வியப்பில் ஆழ்த்தும் ஐந்து விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் WWE-ன் சிறந்த நட்சத்திரங்கள்

Enter caption

WWE என்பது, பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் மல்யுத்த நிகழ்ச்சியாகும். அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிகழ்ச்சிக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அங்கு ஒரு மல்யுத்த வீரரின் வாழ்க்கை அவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிப்பது, காயங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, எப்போதும் விடுதிகளிலேயே தங்குவது என்று வேறொரு பரிணாமத்தில் இருக்கும்.

ஆனால் இந்த கஷ்டங்கள் அனைத்துமே அவர்கள் பெறும் பெரும் சம்பளத்திலும், வருடாவருடம் நடக்கும் WWE-ன் முக்கிய போட்டிகளில் சிறந்த வீரராக ஜொலிப்பதிலும், அவர்களுடைய நுழைவு இசை கேட்டவுடன் ஆர்ப்பரித்து கை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்கும் ரசிகர்களின் சத்தங்களிலும் ம(றை)றந்துவிடுகின்றன.

சரி இப்படி ‌இருக்கையில் இனி WWE -ன் மிக பிரபலமான நட்சத்திரங்களிடம் உள்ள விலையுயர்ந்த வினோத பொருட்களை பற்றி காண்போம்.

1. ஜான் ஸீனாவின் வியக்கவைக்கும் மாளிகை வீடு

WrestleMania எனப்படும் முக்கிய போட்டியில் ஜான் ஸீனா மகுடம் சூடிய பிறகு WWE-ன் முன்னனி வீரராக மட்டும் அல்ல அதன் முகமாகவே மாறினார். இதுவரை இவர் 16 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மேலும் WWE- வை தாண்டி சினிமாக்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது மற்றும் அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியான டோட்டல் டிவாஸ், டோட்டல் பெல்லாஸ் ஆகியவற்றை நடத்துவது என தன் வாழ்க்கையின் வட்டத்தை பெரிதாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பாவில் அமைந்துள்ளது இவரின் மாளிகை. இந்த இடத்தை தான் மல்யுத்த நட்சத்திரங்கள் பெரும்பாலும் தங்கள் வசிப்பிடமாக தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த வீட்டின் மதிப்பு சுமார் ஆறு மில்லியன் டாலர் ஆகும். இதற்கென்று தனி தொழில்நுட்பத்தினாலான தடுப்புச்சுவர் உள்ளது. காரணம் இவரின் வெறித்தனமான ரசிகர்களாம். மேலும் இங்கு தனி நடைப்பயிற்சி கழிப்பிடம், தனி எலிவேட்டர்(மின்த்தூக்கி), உலகின் விலையுயர்ந்த சிகரெட்டுகளோடு கூடிய புகை பிடிக்கும் அறை(ஆண்களுக்கு மட்டும்), மிகப்பெரிய நீச்சல் குளம், அதிநவீன உபகரணங்களை உள்ளடக்கிய உடற்பயிற்சி கூடம் மற்றும் நாம் அறிந்திராத உயர்ரக கார்களும் உள்ளன. ஒரு ஊருக்கே தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த வீட்டில் ஜான் ஸீனா மற்றும் அவரது மனைவி நிக்கி பெல்லா மட்டுமே வாழ்ந்து வந்தனர், ஆனால் தற்போது நிக்கியின் சகோதரி ப்ரி பெல்லா மற்றும் இவரது கணவரான மற்றுமொரு உச்ச நட்சத்திரம் டேனியல் பிரையன் இருவரையும் பல நிபந்தனை ஒப்பந்தங்களோடு அந்த மாளிகையில் இருக்க ஜான் ஸீனா அனுமதித்துள்ளார்.

2. ராக்கின் பனேரை லுமினோர் 1950 ஸப்மிர்சபில் வாட்ச்

Enter caption

சினிமா மற்றும் WWE இரண்டிலும் எப்போதுமே சாம்பியனான ராக்கின் கடிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தானியங்கி கடிகாரமான இது உயர்ரக நீல நிறக்கண்ணாடியால் ஆனது. மேலும் இதில் பீங்கான் மற்றும் டைட்டானியத்தால் ஆன பாகங்களும் உள்ளன. இது தானாகவே இருட்டில் ஒளிரும் திறன் கொண்டது. வாட்டர் ரிஸிஸ்டண்ட் கடிகாரமான இது தண்ணீருக்குள் 300 மீட்டருக்கு மேல் சென்றாலும் எதுவும் ஆகாது. இதனை ராக் தனது படங்களிலும் அணிந்திருப்பார். இதன் மதிப்பு சுமார் 6 லட்சத்தை தாண்டும்.

3. ஸ்டோன் கோல்டின் மான்ஸ்டர் ட்ரக் மற்றும் ப்ரோக்கன் ஸ்கல் ரான்ச் மாளிகை

Enter caption

WWE ல் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் வில்லன் ஸ்டான் கோல்ட் தான். அவர் எப்போதுமே "3:16" என்ற ராட்சத ட்ராக்கில் தான் வருவார். அதை வைத்து எதிரிகளின் கார்களை துவம்சம் செய்வார். அதை சொந்தமாக தனது மாளிகையில் காப்புரிமையோடு வைத்துள்ளார்.

ப்ரோக்கன்ப்ரோக்கன் ஸ்கல் ரான்ச் என்ற பெயர் கொண்ட இந்த மாளிகை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. மேலும் இது அமெரிக்காவின் அழகான நதியான நியூஸீஸ் ஆற்றுக்குப் பின்புறம் உள்ளது. இந்த மாளிகையில் ஐந்து குளங்களும், இரண்டு தானியக்களஞ்சியங்களும், ஒரு கிணறும், இரண்டு காற்றாலைகளும், ஒரு பிரம்மாண்டமான நீச்சல் குளமும் உள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவின் ஒரு ராணுவ அமைப்பான டீர்ஸூடன் சேர்ந்துள்ளது.

4. வின்ஸ் மெக்மானின் டைனோசரஸ் ரெக்ஸ் மண்டைஓடு

Enter caption

இது கேட்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் இதை WWE ன் நிறுவனர் வின்ஸ் மெக்மான் பணம் கொடுத்து வாங்கவில்லை அவரது மருமகனான ட்ரிபிள் எச் அவருக்கு பரிசளித்தது. ஆம் டைனோசர் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவர் இதை விருப்பப்பட்டு கேட்டதால் அந்த படக்குழுவிடம் இருந்து ஐந்தாயிரம் டாலருக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். புதிதாக WWE க்குள் வருபவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் போது போலி மண்டைஓடு என்றாலும் இது அவர்களை ஒருகணம் மிரட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

5. தி ராக்'ஸ் பால் ஸ்மித் PS871 சன்கிளாஸ்

Enter caption

இந்த வரிசையில் ராக்கின் அடுத்த விலையுயர்ந்த பொருள் அவரின் சன் க்ளாஸ் ஆகும். இதை அவர் அணிந்திருப்பது ஒன்றும் அவ்வளவு அரியது அல்ல. ஒருமுறை இதை அணிந்து கொண்டு மற்றொரு நட்சத்திரமான மிக் போலியின் முகத்திற்குப்பின்னால் ஒரு அடக்கமுடியாத காளையைப் போல வந்து நின்ற தருணம் WWE ன் சின்னமாகவே மாறியது. இது தற்போது ஆண் பெண் இருபாலருக்கும் தயாரிக்கப்படுகிறது.