2.ஹார்டுகோர் ஹோல்லி - ஸ்மேக்டவுன் 2002
90-களின் மற்றும் 2000-ஆம் ஆண்டு ஆரம்ப காலத்தில் படுபயங்கர வீரராக இருந்துள்ளார் ஹார்டுகோர் ஹோல்லி .இவரின் இறுதி காலத்தில் ஆட்டம் பலவற்றில் பல திறமையுள்ள இளம்படை ஆதிக்கம் செலுத்தியது. ஸ்மேக்டவுன் 2002 ஆட்டத்திற்கு முன்னர் ப்ராக் லெஸ்னர் என்னும் இளம் வீரரால் கைகலப்பில் ஈடுபட்டார்.ப்ராக் லெஸ்னர் இவருக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க விரும்பினார்.
ஒரு பவர்பாம்பை போல ஹோல்லியை ப்ராக் தூக்கி எறிந்தார். மேலும், ஒரு மணல்மூட்டைய போலத் தூக்கி இவரது கழுத்தை முறித்தார்.அவ்வாறு கடும் காயத்திற்கு ஹோலி உள்ளாகி இருந்தபோதிலும் ஆட்டத்தை முடித்து, F-5 என்னும் பினிஷெரின் முலமாக வென்றதின் மூலம் பட்டத்தை தட்டிச்சென்றார்.அப்படிப்பட்ட கடும் காயத்திற்கு உள்ளாகி ஆட்டத்தை இவர் வென்றதன் மூலம் ஒரு மிகச்சிறந்த போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
3.பின் பேலர் - சம்மர்ஸ்லேம் 2016
மெயின் ரோஸ்டரில் தனது அறிமுகத்திலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவரது முதல் ராவ் போட்டியிலேயே ரோமன் ரைன்ஸை வென்றதன் மூலம் சம்மர்ஸ்லேமில் நடைபெற்ற யுனிவர்செல் சாம்பியன் ஆட்டத்தின் செத் ரொலின்ஸூக்கே சவால் விடக்கூடிய வீரராக உருவெடுத்தார்.பின்னர் புரூக்லினிற்கு ஆடுதளத்திற்கு வருகை தந்த இவர் செத் ரோலின்ஸை வென்று அமர்க்களப்படுத்தினார்.ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோலின்ஸ் ரிங்கின் பக்கவாட்டில் வைத்த தாக்கிய ஒரு அடியில் இவரது தோள்பட்டை கிழிக்கப்பட்டது.
அந்த தோள்பட்டை வலியைப் பொறுத்துக்கொண்டு இறுதியில் ஆட்டத்தை வென்று முதல் யுனிவர்செல் சேம்பியன் ஆனார்.துரதிஷ்டவசமாக இவர் தனது அடுத்த ராவ் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.