WWE-வின் மிகப்பெரிய நிகழ்ச்சியான ரஸில்மேனியா 35தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. டபிள்யூ டபிள்யூ ஈ நிர்வாகமும் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த பல உத்திகளைக் கையாளும் என்று தெரிகிறது.
ரஸில்மேனியா போட்டிகளுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதுவரை போட்டிகள் குறித்து ஒரு தெளிவான விவரம் ஏதும் WWE அறிவிக்கவில்லை.
WWE-வின் டாப் டைட்டிலுக்கான போட்டியாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, மேலும் பல சூப்பர் ஸ்டார்கள் ரஸில்மேனியாவில் பங்கேற்பதே சந்தேகமாக உள்ளது.
இன்னும் சில வாரங்களில் ரஸில்மேனியா 35-க்கான விவரங்கள் தெளிவாகிவிடும். WWE டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவ்வருட ரஸில்மேனியாவில் பெரும்பங்கு ஆற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் 5 சூப்பர் ஸ்டார்களை பற்றி இத் தொகுப்பில் காணலாம்.
#5.மேட் ஹார்டி
மேட் ஹார்டியின் தற்போதைய நிலை ஆனது அறியப்படாத மர்மமாகவே இருக்கின்றது.
அவரது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளின் அடிப்படையில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் காயம் அடைந்ததையொட்டி ஓய்வு எடுக்கிறார் என்று தெளிவாகியுள்ளது. சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தும் நோக்கில் சில பதிவுகளை போட்டு வருகிறார்.
மேட் ஹார்டி டபிள்யூ டபிள்யூ ஈ ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர். ஓய்வினை நோக்கி பயணிக்கும் மேட் ஹார்டிக்கு எதிர்வரும் ரஸில்மேனியாவே விடைபெற சிறந்த களமாக இருக்கும். WWE அவ்வாறு செய்தால் இவரை கௌரவப்படுத்தி பிரியாவிடை அளிக்கலாம்.
#4. ப்ரே வைட்
ப்ரே வைட் கடைசியாக WWE-வில் தென்பட்டது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம். அதிலிருந்து அவர் பெரிதாக தென்படவில்லை. ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது முரணான பதிவுகளை பதிவிட்டு வரும் வைட், WWE போட்டிகளில் எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமலேயே இருக்கிறார்.
வைட் குடும்பத்தை சேர்ந்த ஏரிக் ரோவன் தற்போது டேனியல் பிரையனுடன் சேர்ந்து டேக் இணையாக வலம் வருகிறார். எதிர்வரும் ரஸில்மேனியாவில் டேனியல் பிரையன் மற்றும் வைட் போட்டியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்ட இவ்விரு வீரர்கள் ஒரே வளையத்தில் சண்டையிட்டால் களத்தில் ஆக்ரோஷ மிக்க அசைவுகள் இடம் பெறுவது நிச்சயம்.
#3. கெவின் ஓவன்ஸ்
கெவின் ஓவன்ஸ் WWE போட்டிகளுக்கு திரும்புவார் என்று கடந்த வருடம் இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் அவரது கம் பேக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சில முன்னோட்டங்களில் அவர் தென்பட்டாலும் உறுதியாக அவர் எப்போது போட்டிகளில் திரும்புவார் என்ற கேள்வி வலுக்கிறது.
ஓவன்ஸ் காயத்திற்கு முன்பு அவரது கேரியரில் மோசமான நாட்களை சந்தித்து வந்தார். கடந்த சம்மரில் பிரவுன் ஸ்ட்ரோமனின் அடிதாங்கியாக இருந்த இவர், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தார்.
ஓவன்ஸ் தன் தகுதிக்கேற்ப தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் எதிர்வரும் ரஸில்மேனியா ஓர் சிறந்த வாய்ப்பாக இருக்கும். இவரை சீரமைத்துக் கொள்ள WWE நிர்வாகமும் இவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.
#2. பாடிஸ்டா
WWE-இன் முந்தைய திட்டத்தின்படி பாடிஸ்டா ட்ரிபிள் ஹெச்சுடன் போட்டியிடுவதாக இருந்தது. ட்ரிபிள் ஹெச் காயமடைந்ததால் இப்போட்டி நடைபெறுவது சந்தேகமே. இவ்விரு வீரர்களும் கடந்த வருடம் நடைபெற்ற ஸ்மாக்டவுனின் 1000 நிகழ்ச்சியில் பங்கேற்று வார்த்தைகளை பரிமாறிக் கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.
ட்ரிபிள் ஹெச்சின் தற்போதைய நிலை அறியப்படவில்லை எனவே அவர் பூரண குணம் அடைந்து ஏற்ற உடற்தகுதியுடன் போட்டிகளுக்கு திரும்பினால் பாடிஸ்டா உடன் களம் காணலாம்.
#1. ஜான் ஸினா
டேனியல் பிரையனாக இருந்ததாலும் சரி அண்டர்டேக்கராக இருந்தாலும் சரி ஜான் ஸினா இல்லாமல் ரஸில்மேனியா நிறைவேறாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல வருடங்களாக WWE-வின் முக்கிய வீரராக ஜான் ஸினா விளங்கி வருகிறார்.
ஆனால் கடந்த காலத்தைப் போன்று தற்போது WWE-வில் சொல்லிக்கொள்ளும் வகையில் வீரர்கள் போட்டியிடுவதில்லை. தற்போது பகுதிநேர போட்டியாளர்களே பெரும்பாலும் இருக்கின்றன.
WWE-வின் நட்சத்திரமாக இருந்த ரோமன் ரெய்ங்ஸ் இல்லாததால் இவ்வருட ரஸில்மேனியா களையிழந்து காணப்படும். மேலும் அண்டர்டேக்கர் விளையாடுவதும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பல வருடங்களாக நட்சத்திர நாயகனாக திகழ்ந்து வரும் ஜான் ஸினாவை எதிர்வரும் ரஸில்மேனியாவில் களமிறக்கினால் WWE கம்பெனிக்கு ஒரு கூடுதல் பலமாக இது அமையும்.