"வீர விளையாட்டு, தமிழரின் வரலாறு"- ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு காளை
ஜல்லிக்கட்டு காளை

ஜல்லிக்கட்டு , தமிழகத்தில் பல்லாயிர வருடங்களாக சிந்து சமவெளி நாகரீகம் முதல் இன்று வரை விளையாடப்பட்டு வரும் வீர விளையாட்டு. ஏரு தலுவுதல் என்றும் மஞ்சுவிரட்டு என்றும் பல ஊர்களில் பல பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டு விளையாட்டை பற்றிய குறிப்புகள் சிந்து சமவெளி நாகரீகம் இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கபட்டு புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது . மேலும் காளைகளை மக்கள் அக்காலத்தில் கடவுளாகவும் வழிப்பட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் இப்போட்டியை ஏரு தலுவுதல் என்று குறிப்பிட்டுள்ளது. எரு தலுவுதல் என்றால் காளைகளை கட்டி அணைப்பது என்று பொருளாகும். ஏரு தலுவுதல் பற்றிய ஒரு குறிப்பு தமிழக அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. கிமு 400-100 முதல் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது என்ற குறிப்புகள் உள்ளது. சங்க கால புலவர் சோழன் நாலுருத்திருனார் ஏரு தழுவுதல் பற்றி பல பாடல்கள் எழுதியுள்ளார். இந்தியா மட்டுமில்லாமல் எகிப்து நாட்டிலும் இதை பற்றிய குறிப்புகள் உள்ளது. பொதுவாக தை மாதம் பொங்கல் திருநாள் அன்று துவங்கும் இவ்விளையாட்டு பல ஊர்களில் கோவில் திருவிழாக்களில் மிக விமர்சியாக விளையாடப்பட்டு வருகிறது. மேலும் ஜல்லிகட்டு பகவான் கிருஷ்ணர் காலத்திலிருந்தே விளையாடப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணர் ஏழு காளைகலை அடக்கியதன் மூலம் தான் நகனஜீதியை திருமனம் செய்தார்.

தமிழகத்தில் குறிப்பாக 8 இடங்களில் மிக விமர்சியாக நடக்கின்றது. அவை

1.அலங்காநல்லூர்

2.அவனியாபுரம்

3.திருவாப்பூர், புதுக்கோட்டை அருகில்

4.கொண்டாலம்பட்டி தம்மாம்பட்டி, சேலம்

5.பாலமெடு , மதுரை அருகில்

6.சிரவயல் ,காரைகுடி அருகில்

7.கண்டுபட்டி, புதுக்கோட்டை

8.பல்லவராயன்பட்டி , கம்பம் அருகில்

ஜல்லிக்கட்டிற்காகவே ஒரு சில இனத்தை சேர்ந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சி பல வருடங்கலாக அளிக்கப்பட்டு வருகிறது. காளைகள் மட்டுமில்லாமல் வீரர்களும் தன் உயிரை பனையம் வைத்து பயிற்சி எடுக்கின்றனர். இந்த போட்டியின் விதிமுறைகள் மிகவும் எளியது. வாடிவாசல் என்ற வாயிலின் வழியாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயிர்ச்சி பெற்ற வீரர்கள் காளையை அடக்குவதற்கு காத்திருப்பனர். ஜல்லிகட்டுக்கு முன்னே காளைகள் அதன் ஊரில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்படும். வாடிவாசலில் அவிழ்த்து விடபடும் காளையின் திமிலை பிடித்து ஒரு குறிப்பிட்ட தூரம் அல்லது நேரம் கடந்துவிட்டால் அவ்வீரர் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கபடும். மேலும் அக்காளையை ஒன்றுக்கு மேற்ப்பட்ட வீரர்கள் பிடித்தால் அவர்கள் யாருக்கும் வெற்றியில்லை என்று அறிவிக்கபடும். ஒருவேலை காளையை எவரும் பிடிக்கவில்லை என்றால் அக்காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கபடும். இப்போட்டியில் பங்குக்கொள்ளும் அனைத்து மாடுகளும் வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்படும், மேலும் போட்டியில் வென்றால் தான் திருமனம் என்றெல்லாம் வழக்கம் உண்டு. போட்டியில் வெல்லும் காளைகளுக்கு அவ்வூரில் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்துவர், காரணம் சிறந்த காளைகளில் இருந்து தான் சிறந்த கன்றுக்குட்டிகள் வரும் அதன் மூலம் நல்ல மாடுகள் தான் இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு அறிவியல் நிறைந்த ஒரு போட்டியை எதற்காக தடை வந்தது?

அயல்நாட்டு நிறுவனமான பீட்டாவிற்கு இப்போட்டியை தடை செய்வதன் மூலம் என்ன பயன்?இப்போட்டியை

தடை செய்தால் தான் நாட்டு மாடுகளை தடை அழித்துவிட்டு செயற்க்கை முறையில் பிறந்த ஜெர்சி பசுகளை அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யமுடியும். மேலும் காளைகளை அழித்துவிட்டால் உழவு தொழில் செய்வதற்க்கும் சுமை இழுப்பதற்கும் ட்ராக்டர்களை இறக்குமதி செய்யமுடியும். இப்படி பல திட்டங்களை செய்வதற்கு காத்திருந்த பீட்டா மற்றும் இந்திய மிருகங்கள் நல வாரியத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஜல்லிகட்டை தடை செய்வதற்க்கு பல வேலைகளை செய்துவந்தனர். ஜல்லிகட்டு போட்டிகள் ஒரு சில விதிமுறைகளை மீறியும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமலும் நடந்து வந்தது. ஓரு சில இடங்களில் காளைகளுக்கு துன்புறுத்தலும் நடந்து வந்தது. இதனை படமாக்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2008இல் உச்சநீதிமன்றம் ஜல்லிகட்டுப் போட்டிக்கு தடை விதித்தது ஆனால் சில காலத்தில் அத்தடையை தளர்த்தி ஒரு சில நிபந்தனைகளுடன் அவ்விளையாட்டை தொடரலாம் என்று உத்தரவிட்டது.

பின்னர் 2009இல் ஜல்லிக்கட்டு கட்டுபாடு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது, இதன் மூலம் ஜல்லிகட்டு தடையில்லாமல் நடந்தது. 2011இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் நல அமைச்சகம் காளைகலை செயல் திரன் அல்லாத பட்டியலில் சேர்த்தது. ஆனாலும் 2009இல் கொண்டு வந்த சட்டத்தின் மூலம்

தடையில்லாமல் நடந்தது. 2014 வரை தடையில்லாமல் நடந்து வந்த ஜல்லிக்கட்டை , உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும் அரசை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காளைகளை கொண்டு வர வலியுறுத்தியது. பின்னர் 2016இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் நல அமைச்சகம் ஜல்லிகட்டை ஒரு சில நிபந்தனைகளுடன் விளையாட அனுமதித்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அவ்வாணையை எதிர்த்து இந்திய மிருகங்கள் நல வாரியம் தொடர்ந்த வழக்கினால் மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2014இல் கொண்டு வந்த சட்டத்தை மறுபரிசீலிக்க தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது. இப்போட்டியை தடை செய்ய பல வெளிநாட்டு அமைப்புகளும் இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட்டுவந்தனர். மேலும் இப்போட்டியை சிறப்பாக நடத்தவும் உரிய அங்கீகாரம் பெறவும் ஜல்லிக்கட்டு பிரமியர் லீகுஇன் தலைவர் திரு டி.ஆர்.எஸ்.முத்து குமார் பாடுபட்டு வருகிறார்.

தடைகளை வென்று சரித்திரம் படைத்தனர் 2017இல் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள். விடுதலைக்கு பின் நடந்த மாபெரும் போராட்டமாக திகழ்ந்தது ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்த போராட்டம். தமிழகமே ஒன்று திரண்டு அமைதி வெல்லும் என்று இவ்வுலகிற்கு நிருபித்தனர். சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை மட்டுமல்லாமல் உலகிலல் அமெரிக்கா,ஐரோப்பா,அப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் அனைத்து தமிழர்களும் ஒரேக் குரலாக எதிரொலித்தனர். சுமார் இரண்டு வாரங்களாக மக்கள் அரசின் எதிர்ப்பை மீறியும் காவல் துறையின் ஒடுக்குமுறைகளை மீறியும் போராடினர். இப்போராட்டத்தை உலகமே பாராட்டவும் ஆதரிக்கவும் செய்தது. இப்படி பட்ட ஒரு போராட்டதின் பயனாக ஜனவரி 30ஆம் தேதி தமிழக அரசு ஜல்லிகட்டு தடையை தளர்தும் வகையில் ஒரு அரசானையை பிறப்பித்தது. வெற்றிகரமாக மக்களின் போராட்டதினால் அவ்வருடம் ஜல்லிகட்டு மிக சிறப்பாக நடைபெற்றது, இன்றும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டிற்க்கான சட்ட போராட்டத்தை நடத்திய பலரில் முக்கியமான திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுவின் தலைவர். இந்த சட்ட போராட்டத்தை முன்நின்று மிருகவதை தடுப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தார். ஆனால் மீண்டும் பீட்டா போன்ற அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டைத் தடை செய்ய நிறைய வாய்புகள் உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டை பாரம்பரியம் தவராமலும் சட்டபடியும் மிருகவதையும் இல்லாமல் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சட்ட சிக்கல்கள் வந்தாலும் மீண்டும் எதிர்கொள்ள மக்களும் ஜல்லிக்கட்டு அமைப்புகளும் தயாராக உள்ளனர். தமிழர் பெருமையும் வீரமும் ஜல்லிகட்டு எடுத்துரைக்கிறது. மேலும் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களின் விளையாட்டுகளான குதிரை பந்தயம், கம்பாளா, குஜராதிலுள்ள பட்டம் திருவிழா போல ஜல்லிக்கட்டையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் அப்போது தான் அயல்நாட்டு அமைப்பான பீட்டா மற்றும் ஜல்லிக்கட்டை எதிர்கும் அமைப்புகள் உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தாலும் தடையில்லாமல் இப்போட்டியை விளையாட முடியும். நமது பண்டைய விளையாட்டான சிலம்பம் , கபடி போன்ற விளையாட்டுகள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றதை போல ஜல்லிக்கட்டிற்கும் அங்கீகாரம் வேண்டும். இதற்கு மக்கள் மட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்போட்டி தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் பரவி நாட்டு மாடுகளை பாதுக்காக்க முடியும். ஜல்லிகட்டு விளையாடுவோம் நாட்டு மாடுகளை காப்போம்

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now