நாட்டு மாடுகள் நமக்கு தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடைய இறை தன்மையாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம் ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்.
அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ, பாலையோ கலயத்தில் கட்டிக் கொண்டு அமாவாசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள் சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.
உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில் சென்ற ஆண்டுகள் 2016 -17ஆம் ஆண்டு 16 கோடி 54 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தியை எட்டியிருக்கிறது 2013 -14ஆம் ஆண்டை விட 20.12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 500 கிராம் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் இன்றும் அளவும் உள்ளது.
கிராமப்புறப் பகுதிகளில், குறிப்பாக, நிலமற்ற விவசாயிகளுக்கும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் பால் உற்பத்தி மட்டுமே ஆதாரமாக உள்ளது. சுமார் 8 கோடி விவசாயிகள் பால் உற்பத்தி செய்கிறார்கள். இவர்களில் பால் தரும் கால்நடைகளைச் சார்ந்தே 80 சதவீதம் பேர் வாழ்க்கை நடத்துகின்றனர்.
மாடுகளில் இரண்டு வகை உண்டு இதில், A1 என்பது ஜெர்சி மற்றும் கலப்பின மாடுகளையும், A2 என்பது நாட்டு மாடுகளையும் குறிக்கும், இதில் நாட்டு மாடுகளின் சாணத்திலும், சிறுநீரிலும்தான் கிருமி நாசினி உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதிகம் இருக்கின்றன. நமது நாட்டு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றார் போல் வளரக்கூடிவை. இவற்றுக்கான உணவுகள் நம் நிலங்களில் விளையும் புற்களும் வைக்கோல்தான். ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யம் ஜெர்சி மாடுகள் அப்படிபட்டவை அல்ல. நம் நாட்டு தட்பவெப்பம் அதற்கு ஒப்புக்கொள்ளாது. இந்த மாடுகளை வளர்க்க தொழுவத்தில் குளிர்சாதனம் பொருத்த வேண்டும். மற்றும் நம் தீவனங்களை அவை சாப்பிடாது, இவற்றுக்கு என்றே இருக்கும் பிரத்யேக தீவனங்களை அதே பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டும். அதேபோல் ஜெர்சி மாடுகள் நோய்வாய் பட்டாலும் அவற்றுக்கான மருந்துகளை வெளிநாட்டில் இருந்துதான் வரவழைக்க வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் செல்வந்தர் மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினர் எப்படி நாய்களை வளர்க்கிறார்களோ, அப்படி இந்த ஜெர்சி மாடுகளை வளர்க்க வேண்டும்.
நாட்டு மாடுகளை முற்றிலும் அழித்துவிட்டால், சொந்தமாக மாடுகளை வைத்து சிறிய அளவில் பால் வணிகம் செய்து வருபவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவரால் ஜெர்சி மாடுகளை வாங்கி வளர்க்க முடியாது பிழைப்பிற்காக வேறு வழியின்றி பண்ணைகளில் கூலித் தொழிலாளியாக சேரதான் வேண்டிய நிலை ஏற்படி வேண்டுமென்றுதான் ஜல்லிக்கட்டை தடை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முற்படுகின்றன.
ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு மட்டுமல்ல. காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அது திகழ்கிறது. எந்த அளவுக்கு தனது காளையை ஆரோக்கியமாக அதன் உரிமையாளர் வளர்த்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்க தெரியப்படுத்தும் செயலாகவும் வெளிப்படுகிறது. ஏனெனில் ஜல்லிக்கட்டு நடக்கும் காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இனப்பெருக்கத்துக்காகவே அந்தக் காளைகள் பயன்படுகின்றன. காளைகளை அடக்குபவர்கள் மட்டுமல்ல பசுக்களை வைத்திருக்கும் விவசாயியும் ஜல்லிக்கட்டுக்கு செல்கிறார். எந்த காளையுடன் தனது பசு சேர வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.
இயற்கை விவசாயத்துக்கு பலரும் திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்த இயற்கை விவசாயத்தில் முக்கிய உரமாக திகழ்வது, “பஞ்சகவ்யம்” இதற்கு நாட்டின மாடுகளின் கழிவுகன்தான் பெருமளவு மூலதனம் கிதுமி நாசினிகளையும் நோய் எதிர்ப்பு சக்திகளும் இவைகளிடமே அதிகம். இதனால் தான் நம் முன்னோர்கள் ஜல்லிகட்டுக்கு பயன்படும் காளைகள் வழியாக நம் நாட்டு மாடுகள் இனப்பெருக்கம் செய்வதை விவசாயிகள் காலம்தோறும் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் காரணமாகவே நம் பசுக்கள் சுரக்கும் பாலில் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இதுபோன்ற இயற்கை சத்துக்கள் ஜெர்சி மற்றும் கலப்பின மாடுகள் மூலம் பெற முடியாது. பெயருக்குதான் அவை பாலே தவிர அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவே உள்ளன. இப்படிப்பட்ட மாட்டில் இருந்து கிடைக்கும் பாலை குடிக்கும் குழந்தைகள், சவலை பிள்ளைகளாகவும், ஆரோக்கிய குறைப்பாட்டுடனும்தான் வளர்வார்கள். எனவே வருங்கால தலைமுறை ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருப்பதற்காக ஜல்லிக்கட்டை ஆதரித்துத்தான் ஆக வேண்டும். கட்டிப்போடப்பட்ட நிலையில்; காளைகள் வளர்ந்தால் அதை வளர்ப்பவருக்கும் சரி. இனப்பெருக்கத்துக்காக அதை கொண்டு செல்பவர்களுக்கும் சரி, ஒரு பயனும் இல்லை மணலில் புரண்டால்தான் அதன் உடல் வலுவாகும். வேகமாக ஓடினால்தான் கால்கள் திடமாகும். இவை எல்லாம் சரிவர நடந்தால்தான் அதன் வித்து வீரியமிக்கதாக மாறி, கன்றுகள் சக்தியுடன் பிறக்கும். எனவேதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காளை மாடுகளை நம் முன்னோர்கள் நிலப்பரப்புக்கு ஏற்றபடி மஞ்சு விரட்டு, ஜல்லிகட்டு என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக் பயன்படும் காளைகள் காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா நம் நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது நம் மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது. ஏற்றபடி நம் பாரம்பரிய நெல் விதைகளை அழித்து தங்கள் விதைகளை புகுத்தி பூச்சிக்கொல்லி உரங்கள் வழியே நிலத்தின் தன்மையை நச்சாக்கியது போல், பால் வணிகத்திலும் மாட்டிறைச்சி வியாபாரத்திலும் தாங்களே முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே அதனால் தான், அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
இதை சிந்தித்து பார்த்தாலே ஜல்லிக்கட்டு போன்ற இதர வீரவிளையாட்டுகளால் நம் உள்நாட்டு வகைகள் எப்படி பாதுகாத்து வளர்க்கப்பட்டன என்பது தௌ;ள தெளிவாகும். எனவே அண்டை நாட்டு முதலாளிகளின் சதிதிட்டத்திற்கு மேலும் நாம் ஆளாகாமல், நமது உள்நாட்டு மாட்டு வகைகளை பாதுகாக்கும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும். நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி, கேரளாவில் படகுபோட்டி போன்ற விளையாட்டுகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜல்லிக்கட்டு தேசிய அளவில் அங்கீகாரம் பெறபாடுபடுவது நமது முதல் படியாகும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகுவது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியர்களின் உடல் ஆரோக்கியம் மீண்டும் பொழிவு பெற வழிவகை செய்யும்.
இதை அறிந்த திரு T.R.S. முத்து குமார், ஜல்லிக்கட்டு பிரிமியர் லீக் என்ற நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார். மேலும் ஜல்லிக்கட்டை பாரம்பரிய முறையிலும் உரிய அங்கீகாரம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.