#2. சர்ப்ரைஸ் என்ட்ரி இன் தி ராயல் ரம்பள்
WWE இந்த வாரம் இரண்டு வீடியோக்களை வெளியிட்டது. அவற்றில் இரண்டு பேரின் ரிட்டர்ன் பற்றிய செய்தி இருந்தது. ஒன்று சமி ஸைன் மற்றும் கெவின் ஓவென்ஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து பின் பிரிந்து வெவ்வேறு ஷோக்களில் காயம் ஏற்பட்டு வெளியேறினர். ஆனால் இவர்கள் இருவருக்குமே காயம் ஏற்படுத்தியவர் பாபி லாஸ்லி.
ஆம், சமி ஸைன் money in the bank-ல் லாஸ்லியால் காயம் அடைந்தும், கெவின் ராவில் லாஸ்லியால் காயம் ஏற்பட்டும் வெளியேறினர். இவர்கள் இருவரும் குணமடைந்து வருவதால் கூடிய விரைவில் WWE – க்கு திரும்புவார்கள்.
அவர்கள் இருவரும் இல்லாதது WWE – க்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆம் இவர்கள் இருவரும் அனைத்து விதமான சண்டைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவந்தார்கள்.
அவர்கள் பங்கு பெறும் இரண்டு ஷோக்களிலும் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் கெவின் ஓவென்ஸ் தனது முதலாளியான ஷேன் மிக்மேன் உடன் சண்டையிட்டதைக் கூறலாம்.
#3. புதுவித கூட்டணிகளை உருவாக்குவது.
மிகவும் வித்தியாசமான ஸ்டோரிலைன்களை அறிமுகப்படுத்துவதில் WWE-க்கு நிகர் யாருமில்லை. அவ்வாறு இதற்கு முன் பயன்படுத்திய கதைக்களங்களில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அதை தற்போதைக்கு ஏற்றாற்போல் இதுவரை மாற்றி அமைத்து வருகிறது WWE. ஆனால் தற்போது அப்படியில்லாமல் புதுவித முயற்சியை கையில் எடுத்துள்ளனர். ஆம் இதுவரை ஒன்றாக இருந்து வந்த டால்ஃப் ஜிங்லர் மற்றும் ட்ரு மேக்கன்டைர் ஆகியோரைப் பிரித்து இருவருக்கும் தனித்தனியாக வேறொரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது WWE. ட்ரு மேக்கன்டைர்-ஐ பேரோன் கார்பின் உடன் இணைத்துள்ளனர். இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெற போகிறது என்பதை விட இதனால் WWE TAG TEAM பகுதியில் புதுவித மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.