மீண்டு வருமா ஜுவென்டஸ், அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை 

வெற்றி களிப்பில் அத்லெட்டிக்கோ அணி வீரர்கள்
வெற்றி களிப்பில் அத்லெட்டிக்கோ அணி வீரர்கள்

UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஐரோப்பா கண்டத்தில் மெர்சலாக நடந்து வருகிறது. தற்போது ரவுண்டு 16 எனப்படும் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முன்னணியில் இருக்கும் அணி காலிறுதிக்கு தகுதி பெரும்.

இதனிடையே மார்ச் 13, இந்திய நேரப்படி இரவு 1.30க்கு தொடங்கும் போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த ஜுவென்டஸ் மற்றும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் என இரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் பலர் ஆவலுடன் உள்ளனர்.

முதல் லெக் போட்டி ஒரு பார்வை:

இந்த இரு அணிகளும் சென்ற மாதம் முதல் லெக் போட்டியில் மோதின. இதில் பலம் வாய்ந்த ஜுவென்டஸ் அணி சோடை போக அத்லெட்டிக்கோ அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஜுவென்ட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ சோபிக்க தவறியதால் வந்த நிலை இது. அத்லெட்டிக்கோ அணிக்காக அந்த அணியின் ஜோஸ் ஜிம்னெஸ் மற்றும் கோடின் கோல் போட்டு அசத்தினர். இப்படி ஒரு சூழலில் தான் இரண்டாவது லெக் போட்டி நடைபெறவுள்ளது.

இரண்டாவது லெக் போட்டி முன்னோட்டம் :

இந்த போட்டியானது ஜுவென்டஸ் அணியின் சொந்த மைதானமான டுரினில் நடைபெறுவதால் முழு ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்கும். கடந்த 5 சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜுவென்டஸ் அணி இருமுறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முறையே பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்விகண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது அந்த அணி. இந்த முறை ரொனால்டோ அணியில் இணைத்துள்ளதால் அணிக்கு பெரும் பலமாக இருப்பார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் ஒரு நடுநிலையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இவர் சரியான பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் வெற்றிக்கு துணையாக இருப்பார்.

ஜுவென்டஸ் vs அத்லெடிகோ மாட்ரிட்
ஜுவென்டஸ் vs அத்லெடிகோ மாட்ரிட்

அத்லெட்டிக்கோ அணியை பொறுத்தவரை மிகவும் பலமாகவே காட்சியளிக்கிறது. மேலும் 2-0 என முன்னிலையில் உள்ளதால் அந்த அணிக்கே காலிறுதி வாய்ப்பு என நிலவிவருகிறது. சென்ற மாதத்தில் நடந்த போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணியிடம் 1-3 என மோசமாக தோற்றபின் வீறுகொண்டு எழுந்து வரிசையாக ராயோ வலக்கானோ, வில்லாரியல், ரியல் சொலிஸிட், லெகானஸ் மற்றும் ஜுவென்டஸ் என வெற்றிபெற்று வந்துள்ளது.

அத்லெட்டிக்கோ அணியும் கடந்த 5 வருடங்களில் இருமுறை இறுதி போட்டிக்கு முன்னேறி ரியல் மாட்ரிட் அணியிடம் மண்ணை கவ்வியது. இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளது அந்த அணி.

அணி தேர்வு:

ஜுவென்டஸ்

சமி க்ஹெட்ரியா, இருதய பிரச்சனை காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். மேலும் டக்ளஸ் கோஸ்டா தசைப்பிடிப்பு காரணமாக விளையாடமாட்டார். இதனால் டி சிக்லியோ மற்றும் பென்டன்கர் விளையாட வாய்ப்பு பெறுவர்.

அத்லெட்டிக்கோ:

சென்ற போட்டியில் கோல் அடித்து அசத்திய கோடின் சிறிய காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் தாமஸ்க்கு பதிலாக லீமர் களமிறங்குவார்.

அத்லெட்டிக்கோ மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI: (4-4-2)

ஓப்ளாக்; ஜுவான்பிரான், கோடின், ஜிம்னெஸ், லூயிஸ்; கோக்கே; ரோட்ரி, லீமர், சவுல்; க்ரீஸ்மன், மொரட்டா.

ஜுவென்ட்ஸ் எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)

சேஸினி; சன்செலோ, போனுக்கி, செலினீ, டி சிக்லியோ; ஜெனிக், மடோய்டி, பென்டன்கர்; ரொனால்டோ, டைபாலா, மான்ட்சுக்கிக்.

App download animated image Get the free App now