பொதுவாக WWE போட்டிகளில் ஆண்களுக்கான போட்டிகள் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும். இதனாலே ராவ் நிகழ்ச்சியில் கூட 10 ஆண்களுக்கான போட்டிகள் நடத்தப்படும் வேளையில் ஒன்று அல்லது இரண்டு மகளீர் போட்டிகளே நடத்தப்படுகின்றன. அப்போதைய காலகட்டங்களை காட்டிலும் தற்போது மல்யுத்த போட்டிகளிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. ஆரம்பத்தில் ஒரு சில பெண் போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏறத்தாழ 50 பெண் போட்டியாளர்கள் வரை இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொள்ளும் அணைத்து வீராங்கனைகளுக்கு மக்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. ஒரு சில வீராங்கனைகள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெறுகின்றனர். அப்படி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற பெண் போட்டியாளர்களுள் ஒருவர் தான் பேய்ஜ்.
இவர் சமீபத்தில் தான் தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலை தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றியினையும் தெரிவித்தார் இவர். பேய்ஜ் ஆரம்பத்தில் NXT போட்டிகளில் அறிமுகமாகி பின்னரே WWE நிகழ்ச்சியில் இடம் பெற்றார். சமீபகாலமாக போட்டிகளில் பங்கேற்காத இவருக்கு கழுத்தில் அடிபட்டு சிகிச்சை நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இவரை பற்றி நமக்கு தெரியாத தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#4) பேய்ஜ்-ன் நிர்வாகங்களை கவனித்து கொள்பவர் பெக்கி லிஞ்ச்
WWE சூப்பர் ஸ்டாராக விளங்கி வந்த பேய்ஜ் தன் சக வீராங்கனையான பெக்கி லிஞ்ச் மூலம் தனது நிர்வாகங்களை கவனித்து கொள்கிறார். இவர் ஆரம்ப காலங்களில் ரெபேக்கா க்னோஸ் என்ற பெயரில் பேய்ஜ் மற்றும் அவரின் தாயார் சரயா க்னைட் ஆகியோரின் நிர்வாகங்களை கவனித்து கொண்டார். அதன் பின்னர் பேய்ஜ் மற்றும் பெக்கி லிஞ்ச் இருவரும் WWE-ல் NXT நிகழ்ச்சிக்காக ஒன்றாக கையெழுத்திட்டனர். இவர்களின் கூட்டு முயற்சியால் பேய்ஜ் WWE டிவாஸ் சாம்பியன் பெல்டினை தக்கவைத்து கொண்டார்.
#3) பேய்ஜ் தனது முதல் முயற்சியில் WWE நிகழ்ச்சிக்கு தேர்வாகவில்லை
பேய்ஜ் பல முறை முயற்சித்து அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு WWE நிர்வாகத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்க்கு முன்னரே இவர் 2010 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முயற்சி செய்தார். ஆனால் அவரால் அப்போது நிலைத்து நிற்க முடியவில்லை. 2010-ல் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற WWE தேர்வில் பேய்ஜ் கலந்து கொண்டார். அதில் இவரால் பெரிதாக சாதிக்க முடியாததால் அவரின் கனவு தகர்ந்தது. இருந்தாலும் விட முயற்சியுடன் மீண்டும் கலந்து கொண்ட இவர் WWE நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் படி இவர் NXT போட்டிகளில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அறிமுகமான முதலாவது போட்டியில் சரயா என்ற தனது உண்மையான பெயரில் களமிறங்கினார். அதன் பின் 2011 ஆம் ஆண்டு இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு தனது பேய்ஜ் மாற்றிக்கொண்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு WWE நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் உரிமத்தை பெற்றார் இவர்.
#2) பிறப்பதற்கு முன்பாகவே மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றவர் பேய்ஜ்
பேய்ஜ் இங்கிலாந்து நாட்டில் மிகவும் புகழ் பெற்ற க்னைட் வம்சாவழி குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது குடும்பம் தலைமுறை தலைமுறையாக மல்யுத்தத்தை வியாபார ரீதியாக செயல்படுத்தும் குடும்பம். இவரின் தயார் சரயா க்னைட் இங்கிலாந்து நாட்டில் மிகவும் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனை. இவரின் தாயார் கர்ப்பமாக இருக்கும் போது கூட பல மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் பிறப்பதற்கு முன்னரே மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுகிறார் பேய்ஜ். இவரின் சகோதரர் கூட இந்த மல்யுத்த நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். பேய்ஜ் மல்யுத்த போட்டிகளில் மிகவும் சிறிய வயதிலேயே பங்கேற்க துவங்கி விட்டார். அதில் பல காயங்களுடன் கற்று தேர்ந்த இவர் ப்ரோ மல்யுத்த போட்டிகளிலும் தற்போது கலக்கி வருகிறார்.
#1) பேய்ஜ் தனது முதல் ப்ரோ மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் போது அவரின் வயது 13
பேய்ஜ் தனது 10 வயது முதலே மல்யுத்த போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் அவர் இதனை விரைவாக கற்று கொண்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கற்று தேர்ந்த இவர் தனது 13 வயதிலேயே ப்ரோ மல்யுத்த போட்டிகளில் அறிமுகமாகி விட்டார். முதல் போட்டியில் கலந்து கொள்ளும் போது இவர் பிரிட்டானி க்னைட் என்ற ரிங் பெயருடன் களமிறங்கினார். 2011-ல் WWE நிகழ்ச்சிக்கு இவர் கையெழுத்திடும் வரை இந்த ப்ரோ மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்தார்.