Create
Notifications

காயமடைந்தபோதும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்த ஐந்து சிறந்த குத்துச்சண்டை வீரர்கள்

please don't try this at home!
please don't try this at home!
SENIOR ANALYST

குத்துச்சண்டை என்பது ஒரு 'பொய்' என்றே பலதரப்பட்ட மக்கள் மத்தியில் மனநிலையாக உள்ளது. ஆனால், இது அவ்வாறு இல்லை என்று கூறும் இந்த விளையாட்டின் தீவிர ரசிகர்கள் அறிந்திடாத விஷயங்கள் பல.சில வருடங்களின் இடைவிடாத பயிற்சியின் மூலம் களத்தில் கால் பதிக்கின்றனர் இந்தக் குத்துச்சண்டை வீரர்கள்.மேலும், அவர்கள் தக்க நகர்வுகள் அல்லது அசைவுகள்மூலம் தம்மாலும் பிறராலும் வரக்கூடிய இன்னல்களைக் களைகின்றனர்.

WWE-இன் கடும் பயங்கர வீரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தும் கூட, இன்றளவும் குத்துச்சண்டை வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை இழந்து களத்தில் போராடுகின்றனர்.

அவ்வாறு தங்களை வருத்திப் பற்பல காயங்கள் உண்டாணபோதிலும் ஆட்டத்தை இறுதிவரை கொண்டுசென்று தன் உடல் வலியையும் பொறுத்துக்கொண்டு தங்களின் ரசிகர்களுக்காகச் செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம்.

அந்தமாதிரியான காயங்கள் உள்ளபோதிலும் ஆட்டத்தில் ஆடியது, இவர்கள் தங்களது ரசிகர்கள்மீது வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது . இப்படி அடையாளம் காணப்பட்ட வீரர்களின் மேல் ரசிகர்கள் வைத்த பற்று அளவுக்கடந்தது.

இப்படி தங்களது வாய்ப்பை வீணடிக்காமல் எப்படிப்பட்ட காயங்கள் உடலில் ஏற்பட்டும் ஆட்டத்தின் இறுதி நொடிவரை தங்களது அயரார்ந்த அர்பணிப்பு உணர்வினாலும் தங்களது ரசிகர்கள்மேல் வைத்துள்ள பற்றாலும் முழு மூச்சையும் ஆட்டத்தில் செலுத்தி இறுதி வரை போராடி வென்றுள்ளனர். இது போன்ற மன தைரியம் படைத்த வீரர்கள் வாழ்வில் எப்பேற்பட்ட கஷ்டங்களையும் வலியையும் சந்தித்து உள்ளனர் என்பதை இங்குப் பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்களது வாழ்வின் உச்சகட்ட துயரத்தை எவ்வாறு வென்றனர் என்பதை பற்றியும் அதனை எவ்வாறு வெற்றிகளாக மாற்றினர் என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. . இங்கு கர்ட் ஏங்கல், ஹார்டு கோர் ஹோலி, பின் பேலர், மைக் ஃபோலி மற்றும் டிரிபிள் ஹெச் போன்ற வீரர்களைப் பற்றிய சோதனையைச் சாதனையாய் மாற்றிய கதையாகும்.

5.கர்ட் ஆங்கல் - சம்மர்ஸ்லாம் 2000

Kurt Angle in Summer Slam 2000
Kurt Angle in Summer Slam 2000

அனைவருக்கும் கடின போட்டியாளராக விளங்கியவர் கர்ட் ஆங்கல்.இவர் 1996ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கழுத்தில் படுகாயத்துடன் தங்க பதக்கம் வென்றார்.அதன்பிறகு, இவர் சிறந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரரானார்.WWE சாம்பியன் ஷிப்பிற்காக சம்மர்ஸ்லேம் 2000-இல் டிரிபிள் ஹெச் மற்றும் தி ராக்கை எதிர்கொள்ள ட்ரிபிள் திரேட் மேட்ச் ஆட நேரிட்டது.இந்த ஆட்டத்தில், வர்ணனையாளர்கள் மேஜையில் வைத்தே தாக்கப்பட்டார் மற்றும் மூளையில் ஏற்படும் ஒருவித பாதிப்புக்கு அவர் உள்ளாக்கப்பட்டார்.

டிரிபிள் ஹெச் மற்றும் தி ராக்கால் அந்த மேஜையின் மேல் இவரது தலையை வைத்துக் கனமாகத் தாக்கியதில் அந்த மேஜையே உடைந்தது.அந்த இரவு முதலே அவர் இருண்டுவிட்டதாகக் கருதப்பட்டது. இருப்பினும், அவர் டிரிபிள் ஹெச் மற்றும் மெக்மெஹோன் உதவியுடன் ஆட்டத்தை முடித்தார்.பலத்து காயம் ஏற்பட்டும் கூட இந்த மூவரின் செயல்பாடுகள் அனைவரும் நினைவுகூறக்கூடிய ஒரு ஆட்டமாக இது இருக்கிறது.

1 / 3 NEXT
Edited by Fambeat Tamil
Fetching more content...
App download animated image Get the free App now