என்ன கதை?
சில காலமாகவே ப்ரவுன் ஸ்ட்ரோவ்மனுக்கான திட்டங்களை WWE வகுத்துள்ளதா என்ற கேள்விகள் ரசிகர்களிடமிருந்து வந்தவண்ணம் இருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் முதலே இவருக்கான கதைக்களம் அமைக்கப்படாமல் காலம் தாழ்த்தி சென்று கொண்டிருந்தது WWE. ஸ்ட்ரோவ்மனும் இதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மூன்று வருடங்களாக இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல WWE தவறியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
நேற்று நடந்த ரா நிகழ்ச்சியில், ரஸ்ஸில்மேனியாவில் தான் பயன்படுத்தப் போகும் திட்டங்களைப் பற்றி ரசிகர்களுக்கு எடுத்துரைத்தார் ஸ்ட்ரோவ்மன்.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்...
ஒரு காலகட்டத்தில் ப்ரவுன் ஸ்ட்ரோவ்மன், WWE-வின் இரண்டாவது முக்கிய சூப்பர்ஸ்டாராக விளங்கி வந்தார். ரோமன் ரெய்ங்க்ஸுக்கு அடுத்தபடியாக ஸ்ட்ரோவ்மன் பெரிதாக பேசப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். பல்வேறு காரணங்களால் இவர் முக்கிய கட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இவர் WWE-வில் நல்ல இடத்தை அடைந்தபோதே இவருக்கான அங்கீகாரத்தை WWE அளித்திருக்க வேண்டும். ஆனால் WWE அதை செய்யத் தவறியதால் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்ட்ரோவ்மன்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு பெரும் பாதியில் WWE-வின் முக்கிய போட்டிகளான (மெயின் ரோஸ்டர்) போட்டிகளில் பெருமளவு பங்கு பெற்று வந்தார் ஸ்ட்ரோவ்மன். ஒரு கட்டத்தில் இவரின் வலிமைக்கு நிகரான சூப்பர் ஸ்டார்கள் WWE-வில் எவரும் இல்லை என்ற நிலை வந்தது.
பல்வேறு காரணங்களுக்காக, ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் ப்ராக் லெஸ்னர் ஆகியோரிடம் இவர் அடிபணியும் படி பல்வேறு போட்டிகளை அமைத்தது WWE. பிப்ரவரி 2019 வரை, ஸ்ட்ரோவ்மனை பின்செய்த வீரர்கள் ரோமன் மற்றும் லெஸ்னர் மட்டுமே. இதுவரை வேறு எந்த வீரரும் ஸ்ட்ரோவ்மனை பின் செய்ததே இல்லை.
கடைசியாக SNL-இன் கொலின் ஜொஸ்ட் மற்றும் மைகேல் சே ஆகியோரிடம் பகையை வளர்த்து வந்தார் ஸ்ட்ரோவ்மன்.
மையக் கருத்து.
கடந்த வாரம் நடைபெற்ற ரா நிகழ்ச்சியில், தனது புது பகைமையை வளர்த்துக்கொண்ட ஸ்ட்ரோவ்மன், எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் பங்கேற்கப் போவதாக ஆணித்தனமாக கூறியுள்ளார். “தி ஆண்ட்ரே தி ஜெயன்ட் மெமோரியல் பெட்டில் ராயல்” போட்டி நடைபெறும் ரஸ்ஸில்மேனியாவில் ஸ்ட்ரோவ்மன் பங்கேற்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது முறை.
இந்த போட்டியில் ஸ்ட்ரோவ்மனுக்கு எதிராக கொலின் ஜொஸ்ட் பல வியூகங்களை வகிப்பார் என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரோவ்மனின் முந்தைய கலப்பு இரட்டையர் இணை வீராங்கனை மற்றும் ரஸ்ஸில்மேனியாவின் தொகுப்பாளரான அலெக்சா ப்ளிஸ், ஸ்ட்ரோவ்மன் மற்றும் கொலின் தரப்பிற்கு இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுவரை WWE-வில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், ஸ்ட்ரோவ்மனுக்கு ரஸ்ஸில்மேனியா தொடங்கும் வரை எந்தவித போட்டியும் இருக்காது என்று தெரிகிறது.
அடுத்தது என்ன?
ப்ரவுன் ஸ்ட்ரோவ்மன் “தி பெட்டில் ராயல்” ரஸ்ஸில்மேனியா போட்டியில் வெல்லுவாரா என்பது தெரியவில்லை. அப்படி வெல்லாவிட்டாலும் ஸ்ட்ரோவ்மனின் வளர்ச்சியை யாரும் தடுக்க போவதில்லை.
ஸ்ட்ரோவ்மனின் திறமைக்கும் வலிமைக்கும் எதிர்வரும் காலங்களில் நல்ல போட்டிகள் அமைந்து ஒரு பெரிய கட்டத்துக்கு ஸ்ட்ரோவ்மன் செல்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.