UEFA சாம்பியன்ஸ் லீக் 2018-19, நாளைய ரவுண்டு-16 போட்டிகள் ஒருபார்வை 

அஜக்ஸ் vs ரியல் மாட்ரிட்
அஜக்ஸ் vs ரியல் மாட்ரிட்

உலக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக பல தொடர்கள் ஆண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐரோப்பாவில் நடத்தப்படும் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடராகும். இதில் பல முன்னணி வீரர்கள் அடங்கிய பல முன்னணி அணிகளும் பங்குபெறும். இந்த தொடரானது, லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரவுண்டு 16 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

#1 அஜக்ஸ் vs ரியல் மாட்ரிட்:

நாளை நடக்கும் முதல் போட்டியில் அஜக்ஸ் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியானது மலைக்கும், மடுவுக்கும் இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரை தொடர்ந்து மூன்று முறை வென்று தற்போது நான்காவது முறையாக கைப்பற்ற காத்திருக்கிறது. ஆம், ரியல் மாட்ரிட் அணி தான் தற்போது நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வருகிறது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரொனால்டோ ஜூவென்டஸ் அணிக்கு மாறினாலும், ரியல் மாட்ரிட் அணி பலம்பொருந்திய அணியாகவே காட்சி அளிக்கிறது. அந்த அணியில் கோர்டியோஸ், கார்வஜால், பென்சீமா, க்ரூஸ், பேலே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

மற்றொரு அணியான அஜக்ஸ் அணி எரெடிவிஸ் லீக்(டச்சு) தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்து இந்த தொடருக்கு வந்துள்ளது. இந்த அணி சாம்பியன்ஸ் லீக்கின் குரூப் போட்டிகளில் பேயர்ன் முனிச் போன்ற அணிகளை சமாளித்து, ரவுண்டு 16க்கு தகுதி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் ஐரோப்பாவில் அஜாக்ஸ் அணி இந்த முறை தோல்வியே சந்தித்ததில்லை என்பது மற்றொரு சிறப்பு. மேலும் அந்த அணியின் டாடிக் 5 கோல்கள் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.

அஜக்ஸ் எதிர்பார்க்கப்படும் XI :

ஓனானா; மஸ்ராஉய், பிளைண்ட், டீ லிக்ட், தக்லீஅபிகோ; ஸ்கூனே, டீ லாங், வான் டீ பீக்; நேரிஸ், டாடிக், சையிச்.

ரியல் மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI :

கோர்டியோஸ்; கார்வஜால், வரேன், ராமோஸ்,ரெகிலோன்; காஸ்மிரோ, மோட்ரிக், க்ரூஸ்; பேலே, பென்சீமா, வினிசியஸ்.

#2 டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட் :

டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட்
டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட்

நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் டோட்டன்ஹாம் vs போர்ஷ்யா டார்ட்மண்ட் அணிகள் மோதுகின்றன. டார்ட்மண்ட் ஒரு தலைசிறந்த ஐரோப்பிய அணி. ஆனால், தற்போது நடந்த கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியே தழுவியது. இதனால் அந்த அணி மிகவும் சோர்ந்து காணப்படுகிறது.

மற்றொரு அணியான ஸ்பர்ஸ் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த காத்திருக்கிறது. குரூப் போட்டியில், பார்சிலோனா அணியை ட்ரா செய்தது, அந்த அணிக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹரி கேன் காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என்பது சற்று கவலைக்குரிய விஷயமாகும்.

டோட்டன்ஹாம் எதிர்பார்க்கப்படும் XI :

லோரிஸ்; வேர்ட்டோகேன், ஆல்டெர்விட், சஞ்செஸ், ஆரியர், விங்க்ஸ், சிசுக்கொ, எரிக்சன், சன், லோரேன்டே, லமெலா.

டார்ட்மண்ட் எதிர்பார்க்கப்படும் XI :

புர்கி; பிஸிஸ்க், வெய்க்கேல், டையலோ, ஹாகிமி, டெலனி, கோட்ஸீ, சாங்கோ, அல்சஸ்ர், குயிற்ரிரோ.

இரண்டு போட்டிகளும் இந்தியா நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும்.