ஸ்சால்க் அணி மான்செஸ்டர் சிட்டி அணியையும் எதிர்கொள்கிறது. இதுப்பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கு காண்போம்.

#1 அத்லெட்டிக்கோ மாட்ரிட் vs ஜுவென்ட்ஸ்:

ஸ்பெயின் அணியான அத்லெட்டிக்கோ சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய பார்மை கணக்கில் கொள்ளும்பொழுது அந்த அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றது. இந்த அணி சைம்ஒன் தலைமையில் கடைசி ஐந்து வருடங்களில் இரண்டு முறை (2014 & 2016) இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆனால் அந்த இரண்டு முறையும் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியையே சந்தித்தது. இந்த முறையும் சைம்ஒன் தலைமையில் களமிறங்குகிறது, மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் க்ரீஸ்மன் ஜொலிக்கும் பட்சத்தில் பலம் வாய்ந்த ஜுவென்ட்ஸ் அணியை சமாளிக்க முடியும்.

ஜுவென்ட்ஸ் அணி என்பதை காட்டிலும் ரொனால்டோ அணி என்று கூறுவதே தற்போது ஏற்புடையதாக இருக்கும். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுவரை இந்த அணி சாம்பியன் பட்டம் வென்றதே இல்லை. மாறாக அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக பலமுறை கோப்பையை வென்று தந்துள்ளார்.

ஆம், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகி இத்தாலியன் அணியான ஜுவென்ட்ஸ் அணியில் விளையாடுவது நம் அனைவரும் அறிந்ததே. இவரின் வருகையால் அந்த அணி மேலும் பலம் வாய்ந்த அணியாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த அணிக்கு டைபாலா வலுசேர்க்கின்றார்.

அத்லெட்டிக்கோ மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI: (4-4-2)

ஓப்ளாக்; ஆரியாஸ், கோடின், ஜிம்னெஸ், லூயிஸ்; கோக்கே; ரோட்ரி, தாமஸ், சவுல்; க்ரீஸ்மன், மொரட்டா.

ஜுவென்ட்ஸ் எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)

சேஸினி; சன்செலோ, போனுக்கி, செலினீ, சான்றோ; ஜெனிக், மடோய்டி, க்ஹெடிரா; ரொனால்டோ, டைபாலா, மான்ட்சுக்கிக்.

#2 ஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி:

ஸ்சால்க் அணி, அதிகபட்சமாக சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. அதுவே அந்த அணியின் மிகப்பெரிய சாதனையாகும். இந்த முறையும் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஒரு பகல் கனவாகவே காட்சி அளிக்கிறது. ஜெர்மன் கிளப் அணியான ஸ்சால்க், குரூப் போட்டிகளில் தட்டு தடுமாறி வென்று தற்போது ரவுண்டு 16க்கு முன்னேறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த அணியில் சொல்லி கொள்ளும்படி ஒரு வீரர் கூட ஜொலிக்காதது கவலைக்குரிய விஷமாகும். எனவே மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான போட்டி ஒரு முனை போட்டியாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி
ஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி

காரணம், மான்செஸ்டர் சிட்டி அணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் தற்போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அணியின் தூண்களாக டேவிட் சில்வா, டே பரின், பெர்னாண்டின்ஹோ உள்ளனர். இவர்களின் தாக்குதல்களை எதிரணி சமாளிப்பது மிகவும் கடினம் தான்.

ஸ்சால்க் எதிர்பார்க்கப்படும் XI: (4-2-3-1)

பார்மண்; காலிகுரி, சேன், நஸ்டாஸிக், ஓசிப்கா; பேண்ட்லேப், ரூடி; உத், மெக்கென்னி, கோனோபிலயங்கா; பர்க்ஸ்டல்லேர்.

மான்செஸ்டர் சிட்டி எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)

எடர்சன்; வால்கெர், ஸ்டோன்ஸ், லபோர்டே, ஜிஞ்சன்கோ; டே பரின், பெர்னாண்டின்ஹோ, டேவிட் சில்வா; பெர்னார்டோ, அகுரோ, ஸ்டெர்லிங்.

இந்த இரண்டு போட்டிகளும் இந்தியா நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும்.

Edited by Fambeat Tamil