2019-ஆம் ஆண்டில் கலக்கப்போகும் 5 WWE சூப்பர் ஸ்டார்கள்

சேத் ரோல்லின்ஸ்
சேத் ரோல்லின்ஸ்

கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரோமன் ரெய்ங்ஸ், திடீரென்று விலகியதால் WWE போட்டிகள் விறுவிறுப்பின்றி களையிழந்து காணப்படுகின்றன. அவரின் உச்சத்தை வேறு எந்த ஒரு வீரராலும் தொடர முடியவில்லை. WWE நிர்வாகமும் அவரைப் போலவே, மக்களின் செல்வாக்கு பெற்ற வீரரை உருவாக்க பல உத்திகளை கையாண்டு வருகிறது.

தற்பொழுது WWE நிர்வாகமானது, ஒரு தனி வீரரை பிரபலமடைய வைப்பதைவிட, WWE ஒரு லாபம் தரும் பிராண்டாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. மக்களிடையே WWE மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல முயற்சிகளை செய்து வருகிறது நிர்வாகம்.

2019ஆம் ஆண்டு WWE-க்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல இளம் சூப்பர் ஸ்டார்கள் ஜொலிக்க காத்திருக்கின்றனர்.

இத்தொகுப்பில் அவ்வாறு 2019 ஆண்டில் ஜொலிக்க காத்திருக்கும் 5 வீரர்களைப் பற்றி காண்போம்.

#5. டேனியல் பிரையன்

டேனியல் பிரையன்
டேனியல் பிரையன்

2018ம் ஆண்டின் மிக வெற்றிகரமான WWE வீரராக டேனியல் பிரையன் விளங்குகிறார். இவர் “ஹீல்ஸ்” எனப்படும் வில்லன் கதாபாத்திரத்தை போன்று WWE போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இந்த முடிவானது தற்போது களையிழந்து காணப்படும் போட்டிகளை மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த டேனியல் பிரையன், தனது WWE வாழ்க்கையின் திருப்புமுனையாக (ஹீல்ஸ் ) இம்முடிவு அமைந்துள்ளது. இவ்வாறு கெட்ட கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்படுவதால் பல போட்டிகளில் வெற்றியை எளிதாகச் சுவைத்துள்ளார்.

அவர் தற்போது வலம்வரும் வேகத்திலேயே தன்னை அடுத்த ஆண்டும் ஈடுபடுத்திக்கொண்டால், அசைக்கமுடியாத வீரராக வலம் வருவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இவரின் உடற்தகுதி அவ்வப்போது சற்று மந்தமாக இருப்பது வழக்கம். எனவே தன்னை பிட்டாக வைத்துக்கொண்டால் அடுத்த ஆண்டு ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

#4. பெக்கி லிஞ்ச்

பெக்கி லிஞ்ச்
பெக்கி லிஞ்ச்

கேரியரின் திருப்புமுனையாக பல வீரர்கள்/வீராங்கனைகள் தங்களை தவறாக சித்தரித்து கொள்வது வழக்கம். அவ்வாறு தற்போது வில்லியாக வலம் வரும் பெக்கி லிஞ்ச் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் ஸ்மாக்டவுன் பெண்களுக்கான டைட்டில் போட்டியை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த டைட்டிலை TLC போட்டியில் இழந்தும் இருந்தார்.

WWE நிர்வாகம் இவருக்காக பல திட்டங்கள் வகுக்கும் என்று தெரிகிறது. இவர் அசைக்க முடியாத ரோண்டா றொவ்ஸியை எதிர்வரும் WRESTLEMANIA 35-ல் எதிர்கொள்ள இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.

WRESTLEMANIA-வில் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட பெண்களுக்கான WWE பிரிவில் பல உச்சங்களைத் தொட தயாராகி வருகிறார் பெக்கி லிஞ்ச். அவரது புகழ் WWE ரசிகர்களுக்கு கூடிய விரைவில் தெரியவரும் என்று பலரும் கூறி வருகின்றன. பெண்களுக்கான WWE-ல் ஜாம்பவானாக திகழும் சார்லோட் ஃபிளேரை இவர் பின்னுக்குத் தள்ளுவார் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கான WWE பிரிவில், பெக்கி லிஞ்சை சுற்றி கதைக்களம் WWE நிர்வாகம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#3 ட்ரூ மக்இன்டயர்

ட்ரூ மக்இன்டயர்
ட்ரூ மக்இன்டயர்

ட்ரூ மக்இன்டயர் பலரின் மனம் கவர்ந்த ஆட்டக்காரராக பார்க்கப்படுகிறார். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் WWE போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். இந்த மாதம் இரு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும் ஒரு வலிமை மிக்க வீரராக இவர் பார்க்கப்படுகிறார்.

WWE நிர்வாகமும் இவரை பெரிய போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் பல முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் இவரை வில்லனாக்க WWE பல உத்திகளைக் கையாளும் என்று தெரியவருகிறது. அவ்வாறு இவர் வில்லனாக கதைகளத்தில் அமையப் பெறுமாயின் பல உச்சங்களைத் தொடுவார் என்று கூறலாம்.

ஒரு சிறந்த வீரருக்கான அனைத்து தகுதிகளும் இவரிடம் இடம்பெற்றிருக்கிறது, கட்டான உடலமைப்பும், சிறந்த பேச்சு திறமையும், போர் வீரரின் பார்வையும் இவரை வலிமையாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவர் அடுத்த ஆண்டு WWE சாம்பியனாக உருவெடுப்பார் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் பரவி வருகின்றன. இவர் ஸ்மாக்டவுநிற்கு இடம் மாறினால், பல உச்சங்களைத் தொட உதவும்.

#2. ரோண்டா றொவ்ஸி

 ரோண்டா றொவ்ஸி
ரோண்டா றொவ்ஸி

WWE வின் நம்பிக்கை நட்சத்திரமாக ரோண்டா றொவ்ஸி விளங்கி வருகிறார். ப்ரோ ரஸ்டலிங் முறையில் இயற்கையாகவே பல ஆற்றல்களை கொண்டிருப்பவர் ரோண்டா றொவ்ஸி.

ஆட்ட வளையத்திற்குள் சென்றால், எதிராளி எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும் அவரை துவம்சம் செய்யும் ஆற்றல் படைத்தவர் ரோண்டா றொவ்ஸி. அவரது உடல் வலிமை, மற்றும் சுறுசுறுப்பான அசைவுகள் எதிராளியை திகைக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சு மற்றும் குணாதிசியத்தில் சற்று பின்னடைவை பெற்றிருந்தாலும், அதை விரைவாக ரோண்டா றொவ்ஸி சீர்திருத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WRESTLEMANIA 35-இல் பல தலைப்புச் செய்திகளை இவர் உருவாக்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

2018ம் ஆண்டு இவருக்கு சிறப்பாக அமைந்து இருந்தாலும், அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக அமையப்பெறும் என்றே கூறலாம்.

#1. சேத் ரோல்லின்ஸ்

சேத் ரோல்லின்ஸ்
சேத் ரோல்லின்ஸ்

பெக்கி லிஞ்சிற்கு முன்பாகவே ரோல்லின்ஸ் WWE-வின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ரோமன் ரெய்ங்ஸ் விலகிய பிறகு WWE-வின் நட்சத்திரமாக சேத் ரோல்லின்ஸ் விளங்குவார் என்ற ஒருமித்த கருத்து ரசிகர்கள் இடையே நிலவி வந்தது.

கடந்த இரு வருடங்களில் WWE போட்டிகளில் “பேபிபெஸ்” எனப்படும் நல்ல விதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கரம் பிடித்தவர் ரோல்லின்ஸ். இவர் ஒரு முழு பேக்கேஜாக விளங்குவது WWE-விற்கு தனி சிறப்பு. ரோமனும் தற்போது இல்லாததால் அவரின் இடத்தை நிரப்ப வல்ல வீரராக ரோல்லின்ஸ் பார்க்கப்படுகிறார்.

ரோல்லின்ஸ் WRESTLEMANIA-35-இல் ப்ராக் லெஸ்னருக்கு எதிராக களம் காணுவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வாறு போட்டி நடைபெற்று, அதில் ரோல்லின்ஸ் வெற்றி கண்டால் WWE-வின் முன்னணி நட்சத்திரமாக வளம் வருவார்.

2019 ஆம் ஆண்டின் WWE -வின் முகமாக இவர் திகழ்வார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.