விரைவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் என உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற அணிகள் தோல்வியடைந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் கோப்பைக்கு மல்லு கட்டுகின்றன.
லிவர்பூல் மற்றும் டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணிகளுக்கு இடையே நடைபெறப் போகும் இறுதிப் போட்டி நிச்சியம் ரசிகர்ளுக்கு விருந்து படைக்கும். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலம் வாய்ந்த பேயர்ன் முனிச் அணியை தோற்கடித்த லிவர்பூல், காலிறுதியில் கத்துக்குட்டி அணியான போர்டோ-வை கஷ்டப்பட்டே ஜெயித்தது.
அரையிறுதியில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பார்சிலோனா அணியை சந்தித்தது லிவர்பூல். பார்சிலோனா எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், லிவர்பூலின் வெற்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால், முதல் லெக்கில் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற லிவர்பூல், இரண்டாம் லெக்கில் நான்கு கோல் அடித்து வெற்றி வாகை சூடியது.
இன்னும் சில நாட்களில் மாட்ரிட் நகரில் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. ஏற்கனவே ப்ரீமியர் லீக் கோப்பையை மான்செஸ்டர் சிட்டி அணியிடம் ஒரு புள்ளியில் கோட்டை விட்ட விரக்தியில் உள்ள லிவர்பூல் அணி, அதற்கு ஈடாக நிச்சியம் சம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.
இறுதிப் போட்டியில் லிவர்பூல் ஏன் வெற்றி பெறும் என்பதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்…
ராபர்டோ ‘பாபி’ ஃபிர்மினோ அணிக்கு திரும்புதல்
சில அணிகளில் தாக்குதல் ஆட்டத்தை விளையாடுவதற்கென்றே மூன்று வீரர்கள் கொண்ட கூட்டனி அமைந்திருபதை நாம் பர்த்துள்ளோம். உதாரணமாக, மெஸ்ஸி, சாரஸ், நெய்மர் கூட்டனி (பார்சிலோனா) மற்றும் பாலே, பென்சிமா மற்றும் ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) கூட்டனி. இவர்கள் தங்கள் தனித் திறமைகளால் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்கள்.
இதேப் போல் தற்போதுள்ள லிவர்பூல் அணியிலும் மூன்று வீரர்கள் அமைந்துள்ளனர். முஹமது சாலா மற்றும் சடியோ மனே விங்கர் பொசிஷனிலும் செண்டர் ஃபார்வேர்டாக ராபர்டோ ஃபிர்மினோவும் என மூவர் கூட்டனியை அமைத்துள்ளனர். விரைவான எதிர் தாக்குதலுக்கும், எதிரணியின் கோட்டைக்குள் சென்று விளையாடுவதற்கும் ராபர்டோ சரியாக இருப்பார். எங்கும் பொருந்திப் போகும் தன்மை மற்றும் வேகம் ஆகியவற்றால் அணியின் முக்கிய வீரராக ஆகியுள்ளார் ராபர்டோ ஃபிர்மினோ.
தகர்க்க முடியாத தடுப்பாட்டம்
லிவர்பூல் அணியில் சேர்ந்ததிலிருந்து விர்ஜில் வேன் டிஜிக்-ன் திறமை பல் மடங்கு வளர்ந்துள்ளது. செர்ஜியோ ரமோஸ், ஜெரார்ட் பிக்யு, செலினி, தியகோ டி சில்வா போன்றவர்களோடு இன்று ஒப்பீடு செய்யப்படுகிறார் விர்ஜில். அணியின் வெற்றிக்காக எதையும் தர தயாராக இருக்கும் இவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு சொத்து போன்றவர்கள்
மற்றொரு முக்கியமான வீரர் ட்ரெண்ட் அலெக்ஸாண்டர் அர்னால்ட். இவரது தளராத ஸ்டாமினாவும், கச்சிதமாக பந்தை கடத்தும் திறனும் எதிரணி வீரர்களை விரைவிலேயே சோர்வடையச் செய்யும். இதையே இடதுபுற ஃபிளாங்க் பகுதியில் செயல்படுத்துபவராக உள்ளார் ஆன்ட்ரூ ராபர்ட்ஸன். இவர்கள் இருவரும் ஒன்றாக எந்திரம் போல் இயங்குபவர்கள். மேலும், தற்போதைய சூழலில் லிவர்பூல் அணியின் கோல்கீப்பர் அலிஸன் உலகின் சிறந்த கோல்கீப்பராக திகழ்கிறார்.
ஜர்கன் கிளாப் மற்றும் அவரது புதிய திட்டம்
ஜர்கன் கிளாப் போன்ற உத்வேகம் கொண்ட பயிற்சியாளர்கள் அணிக்கு கிடைப்பது அரிது. ஒரு சராசரி அணியை ஐரோப்பாவின் சிறந்த அணியாக மாற்றி, தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும், இவரது Gegenpress என்ற விளையடும் முறை என்பது, எதிரணி வீரர்களின் கட்டுப்பாட்டில் பந்து சென்றால், எதிர் தாக்குதலுக்கு கவனம் செலுத்துவதற்குப் பதில் பந்தை உடனடியாக மீட்க வேண்டும். ஆனால், இந்த தடவை இதில் புதிய முறையை புகுத்தியுள்ளர் க்ளாப். பந்தை உடனடியாக முன் நகர்த்தி தாக்குதல் தொடுக்காமல் நீண்ட நேரம் தங்கள் கட்டுப்பாடில் வைத்திருப்பது.
இந்த முறையால் விங்கராக இருக்கும் வீரர்களுக்கு பந்தை பெற பரந்தளவில் இடம் கிடைப்பதோடு சாலா மற்றும் மனே போன்றவர்கள் எளிதாக கோல் அடிக்கவும் முடிகிறது. மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும் லிவர்பூல், இந்த தடவையாவது வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.