WWE-இல் பலதரப்பட்ட டேக் அணிகள் உள்ளன. எடுத்துக்காட்டிற்க்கு நியூ டே, ரிங்கிற்குள் புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுக்காமலும் ஆடுவர். அதே போன்று ரிங்கிற்கு வெளியிலும் மூன்று பேர் கொண்ட நியூ டே அணி தங்களின் நட்பை வெளிப்படுத்துவார்கள்.மது விடுதிகளில் மற்றும் இதர தனியார் இடங்களில் ஒன்றாகப் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பார்கள்.
அதே போன்று "DX" அணியும் அக்காலத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு அணியாக இருந்தது. சில பல காரணங்களால் அவ்வணி பிளவுபட்டது. இவ்வணி ட்ரிபிள் ஹேய்ச் மற்றும் ஷான் மைக்கேல்ஸ் ஆகிய சூப்பர் ஸ்டார்களை உட்கொண்டிருந்தது.
இக்காலத்தில் உள்ள பெரும்பான்மையான டேக் இணைகள் நிஜத்திலும், ரிங்கிற்குள்ளும் நல்ல நட்பினை பறைசாற்றுவது வழக்கம். உதாரணம் "தி ஷியில்டு" பல காரணங்களால் பிளவுபட்டாலும் மீண்டும் ஒன்றாக வலம் வருகின்றனர். இவர்கள் ஒன்று கூடினால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
அதுவே அக்காலத்தில் இருந்த வீரர்களின் நட்பு பெரும்பாலும் ரிங்கிற்குள் மட்டுமே இருந்தது, நிஜவாழ்கையில் முரணாக இருந்தனர்.
இப்பதிவில் ஒருவருக்கொருவர் நிஜ வாழ்க்கையில் முறைத்து கொண்டாலும் ஒன்றாக இணைந்த டேக் இணைகளை பற்றிப் பார்ப்போம்.
#5. மார்ட்டி ஜெனட்டி மற்றும் ஷான் மைக்கேல்ஸ்
80-களில் ஷான் மைக்கேல்ஸ் மற்றும் மார்ட்டி ஜெனட்டி பல நிறுவனங்களுக்கு (AWA மற்றும் NWA) விளம்பர தூதராக இருந்து வந்தனர். இருந்தபோதும் 1988-1991 ஆகிய இடைப்பட்ட காலத்தில் wwe-வின் மூலமாக மக்களால் வெகுவாகக் கவரப்பட்டனர்.
“தி ராக்கர்ஸ்” என்று அழைக்கப்பட்ட இந்த ஜோடி மக்களால் கவரப்பட்ட ஜோடியாக அந்த மூன்று ஆண்டுகள் (1988-1991) இருந்து வந்தது. அதன் பிறகு அவர்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. 1992-ஆம் ஆண்டு wwe நிகழ்ச்சியில் இவர்களது நட்பு முழுவதுமாக முடிவுக்கு வந்தது.
இவர்கள் இணையாக இருந்த கடைசி காலகட்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இவர்களைத் தனிமைப்படுத்தியது. குறிப்பாகப் பிரபல குத்துச்சண்டை வீரரான ரோடி பைபர், ஷான் மைக்கேல்ஸ் வருங்காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என்று புகழாரம் சூட்ட அக்கருத்து ஜெனட்டிற்கு எரிச்சலை உண்டாக்கியது.
மேலும் வின்ஸ் மக்மஹோன் இருவரையும் WCW உடன் இணைந்து கொள்ள ஒப்புக்கொண்டபோது, மைக்கேல்ஸ் மறுத்து, நாங்கள் பிரிவது தான் ஜெனட்டியின் யோசனை என்று பிரிவினையை வகுத்தார்.
அதுவே இவர்களின் பிரிவிற்கு வித்திட்டது.
#4. தஜிரி மற்றும் வில்லியம் ரீகள்
இப்பதிவில் உள்ள வேற்று இணைகளின் பிரிவைப் போல இவ்வணியின் பிரிவை உற்று நோக்க முடியாது (எங்களின் தனிப்பட்ட கருத்து).
2017-ஆம் ஆண்டு ஒரு wwe நிகழ்ச்சியில் ரீகள் கூறியதாவது “நான் தஜிரியை முழுமனதாக வெறுத்தேன்” என்று அவர்கள் டேக் டீம் சாம்பியனாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.
ஜப்பானை சேர்ந்த தஜிரி காரில் செல்லும்போது ரிகளின் பாட்டுகளை அறவே வெறுப்பார். எனவே அவர் இதன் காரணமாகவே உன்னை வெறுக்கிறேன் என்று ரீகளிடம் கூறுவார்.
இது ஒரு விளையாட்டுத்தனமான சண்டையாக இருந்தாலும் wwe பதிவிட்ட இந்த வீடியோவில் எது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
#3. ரேண்டி சாவேஜ் மற்றும் ஹல்க் ஹோகன்
எண்பதுகளின் கடைசிகளில் “மசோ மேன்” என்று அழைக்கப்பட்ட ரேண்டி சாவேஜ் மற்றும் ஹல்க் ஹோகன் மிகவும் பிரபலமான wwe சூப்பர் ஸ்டார்களாக விளங்கினர்.
மிகவும் முக்கிய ஆட்டக்காரர்களாக இவர்கள் பார்க்கப்பட்ட நிலையில் 1988 சும்மர்ஸ்லாமில் “தி மெகா பக்ஸிற்கு” எதிராக இவர்கள் களம் காண இருந்த நிலையில் இவர்களின் நட்பு முறிந்து போனது. இதுவே wrestlemania ஐந்தில் இவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட வித்திட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு, வெறும் நிகழ்ச்சிகளில் தென்பட்ட இவர்களின் மனக்கசப்பு நிஜவாழ்க்கையிலும் தொடர்ந்தது. மேலும் சாவேஜின் "Be A Man" என்னும் ஆல்பத்தில் ஹல்க் ஹோகனை கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு பாடல் இடம்பெற்றது.
மிகப் பிரபலமான இந்த ஜோடியின் மனக்கசப்பு ராண்டி மறைந்த (அதாவது 2011 ஆம் ஆண்டு) ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முடிவு பெற்றதாக, 2016 ஆம் ஆண்டு சவேஜின் தம்பியான லென்னி போப்போ கூறினார்.
#2.டோனி அட்லஸ் மற்றும் ராக்கி ஜான்சன்
Wwe “Hall Of Fame” என்னும் புகழ் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த ஜோடி முதல் கருப்பர் வெல்லும் இணை சாம்பியனாக “wwe tag team champion” நவம்பர் 1983 ஆம் ஆண்டு உருவெடுத்தது.
2018 ஆம் ஆண்டு டிவி நேர்காணலில் அட்லஸ் கூறியதாவது “நானும் ஜான்சனும் நண்பர்களாக இருந்ததே இல்லை” என்னும் அதிர்ச்சிகர தகவலைத் தெரியப்படுத்தினார். லாக்கர் ரூமில் பலமுறை நாங்கள் சண்டையிட்டுருக்கின்றோம் எனவும் கூறினார்.
பல காலமாக இந்த இணையிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதற்கு ஒரு முடிவே இல்லை போலும்.
#1. ஹார்ப்பர் மற்றும் ரோவன்
இப்பதிவை நான் மேற்கொள்ளும் காரணம் ஹார்ப்பர் தான். ஆம் ஹார்பரின் கருத்துக்கள் திரும்பிப் பார்க்க வைத்தது.
நானும் ரோவனும் ஆரம்ப காலத்திலிருந்தே நல்ல நட்பினை பறைசாற்றவில்லை என்னும் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார் ஹார்ப்பர்.
“The Budgeon Brothers” என்று அழைக்கப்படும் இவர்கள் 2012-ஆம் ஆண்டு இணைந்தபொழுது ஒருவருக்கொருவர் வெறுத்துள்ளனர். இருந்தபோதிலும் தங்களின் இணை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நட்பாக இருப்பது போல் நிகழ்ச்சிகளில் வேடமிட்டனர்.
அதன்பிறகு பிரே வ்யாட்டுடன் சேர்ந்து NXT இல் கால் பதித்தனர். இவர்களின் இணை “The Wyatt Family”என்று அழைக்கப்பட்டது. பின்னர் ரோவனும் ஹார்பரும் WWE முக்கிய பட்டியலில் “MAIN ROSTER” இடம் பெற்று ஜான் சீனாவுடன் மோதுவது போல் இவர்களின் ஆட்டத்தின் கதை திரும்பியது, அதுவும் Wrestlemania 30-இல்.
இவர்களின் மனக்கசப்பினால் தான், போட்டியில் தன் இணையைவிட தன் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு இருப்பதுனாலயோ என்னவோ இவர்கள் அசைக்க முடியாத அணியாக இன்றளவும் இருக்கின்றனர்.
எழுத்து :
டேனி ஹார்ட்
மொழியாக்கம் :
பாஹாமித் அஹமத்