காலிறுதிக்கு தகுதி பெறப் போவது யார்? லிவர்பூல் அணியுடன் பேயர்ன் முனிச் பலப்பரீட்சை 

பேயர்ன் முனிச் மற்றும் லிவர்பூல் அணிக்கு எதிரான முதல் லெக் போட்டியின் ஒரு காட்சி.
பேயர்ன் முனிச் மற்றும் லிவர்பூல் அணிக்கு எதிரான முதல் லெக் போட்டியின் ஒரு காட்சி.

UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியின் ரவுண்டு 16 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி வாரமான இந்த தருணத்தில் பேயர்ன் முனிச் அணி லிவர்பூல் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணி காலிறுதிக்கு செல்லும்.

முதல் லெக் போட்டி ஒரு பார்வை:

இந்த இரு அணிகள் ரவுண்டு 16 போட்டியில் கடந்த மாதம் மோதின. இதில் எந்த அணிக்கும் சாதகமில்லாமல் சமனில் முடிந்தது. இரு அணிகளும் பலம் பொருந்திய அணி என்பதால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த பரபரப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

இரண்டாவது லெக் முன்னோட்டம்:

இப்படி சமபலம் பொருந்திய இரு அணிகள் மோதுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முனிச் அணியை பொறுத்தவரை "லிவர்பூல் அணியை கட்டுப்படுத்திய விதம் மிகவும் அருமையான தருணம், ஆனால் இந்த முறை அதையும் தாண்டி கோல் எடுக்க முயற்சி செய்வோம்" என சூளுரைக்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் முனிச் அணி கோல் ஷாட் ஒன்று கூட சரியாக அடிக்கவில்லை. அந்த அணியின் முன்கள வீரர்கள் சோபிக்க தவறியதே இந்த நிலைக்கு காரணம். மேலும் நட்சத்திர வீரரான லேவாண்டோவ்ஸ்கி கோல் இன்றி சென்றது அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்தது. அவர் 22 போட்டிகளில் 23 கோல்கள் அடித்து அந்த அணி வீரர்களில் முன்னணியில் உள்ளார். மேலும் லிவர்பூல் அணியினர் இவரை குறிவைப்பர் என்பதால் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது இந்த அணி சரியான கலவையில் தான் உள்ளது, கடந்த 6 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வந்துள்ளது.

பேயர்ன் முனிச் vs லிவர்பூல்
பேயர்ன் முனிச் vs லிவர்பூல்

லிவர்பூல் அணியை பொறுத்தவரை இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கையோடு இங்கு ஜொலிக்க காத்திருக்கிறது. முதல் லெக் போட்டியில் இரண்டு அருமையான வாய்ப்பு கிட்டியும் அந்த அணி அதை பயன்படுத்த தவறியது எனலாம். கடைசியாக எவெர்ட்டன் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் ட்ரா செய்து நடுநிலையான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனிடையே மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என வென்று கூடுதல் உத்வேகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது. ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் போட்டி, முனிச்க்கு சொந்தமான அல்லியன்ஸ் அரினாவில் நடைபெறுகிறது.

அணிகள் விவரம்:

பேயர்ன் முனிச்:

மானுவல் நுயெர் தனது 100வது சாம்பியன்ஸ் லீக் போட்டியில் களமிறங்குகிறார். இந்த இலக்கை எட்டுவதில் இவர் ஆறாவது நபர்.

சேர்ஜ் ஞாபரி காயம் காரணமாக வெளியேற பிராங்க் ரிபெரி களம்காண்கிறார்.

ராபின்ஹா மற்றும் மட்ஸ் ஹும்மேல்ஸ் அணிக்கு திரும்புகின்றனர். ஆனால் தாமஸ் முல்லர் அந்த அணிக்கு விளையாடாதது பெரிய இழப்பு.

லிவர்பூல்:

மில்னர் தசைபிடிப்பு காரணமாக போட்டியில் பங்கேற்கமாட்டார்.

முதல் லெக் போட்டியில் விளையாடாத வான் டிஜிக் இந்த போட்டியில் விளையாடவிருக்கிறார்.

பாபின்ஹோ இந்த முறை தனது நிலையை மாற்றி விளையாட அதிக வாய்ப்புள்ளது.

பேயர்ன் முனிச் எதிர்பார்க்கப்படும் XI:(4-2-3-1)

நுயெர்; ராபின்ஹா, சுலே, ஹும்மேல்ஸ், அலபா; தியாகோ, மார்ட்டினெஸ்; ஞாபரி, ஜேம்ஸ், ரிபெரி; லேவாண்டோவ்ஸ்கி.

லிவர்பூல் எதிர்பார்க்கப்படும் XI:(4-3-3)

அல்லிசன்; அலெக்சாண்டர்-அர்னால்ட், மாடிப், வான் டிஜிக், ராபர்ட்சன்; வ்ஜிண்டும், பாபின்ஹோ, ஹெண்டர்சன்; சாலாஹ், பிர்மினோ,மனே.

Edited by Fambeat Tamil