ரெஸில்மேனியா 35-ல் டிரிபிள் ஹெச்சிற்கு எதிராக களம் காண வாய்ப்புள்ள 2 வீரர்கள்!

ட்ரிபிள் ஹெச்
ட்ரிபிள் ஹெச்

டிரிபிள் ஹெச் டபிள்யூ டபிள்யூ வரலாற்றில் ஒரு சரித்திர நாயகன் என்பது நம் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் வயது முதிர்ச்சியின் காரணமாக முக்கியமான போட்டிகளில் மட்டுமே களம் காண்கிறார். WWE-வின் நிர்வாக இயக்குனராக இருக்கும் இவர் போட்டிகளின் பின் நடக்கும் பல்வேறு விஷயங்களில் பங்காற்றுவார். இவர் கடைசியாக கிரவுன் ஜவல்-இல் நடைபெற்ற போட்டியில் ஷான் மைக்கல்ஸ் உடன் ஜோடி சேர்ந்து பிரதர்ஸ் ஓப் டீஸ்ட்ரக்ஷன் எனப்படும் அண்டர்டேக்கர் மற்றும் கேன் இணையை எதிர்கொண்டார்.

டிரிபிள் ஹெச் 24 வருடமாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். பலதரப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்றுள்ளார். இன்டரகான்டினென்டல் டைட்டிலை ஐந்து முறையும், ஐரோப்பாவின் டைட்டிலை இரண்டு முறையும், டேக் டீம் டைட்டிலை மூன்று முறையும், பின்பு WWE டைட்டிலை 14 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராயல் ரம்பிள் போட்டிகளில் இரண்டு முறை வென்றுள்ளார்.

ரெஸில்மேனியா 35 தொடங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், டிரிபிள் ஹெச் மீது எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் நடைபெறும் இப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே டிரிபிள் ஹெச்சுடன் ரெஸில்மேனியா-35ல் மோத வாய்ப்பு உள்ள இரண்டு வீரர்களை பற்றி இங்கு காண்போம்

#2. படிஸ்டா

படிஸ்டா
படிஸ்டா

சந்தேகமின்றி படிஸ்டா டிரிபிள் ஹெச்சிற்கு சிறந்த போட்டியாளராக அமைவார். கடந்த சில வருடங்களாக படிஸ்டா ஆடாத போதிலும் ஒரு சிறந்த கம் பேக்கிற்காக காத்திருக்கிறார். இதனை ஸ்மாக்டௌன் நேரலையில் ஆயிரமாவது எபிசோடில் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவு கொள்ள வேண்டிய ஒன்று. அவ்வாறு நடைபெற்றால் நியூஜெர்சியில் அமைந்துள்ள மேட்லைப் மைதானத்தில் ஆரவாரத்திற்கு பஞ்சமே இருக்காது.

படிஸ்டா அவரது காலத்தில் முதன்மையான வீரராக விளங்கி வந்தார். போட்டிகளில் மறக்கமுடியாத எதிரிகளை சந்தித்துள்ளார் படிஸ்டா. "தி அனிமல்" என்று அழைக்கப்படும் இவர் 2002ஆம் ஆண்டு முதன்முதலாக WWE போட்டிகளில் களம் கண்டார். டபிள்யூ டபிள்யூ டைட்டிலை ஆறுமுறை வென்று குவித்துள்ளார். டேக் டீம் டைட்டிலை நான்கு முறையும் ராயல் ரம்பிள் போட்டியை இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது ஐம்பதாவது வயதில் உள்ள படிஸ்டா, ஹாலிவுட் திரையுலகில் பிஸியாக உள்ளார். மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கணிசமான வெற்றிகளை ஹாலிவுட்டில் படைத்துள்ளார் படிஸ்டா. பல மறக்கப்பட்ட வீரர்கள் ரெஸில்மேனியாவில் தடம் பதிப்பது வழக்கம், அதுபோலவே படிஸ்டா நீண்ட இடைவேளைக்கு பிறகு எதிர்வரும் ரெஸில்மேனியாவில் களம் காணலாம். கணிசமான இடைவேளைக்கு பிறகு 2013ஆம் ஆண்டு படிஸ்டா தளத்திற்கு திரும்பி இருந்தாலும், பழைய உத்வேகத்துடன் செயல்படவில்லை. 2014 ஆம் ஆண்டு ராயல் ரம்பிள் போட்டியை வென்று இருந்தாலும் டபிள்யூ டபிள்யூ ஈ ரசிகர்களால் இவர் புறந்தள்ளப்பட்டார்.

டிரிபிள் ஹெச் மற்றும் படிஸ்டா இடையே பல மறக்க முடியாத நினைவுகள் இருக்கின்றன. இவர்கள் ரெஸில்மேனியா 21-இல் ஒருவருக்கொருவர் மோதினர். அதில் படிஸ்டா வெற்றி கண்டிருந்தார். எனவே நியூ ஜெர்ஸியில் இந்த முடிவு திரும்புமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம் !

#1. டீன் அம்புரோஸ்

டீன் அம்புரோஸ்
டீன் அம்புரோஸ்

டீன் அம்புரோஸ், டிரிபிள் ஹெச்சிற்கு எத்த இணையான வீரர். எனவே இவ்விருவரும் போட்டியிட்டால் மறக்கமுடியாத போட்டியாக இது அமையும். அம்புரோஸ் தற்போது ரெட் பிராண்டில் உள்ளார். ரெஸில்மேனியா 35-க்கு பிறகு இவர் கம்பெனியை(WWE) விட்டு வெளியேற உள்ளார்.

அம்புரோஸ் கடந்த மாதம் நடந்த ரா நிகழ்ச்சியில் டிரிபிள் ஹெச்சுடன் வார்த்தை சண்டையில் ஈடுபட்டது நமக்கு தெரிந்ததே. டிரிபிள் ஹெச் அம்புரோஸின் சிறந்த ஆற்றலை வெளிக்கொணரும் நோக்கத்தில் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்புரோஸ் தற்போது தலைசிறந்த சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். 2012ஆம் ஆண்டு முதன்முதலில் தடம் பதித்த அம்புரோஸ், ஷீயீல்டு அணியில் முக்கியமான வீரராக திகழ்ந்து வந்தார். டபிள்யூ டபிள்யூ டைட்டிலை ஒரு முறையும், இன்டர்கான்டினென்டல் டைட்டிலை மூன்று முறையும், டேக் டீம் டைட்டில் மற்றும் யுஎஸ் டைட்டிலை தலா ஒரு முறையும் வென்றுள்ளார்.

அவ்வாறு இவ்விரு வீரர்கள் களம் கண்டால், போட்டி சுவாரஸ்யம் அடையும். காரணம் அம்புரோஸ் மற்றும் டிரிபிள் ஹெச் ஏற்கனவே களம் கண்டுள்ளனர். 2016-ஆம் ஆண்டு ரோட்பிளாக் போட்டியில் டிரிபிள் ஹெச் அம்புரோஸை வென்றிருந்தார்.

எழுத்து : அவிக் தாஸ்

மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்