UEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை

ஒலிம்பிக் லயொன்னைஸ் vs பார்சிலோனா
ஒலிம்பிக் லயொன்னைஸ் vs பார்சிலோனா

விளையாட்டு உலகில் திகைப்பூட்டும் வகையில் ரசிகர்களை ஈர்த்து விளையாடி வருவது கால்பந்து போட்டிகள் தான். இதில் பல நாடுகளில் நடத்தப்படும் தொடர்களில் சிறந்து விளங்கும் கிளப் அணிகள் பங்குபெறுவது தான் UEFA சாம்பியன்ஸ் லீக். இது ஐரோப்பிய கண்டத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரவுண்டு 16 எனப்படும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில நாட்கள் ஓய்வுக்கு பின் நாளை நடக்கும் போட்டிகளில் ஒலிம்பிக் லயொன்னைஸ் அணி பார்சிலோனா அணியையும், லிவர்பூல் அணி பேயர்ன் முனிச் அணியையும் எதிர்கொள்கின்றது. இதுபற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கு காண்போம்.

#1 ஒலிம்பிக் லயொன்னைஸ் vs பார்சிலோனா:

பிரெஞ்சு அணியான லயொன்னைஸ், சாம்பியன் லீக்கின் ஒரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தனது பார்மை நிலை நிறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்னும் தோல்வியை சந்திக்காமல் வீருநடை போட்டுவருகிறது. லயொன்னைஸ் அணி. தனது சொந்த மண்ணில் பார்சிலோனா அணியை சந்திப்பதால் கூடுதல் பலத்தோடு காணப்படுகிறது.

ஸ்பெயினை தலைமையாக கொண்ட பார்சிலோனா கால்பந்து உலகத்தில் மிகவும் பிரபலமான அணியாகும். மேலும் அந்த அணியில் பல நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பார்சிலோனா அணியை பொறுத்தவரை, இந்த அணி பங்கேற்ற கடைசி பத்து வெளி ஆட்டங்களில் மூன்றில் மற்றுமே வெற்றி கண்டுள்ளது. எனவே நாம் அனைவரும் எதிர்பார்க்கப்படும் மெஸ்ஸியின் மாயாஜாலம் இந்த அணிக்கு கைகொடுக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

லயொன்னைஸ் எதிர்பார்க்கப்படும் XI : (4-4-1-1)

லோபஸ்; டுபோய்ஸ், மர்ஸலோ, டேனையர், மெண்டி; கார்னெட், டொம்பேலே, டௌசர்ட், அவுர்; டீபே; எம் டெம்பெலே.

பார்சிலோனா எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)

டெர் ஸ்டெகேன்; பிகு, லெங்க்லெட்,ஆல்பா; ராக்கிடிக், பஸ்கியூட்ஸ், விடல்; மெஸ்ஸி, சவரெஸ், ஓ டெம்பெலே.

#2 லிவர்பூல் vs பேயர்ன் முனிச்:

இங்கிலீஷ் ப்ரீமியர் லீகில் அசத்தும் லிவர்பூல் அணியும், ஜெர்மனின் நட்சத்திர அணியான பேயர்ன் முனிச்சும் மோதும் இந்த போட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை உற்று நோக்க வைத்துள்ளது.

லிவர்பூல் vs பேயர்ன் முனிச்
லிவர்பூல் vs பேயர்ன் முனிச்

லிவர்பூல் அணியை பொறுத்தவரை ஏற்கனவே சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த முறை ரியல் மாட்ரிட் அணியுடனான இறுதி போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இந்த சீனில் லிவர்பூல் அணியின் பார்ம் சற்று குறைவாகவே உள்ளது. கடைசியாக பங்கேற்ற ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த போட்டியானது தனது சொந்த மைதானத்தில் நடப்பதால் லிவர்பூல் அணிக்கு சாதகமான அமையும்.

முனிச் அணியை பொறுத்தவரை ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணி கடைசியாக பங்குபெற்ற ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. ஆனால் லிவர்பூல் அணிக்கு எதிராக இந்த அணி சில தோய்வான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கு முக்கியமான போட்டியாகும்.

லிவர்பூல் எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)

அலிசன்; அலெக்ஸாண்டர்-அர்னால்டு, மாட்டிப், பாபின்ஹோ, ராபர்ட்சன்; விஜினால்டும், ஹெண்டர்சன், கெய்ட்டா; சாலாஹ், பிர்மினோ, மானே.

பேயர்ன் முனிச் எதிர்பார்க்கப்படும் XI:(4-2-3-1)

நுயெர்; கிம்மிச், சுலே, ஹும்மேல்ஸ், அலபா; மார்டின்ஸ், தியாகோ; ஞாபரி, ஜேம்ஸ், கோமன்; லேவாண்டோஸ்கி.

இந்த இரண்டு போட்டிகளும் இந்தியா நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications