சமீபத்தில் ரா(RAW ) நிகழ்ச்சிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்த வின்சி மெக்மேஹன் வரும் நாட்களில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு தர போவதாக கூறினார். இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவாக இருந்தாலும் , இந்த வருடம் விடைப்பெற்ற நிறைய ரெஸ்லர்களின் வெற்றிடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்காது. தான் நீண்ட நாள் நேசித்த ஒரு வேலையை விட்டு விலகும் பொழுது சில ரெஸ்லிங் ஜாம்பவான்கள் கூறிய வார்த்தைகள் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. அவ்வாறு 2018-இல் ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடைப் பெற்ற 4 முக்கிய ரெஸ்லர்களின் பட்டியல் இதோ,
#4. சம்மர் ரே ( Summer Rae )
என்.எக்ஸ்.டீ - இல்(NXT) தற்போதுள்ள அனைத்து திறமையான பெண் ரெஸ்லர்களும் வருவதற்கு முன்னரே சம்மர் ரே பிரபலமான ஒரு ரெஸ்லராக திகழ்ந்தவர். ஆனால் WWE-ல் சம்மர் ரே வால் பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை. மாடலிங்கில் இவருக்கு விருப்பம் அதிகம் ஆதலால் அவரது ஆசைப் படியே WWE அக்டோபர் 2017-இல் சம்மர் ரேவை தற்காலிகமாக ரிலீஸ் செய்தது. அதற்கு பின் அவர் ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொண்டார் . சினிமா வாய்ப்புகள் அதிகம் வருவதால் , ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் வழியாக அறிவித்தார்.
#3 பெய்ஜ் ( Paige )
பெண்கள் சாம்பியன்ஷிப்பை முதன்முதலில் வென்று பெண்கள் ரெஸ்லிங்கின் பொற்காலத்தை தொடங்கி வைத்தவர் பெய்ஜ். 2014-இல் தன் WWE கரியரை தொடங்கிய பெய்ஜ் இளம் வயதிலேயே WWE டீவாஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய பெருமையை பெற்றார். தன் கரியரின் உச்சத்தில் இருந்த பொழுது சொந்த வாழ்க்கையில் சந்தித்த சில சிக்கல்களால் தொடர்ந்து சாதிக்க இயலவில்லை. 2017-இல் மீண்டும் ரெஸ்லிங்கில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். மேன்டீ ரோஸ் ( Mandy Rose) மற்றும் டான்யா நெவில் ( Danya Neville ) ராவில் சாதிக்க உறுதுணையாக இருந்தார். சில மாதங்களுக்கு பிறகு , ரசிகர்களின் முன் உணர்ச்சிப் பூர்வமான ஒரு உரையாற்றி காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
#2 ஜீன் ஸ்னிட்ஸ்கீ ( Gene Snitsky )
21-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் WWE- இன் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் ஜீன் ஸ்னிட்ஸ்கீ. மான்ஸ்டர் கதாபாத்திரத்தில் நிறைய ஜாம்பவான்களோடு போட்டியிட்டுள்ளார். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அவர் கரியர் முழுவதும் ஒரு WWE சாம்பியன்ஷிப் கூட வெல்லவில்லை. 2008-இல் அவரின் விருப்பபடியே WWE- இல் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். அதற்கு பின், டீ.என்.ஏ(TNA ) மற்றும் பல ரெஸ்லிங் கம்பெனிகளில் முக்கிய கேரக்டர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவ்வருட ஜூன் மாதத்தில் ஒரு இண்டர்வியூவில் ரெஸ்லிங்கில் இருந்து விடைப் பெறுவதாக அறிவித்தார்.
#1 என்சோ அமோரே ( Enzo Amore )
தன் பேச்சிலேயே ரசிகர்களை ஈர்க்கும் திறமை கொண்டவர் , என்சோ அமோரே. ஆனால் ஜனவரியில் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், அவரது கான்ட்ராக்டை WWE கேன்சல் செய்தது. அதற்கு பின் அவர் மீண்டும் ரெஸ்லிங் செய்யும் ஆசை இல்லை என பல இண்டர்வியூகளில் கூறியுள்ளார். இருந்தும் பல ரெஸ்லிங் கம்பெனிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வைவர் சீரியஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அவர் மைக்கை எடுத்த பேச முயன்ற பொழுது செக்யூரிடி அவரை ஸ்டேடியத்தில் இருந்து அவரை வெளியேற்றினார். இவ்வாறு நடந்த பிறகு , அவர் மீண்டும் WWE- இல் காலடி எடுத்து வைப்பது கடினமான ஒரு விஷயம்.
எழுத்து: பிலிபா மேரி
மொழியாக்கம்: அஜய்