பாஸ்ட்லெனில் WWE தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் !

பாஸ்ட்லென்
பாஸ்ட்லென்

WWE-வின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான ரஸில்மேனியா தொடங்க ஐம்பது நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. நாளடைவில் ரஸில்மேனியா‌க்கான எதிர்பார்ப்புகள் கூடி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராயல் ரம்பிள் மற்றும் எலிமினேஷன் சேம்பர் போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றது. மீதமுள்ள ரஸில்மேனியா நிகழ்ச்சியையும் பிரமாதமாக நடத்த காத்திருக்கின்றது WWE நிர்வாகம்.

கடந்த 2 பே பர் வியூ (வாடிக்கையாளர்கள் போட்டிகளின் அடிப்படையில் கட்டண தொகையை செலுத்தி பார்க்கப்படும் முறை பே பர் வியூ எனப்படும்) போட்டிகள் நன்றாக முடிந்துவிட்டது. எனவே மீதமுள்ள பே பர் வியூ நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக முடிக்க WWE காத்திருக்கின்றது.

பாஸ்ட்லெனில் இடம்பெறும் பே பர் வியூ போட்டிகள் அதிகளவில் பேசப்படாத போட்டியாக இருக்கும். பொதுவாக பாஸ்ட்லென் போட்டிகள் பிரபலமான பே பர் வியூ தொடரான ரஸில்மேனியாவுக்கு பயிற்சி ஆட்டமாக அமையும்.

எனவே பாஸ்ட்லென் போட்டிகளில் WWE நிர்வாகம் அதிக கவனம் செலுத்தாது, ரசிகர்களும் பெரிதாக இத்தொடரில் ஈடுபடுவதில்லை.

எனவே பெரிதும் பேசப்படாத பாஸ்ட்லென் போட்டிகளில் WWE நிர்வாகம் செய்யக்கூடாத மூன்று விஷயங்களைப் பற்றி இங்கு காண்போம்.

#1. அமெரிக்க சாம்பியன்ஷிப் இல்லாமை.

ஆர். டூருத்
ஆர். டூருத்

கடந்த காலங்களில் ஜான் ஸினா தனது அமெரிக்க சாம்பியன்ஷிப்பை வாரம்தோறும் பணயம் வைத்து பல மறக்க முடியாத போட்டிகளில் தனது டைட்டிலை டிபன்ட் செய்துள்ளார்.

சமீபகாலமாக அமெரிக்க சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. சமீபத்தில் அமெரிக்க டைட்டிலை ஷின்சுகே நாகமூராவும் அதுக்கடுத்து ரூசவ்-வும் வைத்திருந்தனர். தற்போதைய நிலையில் அமெரிக்க டைட்டிலை வைத்திருப்பது ஆர்.டூருத். அவரை கடைசியாக போட்டிகளில் பார்த்தது அமெரிக்க டைட்டிலை வென்றபோது தான். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஆர்.டூருத் பங்கேற்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆகவே எதிர்வரும் பாஸ்ட்லென் போட்டிகளில் அமெரிக்க டைட்டில் போட்டியை WWE நிர்வாகம் முன்னின்று நடத்த வேண்டும். அதற்கான ஏற்ற வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான கதையை இப்போதிருந்தே WWE செயல்படுத்த வேண்டும்.

#2. கோஃபி கிங்ஸ்டனை டம்மி ஆக்குதல்

கோஃபி கிங்ஸ்டன் மற்றும் டேனியல் பிரையன்
கோஃபி கிங்ஸ்டன் மற்றும் டேனியல் பிரையன்

கடந்த சில வாரங்களில், ஒரு பழைய வீரரின் எழுச்சியை கண்டு வருகிறோம். அவரில்லாமல் WWE-வின் பெரும் போட்டிகள் நடப்பதில்லை, அவர்தான் கோஃபி கிங்ஸ்டன்.

எதிர்வரும் பாஸ்ட்லென் போட்டியில் டேனியல் பிரையனுக்கு எதிராக சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கான போட்டியில் களமிறங்குகிறார் கோஃபி கிங்ஸ்டன்.

எலிமினேஷன் சேம்பர் போட்டியில் முஸ்தபா அலி-க்கு பதிலாக களம் கண்ட கோஃபி கிங்ஸ்டன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவரின் திடீர் எழுச்சி யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒரே போட்டியில் டேனியல் பிரையன் மற்றும் சமோவா ஜோ ஆகியோரை ஒவ்வொன்றாக பின் செய்தார் கோஃபி. எலிமினேஷன் சாம்பர் போட்டியிலும் கடைசி இரு வீரர்களில் ஒருவராக இருந்தார் கோஃபி. நூலிலையில் WWE சாம்பியன் ஆகும் வாய்ப்பை நழுவவிட்டார்.

பெரும்பாலான ரசிகர்கள் எதிர்வரும் பாஸ்ட்லென் போட்டியில் கோஃபி கிங்ஸ்டனயே ஆதரிக்கின்றனர். ஆனால் WWE-வின் கதைக்களம் அப்படி அமையாது என்று தெரிகிறது. கோஃபி கிங்ஸ்டன் டேனியல் பிரையனுக்கு எதிராக வென்றால் அது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக இருக்கும். எனவே அத்தகைய வரலாற்று நிகழ்வை பாஸ்ட்லெனில் WWE புகுத்தாது என்று தெரிகிறது. கோஃபி கிங்ஸ்டன் தோற்கடிக்கப்பட்டு மிகப்பெரிய பே பர் வியூ போட்டியான ரஸில்மேனியாவில் மறுப்போட்டிக்கு WWE வாய்ப்பளிக்கும் என்று தெரிகிறது..

ஆகவே பாஸ்ட்லென் போட்டியில் கோஃபி கிங்ஸ்டனுக்கு எதிராக சண்டையிடும் டேனியல் பிரையன் பெரும் போராட்டத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். எளிதில் பிரையன் வெற்றி காணும் வகையில் போட்டியை அமைத்தால் கோஃபியின் சமீபத்திய புகழ் பெயர் பாதிக்கப்படும், அதுமட்டுமில்லாது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் WWE கருத்தில் கொள்ள வேண்டும்.

#3. போட்டியிடாத வீரர்கள் திரும்புதல் மற்றும் ரஸில்மேனியா சவால் இல்லாமை

கெவின் ஓவென்ஸ்
கெவின் ஓவென்ஸ்

மிகப்பெரிய பே பர் வியூ தொடரான ரஸில்மேனியா-வில் உறுதிசெய்யப்பட்ட போட்டிகள்.

சேத் ரால்லின்ஸ் vs ப்ராக் லெஸ்னர் (யுனிவர்சல் சாம்பியன்ஷிப்)

சார்லோட் vs ரோண்டா ரோவ்ஸி (ரா பெண்களுக்கான சாம்பியன்ஷிப்)

மேற்குறிப்பிட்ட போட்டிகளை தவிர வேறு எந்த போட்டிகளும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. இந்த வருட ரஸில்மேனியா-வில் பெரும்பாலான நட்சத்திர வீரர்களின் பங்கு இருக்காது. எனவே WWE நிர்வாகத்துக்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆகவே நட்சத்திர வீரர்களை கம் பேக் செய்ய வைப்பதில் முனைப்புடன் இருக்கிறது WWE. ஓய்வில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களான கெவின் ஓவன்ஸ், சமி ஜாய்ன் மற்றும் பிரே வயட் ஆகியோரை ரஸில்மேனியா-வில் புகுத்த வியூகம் வகுக்கிறது WWE .

ரஸில்மேனியா-வில் வீரர்களின் திரும்புதலை எதிர்நோக்கும் WWE, பாஸ்ட்லென் போட்டிகளிலும் அவ்வாறு செய்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமே இருக்காது

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now