4.மைக் ஃபோலி - ரிங்குகளின் கிங் 1998
மைக் ஃபோலி மற்றும் அண்டர் டேக்கர் 1998-இல் நடைபெற்ற "ரிங்குகளின் கிங்" (King of Ring ) போட்டியை இருவரும் இணைந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக படைத்தனர். கூண்டில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட மைக் போலி வர்ணனையாளர் மேஜையின் மேல் வீழ்ந்து அண்டர் டேக்கரால் தனது தோள்பட்டையை கிழித்துக் கொண்டார்.சிறிது சிறிதாக அந்த வீழ்ச்சியில் இருந்து வெளி வந்து கூண்டில் மேல் மீண்டும் ஏறினார்.
பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியபோது ஃபோலி கூண்டின் உள்ளே சோக்ஸ்லாமிற்கு உள்ளானார் . அந்த கூண்டின் கூரை உடைந்து ரிங்கின் மேல் வீழ்ந்தார் ஃபோலி. அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளனவா என கள நடுவரும் ஏஜென்டுகளும் உள்ளே இறங்கி பார்த்தனர்.இவர் தனது விலா எலும்புகள் உடைய கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டு பல காயத்துடன் களத்தில் கிடந்தார்.பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டபோதும் ஆட்டத்தின் இறுதிவரை நின்றார்.இதனாலே பலதரப்பட்ட ரசிகர்களாலும் இவர் இன்றளவும் மரியாதையை சம்பாதித்து வைத்துள்ளார்.
1. டிரிபிள் ஹெச் - ராவ் 2001
2000-களின் ஆரம்ப காலத்தில் டிரிபிள் ஹெச் தனது தொழில்முறை ஆட்டத்தின் உச்சத்தில் இருந்தார். இவர் WWE - இல் ஒரு சிறந்த வீரராக இருந்தார்.மேலும், இவர் தி ராக் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டினுக்கு எதிராக திறம்பட போரிடும் ஒரு வீரராக இருந்தார். 2001-ல் 'டூ மேன் பவர் டிரிப் 'இல் இவரும் ஆஸ்டினும் ஒரு சாம்பியன்ஸ் இணையாக இருந்துள்ளனர்.கிறிஸ் ஜெரிக்கோ மற்றும் கிறிஸ் பெனாய்ட்டுக்கு எதிராக ராவில் டூ மேன் பவர் டிரிப் இணை இழந்ததாக பதிவு செய்யப்பட்டது . ஆட்டத்தின் இடையில் டிரிபிள் ஹெச் பின்ஃபாலை உடைக்க நேரிட்டது. அதுவே அவர் ரிங்கில் நுழையும் முன்னர் அவரது உடலில் காயம் ஏற்பட காரணமாக அமைந்தது.
அவர் தனது குவாட்ரிசெப்சில் உள்ள எலும்பை உடைத்து கொண்டார். அப்படி கடும் காயங்கள் ஏற்பட்ட போதும் டிரிபிள் ஹெச் இறுதிவரை கிளிஸ் ஜெரிக்கோவிற்கு எதிரான அரணை உடைத்து வர்ணனையாளர் மேஜையில் வீழ்ந்தும் போராடினார்.இந்த ஆட்டமானது அனைத்து கால ராவ் போட்டிகளின் ஆகச்சிறந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் டிரிபிள் ஹெச் தனது ரசிகர்கள் மீது வைத்துள்ள அர்ப்பணிப்பு உணர்வையும் இது காட்டுகிறது.
எழுத்து :
ஜோர்டன் ஸ்டைன்ஸ்
மொழியாக்கம் :
சே.கலைவாணன்