ராயல் ரம்பில்ஸ்-ல் இதுவரை விளையாடி வெற்றி பெறாத பிரபலமான ஐந்து மல்யுத்த வீரர்கள்.

Nagaraj
ராயல் ரம்பில்ஸ்
ராயல் ரம்பில்ஸ்

2019 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் WWE போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டியான ராயல் ரம்பில்ஸ் ஆனது இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது, அதற்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய போட்டிகளைக்கொண்ட ரெஸ்டில் மேனியா தொடங்குவதற்கு மிக நெருக்கமாக இருக்கின்றோம். இதுவரை நடைபெற்ற பெரிய போட்டியான ராயல் ரம்பில்ஸ்-ல் விளையாடி வெற்றி பெற்றவர்கள் ரெஸ்டில் மேனியா வாழ்க்கை-யில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த WWE- யில் விளையாடிய குறிப்பிட்ட சில மல்யுத்த வீரர்களில் ராயல் ரம்பில்ஸ்-ல் தனக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. இந்த மல்யுத்த வீரர்களில் ஐந்து முக்கியமான மல்யுத்த வீரர்களை பற்றி இங்கு காண்போம்.

# 5. சி. எம். ஃபங்க்

சி. எம். ஃபங்க்
சி. எம். ஃபங்க்

இவர் WWE-ல் 2000 -2014 -களில் தனது தொழில்துறை மல்யுத்த வாழ்க்கை- யில் சிறந்தவராக விளங்கினார். இவர் மல்யுத்த வாழ்க்கை- யில் மூன்று முறை வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார் மற்றும் WWE சாம்பியன்ஷிப்பை இரண்டு முறையும், டேக் டீம் சாம்பியன்ஷிப்பை கோபி கிங்ஸ்டன் உடன் இணைந்து ஒரு முறை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, WWE சாம்பியன்ஷிப்பை கடைசியாக 434-நாட்கள் வரை தக்க வைத்துக்கொள்ளார். இருப்பினும், இவர் இதுவரை விளையாடியுள்ள மிகப்பெரிய மல்யுத்த போட்டிகளில் ஒன்றான ராயல் ரம்பில்ஸ்-ல் ஒரு முறை கூட வென்றதில்லை. ஆனால், இவர் தோற்றதற்க்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. ஆகையால், இவர் இந்த பட்டியலில் 5- வது இடத்தில் உள்ளார்.

# 4. சித்

சித்
சித்

இவர் WWE தோன்றுவதற்கு முன்பே WCW மற்றும் WWF ஆகிய மல்யுத்த போட்டிகளில் விளையாடி உள்ளார். WCW, WWF மல்யுத்த வாழ்க்கையில் WCW போட்டிகளில் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை ஒருமுறையும், வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் வென்றுள்ளார். WWF போட்டியில் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் வென்றுள்ளார். இவர் WWE-ல் நுழைந்த பிறகு ஆறு முறை WWE சாம்பியன்ஷிப்பை வென்றார். ஆனால், இவர் ராயல் ரம்பில்ஸ்-ல் களம் கண்ட பிறகு ஒரு முறை கூட வென்றதில்லை. ஆகையால், இந்த பட்டியலில் இவர் 4-வது இடத்தை பிடிக்கிறார்.

# 3. கிறிஸ் ஜெரிக்கோ

. கிறிஸ் ஜெரிக்கோ
. கிறிஸ் ஜெரிக்கோ

“Y2J” என்று அழைக்கப்படும் கிறிஸ் ஜெரிக்கோ தனது மல்யுத்த வாழ்க்கையில் மிகப்பெரிய நிறுவனங்களான WWF, WCW மற்றும் WWE -களில் நிறைய போட்டிகளில் பங்கேற்றார். ஆனால், இதுவரை இவர் பங்கேற்றுள்ள ராயல் ரம்பில்ஸ்-ல் போட்டிகளில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மிகச் சிறந்த தொழில்துறை மல்யுத்த வீரராவார். இவர் இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது WWE-க்கு போட்டியாக உருவான AEW நிறுவனத்தில் களம் கானவிருக்கின்றார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

# 2. ராண்டி சாவேஜ்

ராண்டி சாவேஜ்
ராண்டி சாவேஜ்

இவர் மிகச் சிறந்த தொழில்துறை மல்யுத்த வீரராவார். தனது மல்யுத்த வாழ்க்கையில் 32- வருடத்தில் 29- முறை பெரிய போட்டிகளில் வென்றுள்ளார். ராயல் ரம்பில்ஸ்-ல் வெற்றி பெறுவது இவரது கனவாகவே மாறியது. ஆகையால், இந்த பட்டியலில் இவர் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

# 1. கர்ட் ஆங்கிள்

கர்ட் ஆங்கிள்
கர்ட் ஆங்கிள்

இவர் தற்போது WWE RAW-ல் ஜெனரல் மேனேஜர் ஆக உள்ளார். தனது மல்யுத்த வாழ்க்கையில் அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.இதுவரை இவர் ராயல் ரம்பில்ஸ்-ல் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதே இல்லை.