இந்த வருடம் புரோ ரெஸ்லிங் மற்றும் WWE ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வருடம் என்று கூற முடியாது . ஏனென்றால், WWE க்ரியேடிவ் டீம் எடுத்த பல முடிவுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக அமைந்தது. இருப்பினும் , உலகின் மிகப் பெரிய புரோ ரெஸ்லிங் கம்பெனியான WWE இவ்வருடமும் ரசிகர்கள் மறக்க முடியாத சில தருணங்களைத் தந்தது. 2018-இன் ஆரம்பத்தில் அசூகா ராயல் ரம்பல் வென்றதிலிருந்து , ஆண்டு இறுதியில் TLC-யில் அவர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியை ஜெயித்த வரை நடந்த சுவாரசியமான டாப் 5 சம்பவங்கள் இதோ,
#5 டேனியல் ப்ரையன் மீண்டும் ரெஸ்லிங் செய்தது.
ப்ரையன் மீது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கலாம் , ஆனால் யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம் அவர் மீண்டும் ரெஸ்லிங் செய்தது விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மீதுள்ள பாசத்தினாலும் என்பது தான். அமெரிக்கா முழுவதும் உள்ள பல டாக்டர்கள் அவர் மீண்டும் ரெஸ்லிங் செய்யலாம் என்று கூறினாலும் , WWE அவரை ரெஸ்லிங் செய்ய அனுமதிக்கவில்லை.
நிறைய பேர் ப்ரையன் தன் WWE ஒப்பந்தம் முடிந்தவுடன் வேறு சில சிறிய ரெஸ்லிங் கம்பெனிகளில் இணைந்து பணி புரிவார் என்று நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மார்ச் 20-ஆம் தேதி ப்ரையனை WWE ரெஸ்லிங் செய்ய அனுமதித்தது. அதற்கடுத்த வாரம் நடந்த ஸ்மாக்டௌன் நிகழ்ச்சியில் ப்ரையனை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்றனர். தற்பொழுது ப்ரையன் WWE சாம்பியனாக உள்ளார்.
#4 அண்டர்டேக்கர் ரிடர்ன்ஸ் :
நிறைய புரோ ரெஸ்லிங் ரசிகர்கள் அண்டர்டேக்கர் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தாலும் , அவர் ரிங்கிற்கு வரும் பொழுது இன்றும் மெய்சிலிர்க்கிறது என்பதே உண்மை. ரெசுல் மேனியா 33-க்கு பிறகு அவர் ஓய்வு பெற்று விட்டார் என்றே அனைவரும் கருதினர். ஆதலால், ஜான் சீனா போட்டிக்கு அழைத்த பொழுது அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மற்றொரு காரணம் அவர் சென்ற வருடம் விளையாடிய போட்டிகளில் பழைய வேகமோ சுவாரசியமோ இல்லாதது தான். ஆனால், ரெசுல் மேனியா 34-இல் மீண்டும் வந்த ஜான் சீனாவின் சவாலை ஏற்று அவரை தோற்கடித்தார்.
#3 அசூகா பெண்கள் ராயல் ரம்பலை ஜெயித்தது.
கர்மா, பெத் ஃபீனிக்ஸ் போன்ற பெண்கள் ஏற்கனவே ராயல் ரம்பலில் கலந்து கொண்டு இருந்தாலும் ராயல் ரம்பலில் பெண்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. பெண் ரெஸ்லர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஸ்டெஃபனீ மெக்மேஹன் பெண்களுக்கென இவ்வருடம் தனி ராயல் ரம்பல் உண்டு என்று RAW நிகழ்ச்சியில் அறிவித்தார்.
இந்த ராயல் ரம்பலை சாஷா பேன்க்ஸ் மற்றும் பெக்கீ லின்ச் ஆரம்பித்தனர். ஐந்தாவது போட்டியாளராக லீடா நுழைந்த பொழுது மொத்த அரங்கமும் அதிர்ந்தது. ட்ரிஸ் ஸ்ட்ரேடஸ் மற்றும் மிட்சல் மெக்கூலும் மீண்டும் வருகைத் தந்தனர். இறுதியில், நிக்கி பெல்லாவை எலிமினேட் செய்து அசூகா ராயல் ரம்ப லை வென்றார்.
#2 ஆம்ப்ரோஸ் ராலின்சுக்கு எதிராக திரும்பியது:
சம்மர் ஸ்லாமிலேயே ராலின்சுக்கு எதிராக ஆம்ப்ரோஸ் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பின், ஹெல் இன் அ செல் ( Hell in a cell ) நிகழ்ச்சியில் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்தனர். எனினும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வாறு நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு ரா நிகழ்ச்சியில் ரோமன் ரைன்ஸ் லுகீமியா நோயின் காரணமாக WWE-யை விட்டு விலகுவதாக அறிவித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அதே நிகழ்ச்சியில் டாக் டீம் டைட்டிலை வென்றவுடன் ராலின்சை அடித்து நொறுக்கினார் ஆம்ப்ரோஸ். இது நடக்கும் என்று கிசுகிசுக்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தாலும் , அந்த தருணத்தை WWE சரியான நேரத்தில் அரங்கேற்றியது.
#1 ப்ரூடல் பெக்கி லின்ச் :
பெக்கி லின்சின் ரெஸ்லிங் திறமை அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் , அவரை WWE சரியாக பயன் படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால், சம்மர் ஸ்லேமிற்கு பிறகு WWE அவருக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தது. ஹெல் இன் அ செல் நிகழ்ச்சியில் WWE சாம்பியன்ஷிப்பை வென்றார். சர்வைவர் சீரியசில் அவர் ரோண்டா ரௌசீ உடன் மோதுவதாக இருந்தது.
அந்நேரத்தில், RAW நிகழ்ச்சிக்கு வந்த பெக்கீ லாக்கர் ரூமில் இருந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தார். அந்த சண்டையின் பொழுது நியா ஜாக்ஸ் தெரியாமல் பெக்கீயை உண்மையாகவே பன்ச் செய்து விட்டார். முகத்திலிருந்து ரத்தம் ஊற்றிய பொழுதும் பெக்கீ துணிச்சலொடு செயல்பட்டு அந்த செக்மன்டை முடித்தது அவருக்கு நிறையப் பப்ளிசிட்டியைத் தந்தது. இன்று ஸ்மாக்டௌன் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக திகழ்கிறார் பெக்கீ லின்ச்.
எழுத்து: சஞ்சய் ப்ரதீப்
மொழியாக்கம்: அஜய்