WWE ன் போக்கு கடந்த சில வாரங்களாகவே மோசமாக உள்ளது. இதற்கு சான்றாக கடந்த சில வாரங்களில் நடைபெற்ற WWE RAW – வை சொல்லலாம். பேரோன் கார்பின் தலைமையில் நடந்த அனைத்து ஷோக்களும் மந்தமாகவே இருந்தன, காரணம் திரும்பத்திரும்ப நடத்தப்பட்ட ஒரே மாதிரியான நிகழ்வுகளால் அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பதே விளையாட்டு விமர்சகர்கள் உட்பட பலரது கருத்தாகும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முயற்சிகளால் WWE ஷோவானது அகலபாதாளத்திற்குச் சென்றது. இதனால் விரக்தி அடைந்த அந்நிறுவனம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர 2019 ல் தான் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வின்ஸ் மக்மஹோன் அவ்வளவு நீண்ட காலத்திற்கு தள்ளிப்போட முடியாது என்பதை மனதில் கொண்டு அதை சரிசெய்ய தானே களத்தில் இறங்கினார். இதற்குப் பிறகு விடுக்கப்பட்ட அறிக்கையில் WWE சேர்மனான வின்ஸ் மக்மஹோன் மீண்டும் WWEக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது ஆன்லைன் வேர்ல்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. வின்ஸ் மக்மஹோன் SMACKDOWN 1000 என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு டி.வி க்கு மீண்டும் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில், வின்ஸ் அவருடைய நிறுவனத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியான XFL க்கு தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. (XFL என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு அமெரிக்கன் கால்பந்து தொடராகும்). தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலால் அந்த முடிவு சில காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவருடைய வருகையால் இன்னும் ஒருசில வாரங்களில் WWE RAW மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்ச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது, மாறாக அடுத்து வரவிருக்கும் சம்மர் ஸ்லாம், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கட்டுரையில் இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்ட சில விஷயங்களைப் பற்றிக் காண்போம்.
#1. Fight for the keys to the kingdom.
வரும் வாரங்களில் வின்ஸ் மக்மஹோன் மன்டே நைட் ராவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் போலும், அதன் முன்னோட்டமாக இந்த வாரம் வின்ஸ் மற்றும் ஹெல்ம்ஸ்லி ரெஜைமி ஆகியோர் இணைந்து மீண்டும் WWE – ஐ தாங்களே வாங்கி விட்டதாக அறிவித்தார் வின்ஸ் மக்மஹோன். இதன்மூலம் டிஸ்னி நிறுவனம் WWE – வை சமீபத்தில் வாங்கி விட்டதாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.
அத்தோடு மட்டுமல்லாமல், இனிமேல் நால்வர் மட்டுமே WWE UNIVERSE – ஐ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணியை செய்வார்கள் என்றும் அவர் கூறினார். இதன்மூலம் இம்முறை நிச்சயமாக WWE அடுத்த கட்டத்திற்கு செல்லும். அவ்வாறு ஏற்படின் அந்த நால்வரில் இரண்டு பேர் வின்ஸ் மற்றும் ஸ்டெப்பினி மக்மஹோன் ஆகியோர் இணைந்து தங்களுக்குத் தேவையான வீரர்களை தேர்வு செய்வார்கள். இதன் பிறகு இவர்கள் மீதமுள்ள இருவரின் அணியை வீழ்த்த வேண்டும் என்று முயற்சிப்பார்கள். மேலும் டிரிபிள் எச் மற்றும் ஷேன் மிக்மேன் ஆகியோருக்கிடையே சண்டை வைத்து யார் WWE ஹெட் குவாட்டர்ஸ்க்கு தலைவர் என்பதை முடிவு செய்வார்கள். இதன் மூலம் மீண்டும் WWE அனைத்து டிவி WRESTLING நிகழ்ச்சிகளையும் பின்னுக்குத்தள்ளும். இது நிச்சயமாக WWE ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.