சமீபத்தில் நடந்து முடிந்த SummerSlam 2019 போட்டியில் பிராக் லெஸ்னர் செத் ரோல்லிங்ஸ்-ஐ எதிர்கொண்டார். இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இருவரும் சம பலத்துடன் திகழ்ந்தாலும் இறுதியில் செத் ரோல்லிங்ஸ் போட்டியில் வெற்றி கண்டார். பல நாட்களுக்கு பின் பிராக் லெஸ்னர் தோல்வியை தழுவியுள்ளார். இது இவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது முடிவல்ல பிராக் லெஸ்னர் மீண்டும் விரைவில் யூனிவேர்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவார் என தெரிவிக்கப்பட்டது. இது வரும் வாரங்களில் ராவ் போட்டிகளில் நடைபெறலாம். இந்நிலையில் பிராக் லெஸ்னர் அடுத்துவரும் காலங்களில் எதிர்கொள்ள விருக்கும் சிறந்த 3 போட்டியாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#4) கெவின் ஓவன்ஸ்

தற்போது நடைபெற்று வரும் WWE போட்டிகளில் சிறந்து விளங்குபவர் கெவின் ஓவன்ஸ். இவர் பல முன்னணி வீரர்களையும் வெற்றி கண்டு இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த SummerSlam போட்டியில் கூட இவர் ஷான் மெக்மோஹனை வீழ்த்தினார். அப்போது இவர் தெரிவித்தது இந்த போட்டியானது முடிவுக்கு வரவில்லை. இது இன்னும் தொடரும் என கூறினார். இந்நிலையில் இவருக்கு சிறந்த எதிரியை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மெக்மோஹன் தள்ளப்பட்டுள்ளார். இது இனி வரும் காலங்களில் பிராக் லெஸ்னர் vs கெவின் ஓவன்ஸ் போட்டியாக கூட அமையலாம். ஒருவேளை அந்த போட்டியில் இவர் வெற்றி பெரும் பட்சத்தில் இவர் சிறந்த வீரராகவும் கருதப்படுவார்.
#3) கோபி கிங்ஸ்டன்

தற்போதைய காலகட்டத்தில் முன்னணி வீரராக உருவெடுத்துள்ளவர் கோபி கிங்ஸ்டன். பல ஆண்டுகளாக இவர் WWE போட்டிகளில் பங்கேற்று வந்தாலும் தற்போது தான் முன்னணி வீரர் என்ற நிலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இதற்க்கு முன் இவர்கள் இருவரும் WWE ஜப்பானில் நடைபெற்ற WWE போட்டியில் மோதினர். சில மாதங்களுக்கு முன்னர் கூட கோபி கிங்ஸ்டன் ரேண்டி ஆர்டனை வீழ்த்தியிருந்தார். எனவே இவர் பிராக் லெஸ்னருக்கு கடும் போட்டியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1) பிரே வாட்

பிரே வாட் சமீபத்தில் தி பைன்ட் உடன் இணைந்து கலக்கி வருகிறார். இது ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களில் கூட்டணியானது தற்போது சிறந்து விளங்குகிறது. இவர்கள் வழக்கமாக டெமிங் கிங் அணியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரே வாட் தாங்கள் புதிய எதிரியை தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களுடன் மோதுவோம் எனவும் கூறினார். எனவே இவர்கள் பிராக் லெஸ்னரை எதிர்கொள்வதற்க்கே அதிகமாக ஆர்வம் செலுத்தி வருவதால் இவர்களுக்கு இடையேயான போட்டி விரைவில் நடைபெறலாம்.