2018 ஆம் ஆண்டு Pro Wrestling க்கு ஒரு துக்கமான வருடமாக அமைந்தது. மனிதராக பிறந்த அனைவரும் என்றேனும் ஒருநாள் மரணமடைய வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இந்த 2018 ஆம் வருடம் வழக்கத்திற்கு மாறாக பல WWE வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். நாம் சிறுவயதிலிருந்து பார்த்து ரசித்த வீரர்கள் பலர் இறந்த செய்தி சற்றே சோகமானதுதான். இவ்வாறு இறந்து போகும் WWE வீரர்கள் மற்றவர்களைப் போல அல்லாமல், தங்களது வாழ்நாளில் பல வருடங்களை, தங்கள் குடும்பத்தை விட்டு, பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே WWE-க்காக அர்ப்பணித்தவர்கள்.
#10. பிரையன் கிரிஸ்டோபர். (ஜனவரி 10, 1972 – ஜூலை 29, 2018):
இவரது மரணம் சற்று வித்தியாசமானது. ஆம் பிரையன் கிரிஸ்டோபர் மற்றும் அவரது மனைவி அகா பிரையன் லாவ்லர் ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக வாகனத்தை ஓட்டியதாக ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு சிறையில் கிரிஸ்டோபர் பிணமாக கிடந்தார். இதற்குக் காரணம் தற்கொலை என்று சொல்லப்படுகிறது
ஆனால் மீடியாவிடம் பேட்டி கொடுத்த ஜெர்ரி லாவ்லர், பிரையன் கிரிஸ்டோபர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை, அவர் யாரோ சிறையிலேயே வைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார், என்று கூறியுள்ளார்.
#9. மாஸோ சய்டோ(பிப்ரவரி 1, 1942- ஜூலை 14, 2018):
மாஸோ சய்டோ, சிறந்த தொழில்முறை ரெஸ்ட்லெர் (Legend of professional wrestling) என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு திறமையான வீரர் என்பதை மறுக்க முடியாது. ஆம் பெரிய ரெஸ்ட்லிங் நிறுவனங்களான WWF, WCW, NJPW, AJPW (All Japanese pro wrestling) ஆகிய அனைத்திலும் தனது பங்கை செலுத்தியுள்ளார். இவர் தனித்தே பல சமயங்களில் சண்டையிட்டிருந்தாலும். இவருக்கு வெற்றி தேடித்தந்தது என்னவோ Tag Team மேட்ச்கள் தான். 2000 ஆம் ஆண்டு முதல் பார்கின்ஸன் நோயினால் அவதிப்பட்டு வந்த இவர், 2018-ல் இந்நோய் தீவிரமடைந்தால் உயிரிழந்தார்.
#8. நைக்கோலி வோல்காஃப்(அக்டோபர் 14, 1947- ஜூலை 29, 2018):
இவருக்கு குறிப்பிட்ட அளவிற்கே WWE ல் பங்குள்ளது. காரணம், இவர் பல ஆண்டுகளாக AWA மற்றும் Mid-South Wrestling ஆகிய ரெஸ்ட்லிங் நிறுவனங்களில் இருந்தார். WWE ல் இருந்த காலங்களில் தன்னை ஒரு வில்லனாக நிலைநிறுத்திக் கொண்டார். இவரின் முதுமை காலத்தில் டிஹைட்ரசன் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். 2018-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தன்னுடைய 70 வயதில் மரணமடைந்தார்.
#7. மேட் காப்போடெலி (நவம்பர் 12,1978- ஜுன் 29,2018):
இவர் ஜானி நைட்ரோ மற்றும் ஜான் மோரிசன் ஆகியோருடன் இணைந்து Tough Enough – ஐ வென்றார். தன்னுடைய கான்ட்ராக்டை விரிவுபடுத்த விரும்பிய போதுதான் தெரியவந்தது, தனக்கு மூளை புற்றுநோய் என்று. பிறகு சிகிச்சையில் குணமானார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூளை புற்றுநோய்-ஆல் பாதிக்கப்பட்டார். இவர் தன்னுடைய 38 வது வயதில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
#6. பிரிக்ஹவுஸ் ப்ரௌன் (ஆகஸ்ட் 11,1960 – ஜுலை 29,2018):
பிரிக்ஹவுஸ் ப்ரௌன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பிரபலமாகாமல் இருந்தார். பின் 80 மற்றும் 90 களில் சற்று பிரபலமானார். இவர் ட்ரிபிள் எச்சிற்கு எதிராக சண்டையிட்டதன் மூலம் பிரபலமானவர். 2017 ல் Prostate புற்றுநோய்-ஆல் பாதிக்கப்பட்ட இவர் அதன் தாக்கம் மூளை முழுவதும் பரவியதால் ஜுலை மாதம் உயிரிழந்தார்.
#5. ஜானி வாலியன்ட்(நவம்பர் 25,1946- ஏப்ரல் 4,2018):
ஜானி வாலியன்ட் WWE ல் இருந்தவர். பிறகு ப்ரூனோ சாமரிட்டினோவின் உதவியால் தனது கேரியரை ஆரம்பித்தார். இவர் இரண்டு முறை TAG TEAM சாம்பியனாக இருந்துள்ளார். இவர் துரதிர்ஷ்டவசமாக ஏப்ரலில் பிட்ஸ்பர்க் அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு பிக் அப் ட்ரக் மோதி உயிரிழந்தார்.
#4. பிக் வான் வாடர் (மே 14,1955-ஜுன்18,2018):
பிக் வாடரின் இழப்பு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் இவர் ஒரு சிறந்த வீரர். இவர் ஒரு சிறந்த வில்லனாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ரெஸ்ட்லிங் நிறுவனங்களில் இருந்தார். இவர் WWE-ல் இருந்த போது எளிதில் வீழ்த்த முடியாத வீரராக இருந்தார். 2016 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவரிடம் இன்னும் இரண்டு வருடம் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தன்னை அவர் யோகாவில் ஈடுபடுத்திக்கொண்டார், ஆனால் இது பலனளிக்காமல் உயிரிழந்தார்.
#3. டைனமைட் கிட் (டிசம்பர் 5,1958- டிசம்பர் 5,2018):
டைனமைட் கிட் குறிப்பிட்ட சில ரசிகர்களால் மட்டுமே விரும்பப்பட்டவர். தன்னுடைய காலகட்டங்களில் முன்னணி வீரராக இவர் இருந்ததில்லை. ஆனால் தனது சண்டையிடும் ஸ்டைலின் மூலம் இறுதி வரை தாக்குப்பிடித்தார். தனது ஒரு காலை இழந்த பின் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டார். அதன்பிறகு தனது மீதமிருந்த வாழ்நாள் முழுதும் வீல் சேரிலேயே கழித்தார். பல்வேறு நோய்கள் இருந்ததால், இவருடைய இறப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை
#2. ஜிம் ‘தி அன்வில்’ நெய்ட்ஹார்ட் (பிப்ரவரி 8,1955-ஆகஸ்ட் 13,2018):
ஜிம் நெய்ட்ஹார்ட் இல்லாமல் பொற்காலம் மற்றும் புதிய காலங்களை நினைத்து கூட பார்க்க முடியாது. இவர் ஒரு தலைசிறந்த Tag Team ஆக தனது காலத்தில் இருந்தார் என்பதை மறுக்க முடியாது. செயிஸுரே என்னும் நோயிற்காக ஆகஸ்ட் 13 அன்று சிகிச்சை பெறும்போது தன்னிலை அறியாமல் கீழே விழுந்து மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.
#1. ப்ரூனோ சாமரிட்டினோ:
ப்ரூனோ சாமரிட்டினோ தான் WWE-ன் முதல் ஆக இருந்தவர். அமெரிக்காவின் பணக்கார குடும்பத்தில் பிறந்த இவரை WWE -க்குள் கொண்டுவந்து டாப் ஸ்டாராக மாற்றினார்கள். இவர் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் அதாவது 2803 நாட்கள் WWE சாம்பியன்ஷிப்பை தன்வசம் வைத்திருந்தார். பின்னர் சாம்பியன்ஷிப்பை இழந்து மீண்டும் கைப்பற்றி அதை 4040 நாட்கள் அதாவது மூன்று வருடங்கள் வைத்திருந்தார். ஆகமொத்தம் 11 ஆண்டுகள் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஒரே வீரர் இவர்தான். இவர் நிஜ ஹீரோவாக திகழ்ந்தார். அதனால் தான் அவர் சாம்பியன்ஷிப்பை இழந்த ஒட்டுமொத்த அரங்கமே அமைதியில் மூழ்கியது.
இருதய நோயினால் அவதிப்பட்ட இவருக்கு பல உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டன. இரண்டு மாதங்கள் வரை சிகிச்சை பெற்று வந்த இவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எழுத்து :ரோகித் நாத்
மொழியாக்கம்: அகன் பாலா